க. து. மு. இக்பால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
க. து. மு. இக்பால்
க. து. மு. இக்பால்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. து. மு. இக்பால்
பிறந்ததிகதி 1941
பிறந்தஇடம் கடையநல்லூர், தமிழ்நாடு, இந்தியா
பணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்
தேசியம் சிங்கப்பூரர்
அறியப்படுவது கவிஞர்
பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா
பிள்ளைகள் 5 ஆண்கள்

க. து. மு. இக்பால் (பி. 1940) சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது.[1] சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது, மோண்ட் பிளாங் இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

இக்பால் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர். இக்பால் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1956 ஆம் ஆண்டில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 7 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் வானொலியில் ‘பாடிப் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சிக்கு 1970களிலும் 80களிலும் கிட்டத்தட்ட 200 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.[1]

வெளியிட்ட கவிதை நூல்கள்

கவிஞர் இக்பால் உலக அளவிலே பல பெருமைகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.

கவிஞர் இக்பால் பெற்ற விருதுகளும் பெருமைகளும்

  • சிங்கப்பூர் கலாசார விருது (2014)
  • சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மையமும் மோங் பிளாங்க் [Mont Blanc] பேனா நிறுவனமும் இணைந்து வழங்கிய இலக்கிய விருது (1996)
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் "தமிழவேள் இலக்கிய விருது (1999)
  • தாய்லாந்து அரசு வழங்கிய தென்கிழக்காசிய இலக்கிய விருது (2001)
  • சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் "கலா ரத்னா" விருது (2004)
  • முகவரிகள் நூலுக்குச் சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகப் பாராட்டு விருது (1990)
  • சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற ஆதரவில் தண்ணீர் எனும் கவிதை எம்.ஆர்.டி.ரயில் வண்டிகளில் இடம்பெற்றது (1995).
  • ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ-2000 எனும் மாபெரும் கண்காட்சியில் கோய்த்தே இன்ஸ்ட்டியூட (Goethe Institute) ஆதரவில் "தண்ணீர்" கவிதை இடம்பெற்றது.
  • தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் நவம்பர் 2005 இல் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளியல் உச்சநிலை மாநாட்டில் "மாலைப் பண்" என்னும் கவிதை இடம்பெற்றது. "Representative Poetry of participating nations in 2005 APEC" எனும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.
  • தேசியக் கலைகள் மன்றம் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட சந்தங்கள்:சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டுத் தொகுப்பு (Rhythms:A Singaporean Millennial Anthology of Poetry) நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்
  • தேசியக் கலைகள் மன்றத்தின் இலக்கியக் குழு உறுப்பினர் (Arts Resource Panel , Literature 2004- 2006)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "கவிஞர் இக்பாலுக்கு உயரிய கலாசார விருது". தமிழ்முரசு. 16 அக்டோபர் 2014. http://www.tamilmurasu.com.sg/story/42718. பார்த்த நாள்: 25 அக்டோபர் 2014. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=க._து._மு._இக்பால்&oldid=26652" இருந்து மீள்விக்கப்பட்டது