க. பொன்னம்பலம்
கதிரவேலு பொன்னம்பலம் க. பொன்னம்பலம் | |
---|---|
2வது யாழ்ப்பாண முதல்வர் | |
பதவியில் 6 சனவரி 1950 – 31 டிசம்பர் 1951 | |
முன்னவர் | சாம். அ. சபாபதி |
பின்வந்தவர் | சாம். அ. சபாபதி |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
தொழில் | வழக்கறிஞர் |
கதிரவேலு பொன்னம்பலம் (Cathiravelu Ponnambalam) என்னும் முழுப்பெயர் கொண்ட க. பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும், யாழ்ப்பாண மாநகர சபையின் இரண்டாவது முதல்வராகப்[1] பணியாற்றியவரும் ஆவார். இலங்கை அரசியலில் புகழ் பெற்ற குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இவரது நெருங்கிய உறவினர்கள் பலர் அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர்.
குடும்பம்
இவரது தந்தையார், மாவட்ட நீதிபதியாகவும், மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய ஆறுமுகம் கதிரவேலு ஆவார். பொன்னம்பலத்தின் தமையனார் கதிரவேலு சிற்றம்பலம் விடுதலை பெற்ற இலங்கையின் முதல் அஞ்சல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பெரிய தந்தையார் ஆறுமுகம் கனகரத்தினம், யாழ்ப்பாண நகர சபையின் முதல் தலைவராக இருந்ததுடன், யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தையும் நிறுவினார். பொன்னம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனாரின் சகோதரரே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான விசுவநாதர் காசிப்பிள்ளை.[2]
மேற்கோள்கள்
- ↑ "யாழ் மாநகர சபை இணையத்தளம் - முன்னைய முதல்வர்கள்". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 31.