கூழாங்கல் (திரைப்படம்)
கூழாங்கல் | |
---|---|
இயக்கம் | பி. எஸ். வினோத்ராஜ் |
தயாரிப்பு | நயன்தாரா விக்னேஷ் சிவன் |
திரைக்கதை | பி. எஸ். வினோத்ராஜ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | விக்னேஷ் குமுலை ஜெயா. பார்த்திபன் |
படத்தொகுப்பு | கணேஷ் சிவா |
வெளியீடு | 4 பெப்ரவரி 2021(இராட்டர்டாம் பன்னாட்டுத் திரைப்பட விழ]]) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கூழாங்கல் (Pebbles) 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். அறிமுக இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கிய முதல் திரைப்படம்.[1] திரைப்பட நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் இத்திரைப்படத்தைத் தங்களது ரவுடி பிக்சர்சு நிறுவனம் மூலம் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.[2] இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவாளர்களாக ஜெயா. பார்த்திபன், விக்னேஷ் குமுளையும், படத்தொகுப்பாளராக கணேஷ் சிவாவும் பணியாற்றியுள்ளனர்.
தயாரிப்பு
இயக்குனர் வினோத்ராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடித்தளமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதையை அவர் உருவாக்கியுள்ளார்.[3] இக்கதைக்கான பின்களத்திற்காக வெகுநாள் தேடிப் பின்னர் இறுதியாக மதுரைக்கருகே, மேலூர் மவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி என்ற ஊரைத் தேர்வு செய்தார். இத்திரைப்படம் 30 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் இடம்பெறும் மலை ஆயிரமாண்டுகள் பழமையானது.
2021 ஆம் ஆண்டு, பிப்பிரவரி நான்காம் நாளன்று நெதர்லாந்தில் நடைபெற்ற 50 ஆவது இராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.[4] அதே ஆண்டின் ஏப்ரல் 28 முதல் மே 8 வரை நடைபெற்ற புது இயக்குனர் மற்றும் புதுத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இத்திரைப்படம் முறையாகத் தேர்வானது.[5] மேலும் தென்கொரியத் திரைப்படவிழாவிலும் தேர்வானது.[6] அந்த ஆண்டின் மே 20 முதல் 27 வரை நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்சின் இந்தியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[7] மே மாதம் 29 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற குயிவ் பன்னாட்டுத் திரைப்படவிழா: மோலோடிசுட்டிலும் திரையிடப்பட்டது.[8] 2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்தியத் திரைப்படங்களுள் கூழாங்கல்லும் ஒன்றாகும்.[9]
பெற்ற விருதுகள்
விருது | நடைபெற்ற நாள் | பிரிவு | விருதுபெற்றோர் | முடிவு | Ref(s) |
---|---|---|---|---|---|
டைகர் விருதுகள், இராட்டர்டாம் பன்னாட்டுத் திரைப்படவிழா | ஜூன் 22, 2021 | புதிய இயக்குனர் | பி. எஸ், வினோத்ராஜ் | Won | [10] |
ஆசியத் திரைப்பட விருதுகள், 15 ஆவது ஆசியத்திரைப்பட விருதுவிழா | அக்டோபர் 8, 2021 | Nominated | [11] |
மேற்கோள்கள்
- ↑ Meza, Ed (February 7, 2021). "Indian Drama 'Pebbles,' Argentina's 'The Dog Who Wouldn't Be Quiet' Win Top Rotterdam Awards fear". Variety. https://variety.com/2021/global/global/indian-drama-pebbles-argentinas-the-dog-who-wouldnt-be-quiet-win-top-rotterdam-awards-iffr-1234902643/.
- ↑ "Vignesh Shivan's next production is Koozhangal in Yuvan's music". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ 3.0 3.1 "Vinothraj on Koozhangal winning at IFFR". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ "Nayanthara, Vignesh Shivan attend 'Koozhangal' premier at Rotterdam film festival". The News Minute (in English). 2021-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
- ↑ Rowdy Pictures Pvt Ltd [Rowdy_Pictures] (27 April 2021). "With your support our film #Koozhangal has won yet another feather to it's hat! Thanks for helping us out and sticking around despite the tough time! Much love to you all ❤️❤️" (Tweet).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Rowdy Pictures Pvt Ltd [Rowdy_Pictures] (30 April 2021). "Another day, another laurel! So grateful for the recognition this film has been receiving" (Tweet).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Rowdy Pictures's Instagram profile post: "And we are on! So grateful for all this overwhelming response ❤️ #stayhomestaysafe #rowdypictures #koozhangal #IFFLA2021 #rotterdam…"". Instagram (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ "Rowdy Pictures (@therowdypictures) posted on Instagram: "Sky is the limit ✨ #stayhomestaysafe #rowdypictures #molodistfilmfestival #koozhangal #IFFLA2021 #rotterdam…" • May 29, 2021 at 7:49am UTC". Instagram (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ "Tamil film 'Koozhangal' is India's official entry to the Oscars 2022". The Hindu.
- ↑ Roxborough, Scott (February 7, 2021). "'Pebbles' Wins Top Honor at 2021 Rotterdam Film Festival". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/amp/news/rotterdam-indian-winner-pebbles.
- ↑ "The Asian Film Awards Academy (Academy) today announced the finalists for the 15th Asian Film Awards". Asian Film Awards Academy. AFA. 9 September 2021. Archived from the original on 9 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.