கோலமாவு கோகிலா
கோலமாவு கோகிலா | |
---|---|
இயக்கம் | நெல்சன் திலீப்குமார் |
தயாரிப்பு | அல்லிராஜா சுபாஸ்கரன் |
இசை | அனிருத் ரவிச்சந்தர் |
நடிப்பு | நயன்தாரா யோகி பாபு சரண்யா பொன்வண்ணன் ஆர்.எஸ் சிவாஜி ஹரீஸ் பேரடி சார்ள்ஸ் வினோத் |
ஒளிப்பதிவு | சிவகுமார் விஜயன் |
படத்தொகுப்பு | ஆர்.நிர்மல் |
கலையகம் | லைகா புரடக்சன் |
விநியோகம் | ஷீ ஸ்ருடியோஸ் ஐங்கரன் சர்வதேசம் |
வெளியீடு | ஆகத்து 17, 2018 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
கோலமாவு கோகிலா 2018 ல் வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியியுள்ளார். இத்திரைப்படத்தை லைகா புரடக்சன் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க அவருடன் இணை கதாபாத்திரங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ் சிவாஜி, சார்ள்ஸ் வினோத் மற்றும் ஹரீஸ் பேர்டி ஆகியோரும் நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்தர் இத்திரைப்படத்திற்கான இசையை அமைத்திருந்தார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 17, 2018 ல் வெளிவந்தது. இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே தினத்தில் கொ கொ கோகிலா எனும் பெயரில் வெளியானது.
கதைச்சுருக்கம்
இப்படம் ஆரம்பத்தின் போதே கொக்கைன் மாபியா தலைவன் பாய் ஒர் காவலரைக் கொல்வதுடன் தொடங்குகிறது. கோகிலா நடுத்தர குடுபத்து மூத்த பெண் பிள்ளை. வேலை தேடி அலையும் அவளுக்கு அழகுக்கலை நிலையத்தில் ஒரு வேலை கிடைக்க தெரியாமல் கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் காரர்களிடம் சிக்கிகொள்கிறாள். அதன் பின்னர் தனது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் சேர்ந்து கொக்கைனை அல்போன்ஸிற்கு (ராஜேந்தர்) கடத்துவதில் ஈடுபடுகிறாள் கோகிலா. இது இவ்வாறு இருக்க காவல் அதிகாரி குரு கடத்தல் காரர்களை பிடிக்க பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.அதன் பிறகு கோகிலா கடத்துவதை யாரோ காவல் துறையிடம் காட்டி கொடுத்துவிட அவர்கள் இருவரையும் கடத்தல்காரத் தலைவனிடம் கொல்லச் சொல்கிறாள்.
கடத்தல்காரத் தலைவன் கோகிலாவைக் கற்பழிக்க வர அவனை அடிக்கிறாள். அதனால் அவன் உணர்வற்றுகிடக்க 100 கிலோ கொக்கைனையும் கோகிலாவே கடத்த வேண்டும் என பாய் கட்டளையிடுகிறான். அதன் பின்னர் கோகிலா அக் கொக்கைனை கடத்த தன் குடும்பத்துடன் எடுக்கும் சாகசங்கள். அதன் பின்னர் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறுகிறாள் கோகிலா.
நடிகர்கள்
நயன்தாரா-கோகிலா
யோகி பாபு- சேகர்
சரண்யா பொன்வண்ணன்-கோகிலாவின் தாய்
ஆர்.எஸ் சிவாஜி- கோகிலாவின் தந்தை
ஹரீஸ் பேரடி-பாய்
சார்ள்ஸ் வினோத்-மோகன்
ராஜேந்திரன்-அல்போன்ஸ்
சரவணன்- இன்ஸ்பெக்டர் குரு
சீனு மோகன்-போலிஸ் கான்ஸ்டபிள்
அன்பு தாசன்- லக்ஸ்மன் குமார்(LK)
ஜக்குலின் பெர்ணாண்டஸ் (விஜய் டீவி)-சோபி(கோகிலாவினுடைய தங்கை)
அறந்தாங்கி நிஷா-குருவினுடைய மனைவி
வடிவேல் பாலாஜி(விஜய் டிவி)-ரெமோ குமார்(LK's மாமா)
ரெடின் கிங்ஸ்லி-தோனி
வெளியீடு
இத்திரைப்படத்தின் மொத்த செலவு 8 கோடி [1] என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2018 இத்திரைப்படம் வெளிவந்தது.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Kolamavu Kokila budget". https://www.youtube.com/watch?v=Dlqdi_rPumU.
- ↑ "Friday Fury-August 17" இம் மூலத்தில் இருந்து 2018-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180817124943/http://www.sify.com/movies/friday-fury-august-17-news-tamil-sirhddgjeiead.html.
- ↑ https://www.behindwoods.com/tamil-movies/kolamaavu-kokila/kolamaavu-kokila-review.html