க. திருநாவுக்கரசு
Jump to navigation
Jump to search
க. திருநாவுக்கரசு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தொடருந்துப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து இந்திய - சீனப் போரின் போது எல்லைப் பகுதியில் பணியாற்றியவர். சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி நக்கீரன், நம்நாடு பேசுகிறது போன்ற இதழ்களை சொந்தமாக நடத்திய இவர் ஈழப் பிரச்சனைகளுக்காகப் பல முறை சிறை சென்றிருக்கிறார். முரசொலி நாளேட்டின் செய்தி ஆசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் திரு. வி. க. விருது , ஆழ்வார்கள் மையத்தின் தமிழறிஞர் விருது போன்றவைகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "நீதிக்கட்சி வரலாறு" [1] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120430230402/http://www.unmaionline.com/2010/december/16-31/page10.php.