கெ. சுப்பிரமணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கெ. சுப்பிரமணியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கெ. சுப்பிரமணியம்
பிறந்ததிகதி 1939
அறியப்படுவது எழுத்தாளர்

கெ. சுப்பிரமணியம் (பி: 1939) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். பொன்முடி எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியரும், நாடறிந்த கவிஞரும், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "பறவைக் கப்பல்" (கவிதை - 1980)
  • "பொன்முடிக் கவிதைகள்"
  • "மொழிச் செல்வம்" (சிறுவர் கட்டுரை - 1981)

பரிசில்களும், விருதுகளும்

  • சிறுவர்களுக்கான எழுத்துப் பணிக்காக தமிழ் இலக்கியக் கழகக் கேடயம் (1979).

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கெ._சுப்பிரமணியம்&oldid=6195" இருந்து மீள்விக்கப்பட்டது