சங்கீதா சந்தோஷம்
சங்கீதா சந்தோஷம் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | மேற்கத்திய பாரம்பரியம், சங்கீத நாடகம், ஜாஸ், நற்செய்தி, |
தொழில்(கள்) | நிகழ்த்தும் கலைஞர், மேடை நடிகை, பாடகர், இசைக்கலைஞர், |
இணைந்த செயற்பாடுகள் | ஈசான் நூரானி, நீசியா மஜோலி, சர் டேவிட் வில்ஹாக்ஸ், கெபா எரேமியா, சென்னை மியூசிக் அகதாமி |
இணையதளம் | [6] |
சங்கீதா சந்தோஷம் (Sangita Santosham) இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவப்பட்ட கலைஞர் ஆவார். மேற்கத்திய பாரம்பரிய இசை, சமகால ஜாஸ் முதல் தமிழ் பாடல்கள் உட்பட பலவகையான வகைகளை பாடிய பல்துறை, பன்மொழி பாடகராவார். இந்தியாவிலிருந்து முறையாக சங்கீத நாடகம் பயின்ற மிகச் சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.
சுயசரிதை
புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டையில் ஜூலியா சந்தோஷம் மற்றும் மருத்துவர் இரவி சந்தோஷம் ஆகியோருக்குப் பிறந்தார். தற்போது இவர்கள் சென்னையில் வசித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் [1] சென்னையின் சந்தோஷபுரம் காசநோய் சானடோரியம் மற்றும் நுரையீரல் மருத்துவமனையின் நிறுவனரும் மருத்துவருமான மதுரம் சந்தோஷத்தின் பெரிய பேத்தியாவார். தற்பொழுது சந்தோஷம் நெஞ்சக மருத்துவமனை, இவரது தந்தை மற்றும் மாமாக்களான மருத்துவர் இராஜன் சந்தோஷம், மருத்துவர் இராய் சந்தோஷம் ஆகியோரால் நடத்தப்படுகிறது. [2] சங்கீதா உளவியல் மற்றும் நடத்தை அறிவியல் ஆகிய துறைகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.
இசைப் பின்னணி
சங்கீதாவின் குடும்பம் இசையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதில் புகழ்மிக்க சென்னை மியூசிக் அகாதெமியின் இரண்டாவது தலைவராக இருந்த இவரது மறைந்த தாத்தாவும், 1990 முதல் அதன் தலைவராக பணியாற்றி வரும் இவரது தந்தை மருத்துவர் இரவி சந்தோஷமும் குறிப்பிடத்தகவர்கள். [3] மருத்துவர் இரவி பிரபலமான "காட் குயின்டெட்" இசைக்குழுவிலும், [4] [5] [6] [7] அதன் ஆண் குரல் குழுமத்தின் உறுப்பினராகவும் இருந்தார். [8] [9] சங்கீத நாடகம், மேற்கத்திய பாடல் மற்றும் இசைக் கோட்பாடு ஆகியவற்றில் சங்கீதா நீசியா மஜோலி என்பவரிடம் பயிற்சி பெற்றார். மேலும் மியூசிக் தியேட்டரில் சிறந்த பாடகருக்காக 2009 இல் மஜோலி சுழற்கோப்பை வழங்கப்பட்டது. ஓக்லஹோமா நகரத்தில் உள்ள வாண்டா எல். பாஸ் இசைப்பள்ளியில் மேற்கத்திய பாடலில் ஒரு வருடம் பயிற்சியையும் பெற்றார். இவர் இலண்டன் இசைக் கல்லூரியின் இணை ஆசிரியரும் ஆவார்.
