கௌசல்யா பர்னாந்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கௌசல்யா பர்னாந்து
කෞෂල්‍යා ප්‍රනාන්දු
பிறப்புவேயங்கொடை
தேசியம்இலங்கையர்
கல்விபுனித பால் மகளிர் பள்ளி, மிளகிரியா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1979–தற்போது வரை
பெற்றோர்லியோனர் பர்னாந்து
சோமலதா சுபசிங்கே
வாழ்க்கைத்
துணை
சந்தனா அலுத்தகே
பிள்ளைகள்2
விருதுகள்சிறந்த நடிகை
சிறந்த துணை நடிகை

கௌசல்யா பர்னாந்து (Kaushalya Fernando), ஓர் இலங்கை நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளரும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1] மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் ஆதிக்கம் செலுத்திய பல்துறை நடிகையான் இவர், மாநில நாடக விழாவில் மதிப்புமிக்க சிறந்த நடிகை விருதை ஐந்து முறை வென்றுள்ளார். இவர் பிரபல நாடக இயக்குனர் மறைந்த சோமலதா சுபாசிங்கேவின் மகள் ஆவார்.[2]

சொந்த வாழ்க்கை

கௌசல்யா, லியோனல் பர்னாந்து மற்றும் சோமலதா சுபாசிங்கின் மகளாகப் பிறந்தார். ஒரு அரசு ஊழியரான இவரது தந்தை லியோனல் முன்னாள் தூதராகவும் இருந்தார். இவரது தாயார் சோமலதா ஒரு பிரபல நாடகக் கலைஞரும் நாடக இயக்குநரும் ஆவார். இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். இவருடைய தாத்தா பாட்டிகள் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் வேயங்கொடையில் வசித்து வந்தனர். இவர், முதலில் அனுலா கல்லூரி, பின்னர் கோதமி பாலிகா வித்யாலயா மற்றும் சுஜாதா கல்லூரி, இறுதியாக மிளகிரியாவின் செயின்ட் பால் பெண்கள் பள்ளி என நான்கு பள்ளிகளுக்குச் சென்றார்.[3] கலைகளைத் தவிர, மாவட்ட அளவில் 100, 200 மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற தடகள விளையாட்டிலும் இவர் வெற்றியாளராக இருந்தார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டம் பெற்றார். அந்த நேரத்தில், பேராசிரியர் சிரோமி பர்னாந்து என்பவரால் பயிற்சி ஆங்கில பயிற்றுவிப்பாளராக சேர அழைக்கப்பட்டார். இவர் அதை ஏற்றுக்கொண்டு பின்னர் ஆங்கில மொழி கற்பித்தலில் முதுகலை பட்டயப்படிப்பை தொடர்ந்தாள். 1999இல் நிரந்தர பணியாளராக வேண்டி வேலையை விட்டுவிட்டு வருகை விரிவுரையாளராக தொடர்ந்தார்.[3]

இவர் டாக்டர் சந்தனா அலுத்கேவை மணந்தார். மேலும், இரட்டை குழந்தைகளான ஹைமி மற்றும் ஹான்ஸுக்கு தாய் ஆவார்.[4] இவரது கணவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பணிபுரிகிறார்.[3]

நடிப்புத் தொழில்

குழந்தைப் பருவத்திலிருந்தே இவருக்கு நாடகத் திறமை இருந்தது. இவர் தனது தனது ஆசிரியர் சுனேத்ரா சரச்சந்திராவின் ஊக்கத்துடன் தனது 8வது வயதில் மேடை நாடகங்களை எழுதி, இயக்கினார்.[5]

1979 ஆம் ஆண்டில், பர்னாந்து தனது முதல் மேடைப் பாத்திரத்தை தற்செயலாக தனது தாயார் இயக்கிய புஞ்சி அபடா டாங் த்ரேய் நாடகத்தில் கடைசி நிமிட மாற்றாக நடித்தார். பின்னர் விகுர்த்தியில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும் அவரது முக்கிய வெற்றி சுகதபால டி சில்வாவின் மராசாட் நாடகமாக இருந்தது. நாடகத்தில் தனது பாத்திரத்திற்காக, இவர் மாநில நாடக விழாவில் சிறப்பு பாராட்டைப் பெற்றார். கௌசல்யாவின் திறமைகளை அடையாளம் கண்ட பிரபல இயக்குநர்கள் தர்மசிறி பண்டாரநாயக்க, கே. பி. ஹெறாத், ரஞ்சினி ஒபேசேகர மற்றும் பிரேமசிறி கெமதாச ஆகியோர் இவரை ஊக்குவித்தனர்.[5][6] 1994 ஆம் ஆண்டில் இவர் தனது தாயார் தயாரித்த ஆன்டிகோனி நாடகத்தில் நடித்தார். இதற்காக 1995 மாநில நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 1995 இல், இவர் டோனா கதிரினா என்ற நாடகத்தில் நடித்தார். இந்த பாத்திரத்தில் இவரது நடிப்பு 1996 மாநில நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுத் தந்தது.[7]

2005இல் உலகத் திரைப்படங்களின் மக்காவான கான் திரைப்பட விழாவிலும், 2009இல் 66 வது வெனிஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்ற சில இலங்கை கலைஞர்களில் ஒருவரானார்.[4][8]

மேற்கோள்கள்

  1. "Sri Lankan actresses - Kaushalya Fernando". Sinhala Cinema Database. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  2. "Kaushalya Fernando". National Film Corporation of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  3. 3.0 3.1 3.2 ""I like to play tragic characters" - Kaushalya Fernando". The Nation. Archived from the original on 14 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  4. 4.0 4.1 "Life on stage and screen". Daily News. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  5. 5.0 5.1 ""Theatre made me the person I am"- Kaushalya Fernando". Sunday Observer. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  6. "Kalumaali - A fairytale for adults". zimbio. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.
  7. "Why villages, why me ... why thrones ..." Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  8. "66th International Vencie Film Festival - 'Ahasin Weti' Photocall". zimbio. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கௌசல்யா_பர்னாந்து&oldid=28477" இருந்து மீள்விக்கப்பட்டது