கோ. தனசேகரன்
Jump to navigation
Jump to search
கோ. தனசேகரன் (பிறப்பு: சூன் 27 1958) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கோவதன்' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் மாற்று மருத்துவம்; இயற்கை மருத்துவருமாவார். மற்றும் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்திலும் செபராங் பிறை எழுத்தாளர் வாசகர் இயக்கத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளும், மற்றும் சிறுகதைகள், கட்டுரைகளும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "சக்திவேல் பாமாலை" (1993)
- "பரமக்குடி அருள்மிகு முத்தால பரமேஸ்வரி அம்மன் இருபா இருபது அந்தாதி" (1993)
- "புனல்" (கவிதைத் தொகுப்பு அச்சில்)
பரிசுகளும் விருதுகளும்
- வள்ளல் ரெனா பொற்பதக்கம் - வட மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில்
- முதல் பரிசு - தமிழ் எழுத்தாளர் தினக் கவிதைப் போட்டி (1998)
- முதல் பரிசு - கண்ணதாசன் விழாக் கவிதைப் போட்டி