கோமல் கோத்தாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோமல் கோத்தாரி (Komal Kothari) என்பவர் இராசத்தான் மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய நாட்டுப்புற கலைஞர் மற்றும் பாடகர் ஆவார்.[1][2]

பணி

கோத்தாரியின் நாட்டுப்புறக் கதைகளின் பல பகுதிகள் பற்றிய ஆய்வு செய்துள்ளார். இது இவரது வளர்ச்சிக்கு வழிவகுத்தது. குறிப்பாக, இவர் நாட்டுப்புற இசைக்கருவிகள், செவிவழி மரபுகள் மற்றும் பொம்மலாட்டம் பற்றிய ஆய்வில் சிறப்பான பங்களிப்பினை செய்துள்ளார்.[3]

கோத்தாரி லங்கா மற்றும் மங்கனியார் நாட்டுப்புற இசையின் புரவலராகவும் இருந்தார். மங்கனியர் நாட்டுப்புறப்பாடல்கள் 'பிச்சைக்காரர்கள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது மெராசிக்கு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இவர்தான் முதலில் இவற்றைப் பதிவுசெய்து, இவர்களின் பாரம்பரியப் பகுதிகளிலிருந்து வெளிக்கொணர உதவினார்.[5] இதற்காக, 'பிரேர்ணா ' என்ற பத்திரிகையையும் நிறுவினார்.

கோத்தாரி, சண்டி தான் தேத்தா என்பவரால் நிறுவப்பட்ட ரூபயன் சன்ஸ்தானின் தலைவராகவும் இருந்தார். மேலும் ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதைகள், கலைகள் மற்றும் இசையை ஆவணப்படுத்தும் நிறுவனத்தில் ராஜஸ்தானின் பொருண்டா கிராமத்தில் விஜயதன் தேத்தாவுடன் பணிபுரிந்தார். மேலும் இவரது பணியின் பெரும்பகுதியை ராஜஸ்தான் சங்கீத நாடகத்தில் கழிந்தது. இவர் ஏப்ரல் 2004-ல் புற்றுநோய் காரணமாக இறந்தார்.

விருதுகள்

சிறப்பு

1979ஆம் ஆண்டு இவரது இனமரபு இசை ஆய்வியல் பணி பற்றிய ஒரு ஆவணப்படமும் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய மற்றொரு படமும் (கோமல் டா), கொலம்பியா பல்கலைக்கழக நூலகத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளன.[3]

வெளியீடுகள்

  • மோனோகிராப் ஆன் லங்காசு:ராஜஸ்தானின் ஒரு நாட்டுப்புற இசைக்கலைஞர் சாதி. 1960.
  • போல்க் மியூசிகள் இன்ஸ்ட்ருமென்சு ஆப் ராஜஸ்தான்:அ ஃபோலியோ. ராஜஸ்தான் நாட்டுப்புறவியல் நிறுவனம், 1977.
  • காட்சு ஆப் தி பைவேஸ். நவீன கலை அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு. 1982.ISBN 0-905836-28-6.
  • ராஜஸ்தான்: தி லிவ்விங் டிரிடிசன், பிரகாஷ் புத்தக நிலையம். 2000. ISBN 81-7234-031-1ஐஎஸ்பிஎன் 81-7234-031-1.
  • லைப் அண்டு ஒர்க் ஆப் பத்ம பூசண் சிறீ கோமல் கோத்தாரி (1929-2004), கோமல் கோத்தாரி, தேசிய நாட்டுப்புற உதவி மையம், 2004.
  • பார்ட்சு, பாலாட்கள் மற்றும் பவுண்டிர்சு: டேனியல் நியூமன், ஷுபா சௌதுரி, கோமல் கோத்தாரி ஆகியோரால் மேற்கு ராஜஸ்தானில் உள்ள இசை மரபுகளின் எத்னோகிராஃபிக் அட்லஸ் . சீகல், 2007. ISBN 1-905422-07-5ஐஎஸ்பிஎன் 1-905422-07-5 .

மேலும் படிக்க

மேலும் பார்க்கவும்

  • ராஜஸ்தானின் இசைக்கருவிகள்

மேற்கோள்கள்

  1. 2000 Prince Claus Award Accessed 1 June 2006
  2. "Komal Kothari – The Folk Musician". Press Information Bureau Government of India. 22 April 2004.
  3. 3.0 3.1 Remembering Komal Korthari Columbia University, Accessed 1 June 2006
  4. Stephen Huyler, 25 September 2016
  5. The magical music of Manganiyars goes global Good news India, Accessed 1 June 2006
  6. https://rajasthanstudio.com/komal-kothari-a-musical-maestro-from-rajasthan/
  7. https://www.arnajharna.org/komal-kothari

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோமல்_கோத்தாரி&oldid=18786" இருந்து மீள்விக்கப்பட்டது