செயல்திறன்
சங்கீதா தனது பன்முகத்தன்மை, வெவ்வேறு இசை வகைகளை கையாள்வதில் எளிமை மற்றும் மேடையில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். [10] சென்னை மியூசிக் அகதாமியின் "ஓவர் தி ரெயின்போ" வின் ஒரு பகுதியாக, ஸ்வீனி டோட்டின் "வொர்ஸ்ட் பைஸ் இன் லா", [11] மற்றும் ஜார்ஜஸ் பிசெட்டின் " ஹபனேரா " போன்ற நிகழ்ச்சிகளை நேரடையாக வழங்கினார். [12] [13] . இவர் 15 வயதிலிருந்தே சென்னை இசைக் கழக பாடகர் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். [14] [15] [16] [17] [18] இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சென்னை மியூசிக் அகதாமி நடத்திய நிகழ்வுகளில் இவர் பல தனி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [19] [20] [21] [22] [23] 2009 ஆம் ஆண்டில், சர்வதேச தேவாலய இசை விழாவின் ஒரு பகுதியாக இத்தாலியின் உரோம் நகரில் உள்ள வத்திக்கான் நகர் மற்றும் பாந்தியனில் இவர் நிகழ்த்தினார். [24] உலக புகழ்பெற்ற இசை நடத்துனர்களான சர் டேவிட் வில்காக்ஸ் மற்றும் பால் லெடிக்டன் ரைட் ஆகியோரின் கீழ் இவர் பாடியுள்ளார். 2000ஆம் ஆண்டில், பள்ளியில் இருந்தபோதே, சிட்னி ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக சிட்னி ஒலிம்பிக் ஜோதி விழாவில் டாக்டர் ரொனால்ட் ஸ்மார்ட்டின் கீழ் நிகழ்த்தினார். ரான் கெனோலி, டான் மொயென், எர்னி ஹேஸ் மற்றும் சிக்னேச்சர் சவுண்ட் மற்றும் பென்னி பிரசாத் போன்ற பல சர்வதேச நற்செய்தி கலைஞர்களுக்காக இவர் பாடியுள்ளார். [25] [26] [27] [28] எல். சுப்பிரமணியம், கெபா எரேமியா [29] [30] மற்றும் எட்வின் ராய் போன்ற பிற புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர்களுடனும் சங்கீதா பணியாற்றியுள்ளார். [15] [18]
இவரது பதிவுகளும் காணொளிகளும் [31] [32] பிரபல கலைஞர்களான எஹ்சன் நூரானி மற்றும் கெபா எரேமியா ஆகியோரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டு மறு டுவீட் செய்யப்பட்டுள்ளன [30]
மேற்கோள்கள்
- ↑ Members Of Lok Sabha
- ↑ Santosham Chest Hospital – Welcome to our Homepage. Have look on other pages பரணிடப்பட்டது 13 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Madras Musical Association | Executive Committee". Archived from the original on 2018-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ The Gatt Quintet – Info | Facebook
- ↑ http://uecf.net/Gatt_Quintet_Flyer.pdf
- ↑ GATT Quintet | lifsgud
- ↑ "The Hindu : Metro Plus Chennai / Travel : At their musical best". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "ClassicHymns-Male Voice Ensemble". Archived from the original on 2019-09-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ On a song : Simply Chennai: News India Today
- ↑ [1]
- ↑ [2]
- ↑ [3]
- ↑ [4]
- ↑ The Hindu : Arts / Music : Sound and serenity
- ↑ 15.0 15.1 It dont mean a thing MMA choir – YouTube
- ↑ His eye is on the sparrow – YouTube
- ↑ "Sunset Serenade by Madras Musical Association at Sir Mutha Venkata Subba Rao Concert hall in Lady Andal School | ilaaka.com". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ 18.0 18.1 "The Hindu : Metro Plus Chennai / Music : Sound and serenity". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "The Madras Musical Association | Events". Archived from the original on 2018-05-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ Part of that world.wmv – YouTube
- ↑ The Hindu : Life & Style / Metroplus : Nostalgic notes
- ↑ "The Hindu : Metro Plus Chennai / Events : Some enchanted evening". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "Archived copy". Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-10-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) "Archived copy". Archived from the original on 25 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2011-10-06.{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [5]
- ↑ The Hindu : Life & Style / Metroplus : A medley to remember
- ↑ "The Hindu : Metro Plus Chennai / Music : Nostalgic notes". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ ROXYGEN | Bands | Indian Music Bands | International Music Bands[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://chennaionline.com/movies/gallery/NAC-Petite-Princess-2013-Grand-Final-Gallery/NAC-Petite-Princess-2013-Grand-Final-Gallery/20130919094354.col#39.html
- ↑ 30.0 30.1 https://www.youtube.com/watch?v=7B3gQMN5MHM
- ↑ https://soundcloud.com/sangitasantosham/send-in-the-clowns
- ↑ https://soundcloud.com/sangitasantosham/hey-jude