கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (2000 திரைப்படம்)
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை | |
---|---|
இயக்கம் | வி.சேகர் |
தயாரிப்பு | எஸ்.எஸ்.துரை ராஜு கே.பார்த்திபன் |
கதை | வி. சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | நாசர் குஷ்பூ கரண் ரோஜா விவேக் வடிவேலு கோவை சரளா |
ஒளிப்பதிவு | பி.எஸ்.செல்வம் |
படத்தொகுப்பு | ஏ.பி.மணிவண்ணன் |
வெளியீடு | சூலை 15, 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (Koodi Vazhnthal Kodi Nanmai) 2000 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை வி.சேகர் எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில்நாசர், குஷ்பூ, கரண், ரோஜா, விவேக், வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். 2000 சூலை 15 அன்று வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் தேவா ஆவார்.[1][2][3]
நடிகர்கள்
- நாசர் - தங்கராஜ்
- குஷ்பூ - மீனாக்ஷி
- கரண் - சிவராமன்
- ரோஜா - தமிழ்ச்செல்வி
- விவேக் - தண்டபாணி
- வடிவேலு - பாக்சர் கிருஷ்ணன்
- கோவை சரளா - கனகவல்லி
- தியாகு - வீரபாண்டி
- கவிதா - பத்மா
- விஜயகுமார் - வள்ளுவர்தாசன்
- சூர்யகாந்த் - எதிர்க்கட்சி உறுப்பினர்
- பாண்டி - பாக்சர் கிருஷ்ணனின் மகன்
- போண்டா மணி - பாக்சர் கிருஷ்ணனின் உதவியாள்
- கனேஷ்கர் - பாக்சர் கிருஷ்ணனின் உதவியாள்
- ரமேஷ் கண்ணா - ரமேஷ்
கதைச்சுருக்கம்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தங்கராஜ் (நாசர் (நடிகர்)) அவரது மனைவி மீனாட்சி (குஷ்பூ) மற்றும் மகள் பத்மா (கவிதா) ஆவர். தங்கராஜின் தம்பி பாக்ஸர் கிருஷ்ணன் (வடிவேலு (நடிகர்)) அரசியலில் பகல் கனவு காணும் ஒரு பொறுப்பற்ற ஆசாமி. கிருஷ்ணனின் மனைவி கனகவல்லி (கோவை சரளா) . நன்கு படித்த மற்றொரு தம்பியான சிவராமனும் (கரண்) தங்கராஜும், வள்ளுவதாசனின் (விஜயகுமார்) சொந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சிவராமனை தன் சொந்த பிள்ளையை போலவே வளர்த்தனர். சிவராமன் நன்கு வருமானம் பெறுவதால், அக்குடுன்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தது. சிவராமனின் குணத்தையும், கூட்டுகுடும்பத்தையும் பார்த்து வள்ளுவர்தாசன் தனது மகளான தமிழ்ச்செல்வியை (ரோஜா) சிவராமனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
பணக்கார வீட்டை சேர்ந்தவளாக இருந்தாலும் கனிவுடனும் பணிவுடனும் நடந்துகொள்கிறாள் தமிழ்செல்வி. அதேசமயம், தான் அதிகம் வருமானம் ஈட்டுவதால் வீட்டில் இருக்கும் அனைவரும் தன் பேச்சை கேட்கவேண்டும் என்று நினைக்கிறான் சிவராமன். கிருஷ்ணன் வேலையில்லாமல் அரசியல் பகல் கனவு காணுவதால், இவர்களுக்கிடையே அவ்வப்பொழுது வாக்குவாதம் நடக்கிறது.
தங்கராஜின் வீட்டருகில் இருக்கும் தண்டபாணி (விவேக்) பத்மாவை விருப்புவது தெரியவந்து, மணமுடிக்க நினைக்கிறார் தங்கராஜ். ஆனால், தண்டபாணியின் தந்தையோ மிகவும் அதிக வரதட்சணை கேட்கிறார். எப்படியும் சிவராமன் பணத்தை கொடுப்பான் என்று எண்ணி தங்கராஜ் ஒப்புக்கொள்கிறார். ஆனால், பணம் தர சிவராமன் மறுக்க, குடும்பத்தில் பிரச்சனைகள் வெடிக்கின்றன. சிவராமனின் நோக்கம் முழுவதும் பணத்தை நோக்கியே இருப்பதாக எண்ணிய மீனாட்சியும், சிவராமனும் வீட்டைவிட்டு வெளியிருக்கிறார்கள்.
கூட்டுககுடும்பம் சிதறியதால், அதை இணைக்க முயல்கிறாள் தமிழ்செல்வி. தண்டபாணிக்கும் பத்மாவிற்கும் திருமணம் ஆனதா? சிவராமன் பணம் கொடுத்தானா? உடைந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதி கதையாகும்.
இசை
இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். முத்துலிங்கம், காளிதாசன், காமகோடியன் மற்றும் பழனி பாரதி இப்படத்தின் பாடல்களை எழுதினர்.[4][5]
வரிசை
எண் |
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | கூடி வாழ்ந்தால் கோடி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:08 |
2 | எங்க வீடு கல்யாணம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 5:07 |
3 | எங்கள் தமிழ் செல்வி | சித்ரா | 4:55 |
4 | ஹாப்பி 2000 | மனோ | 4:57 |
5 | சிங்கார சென்னையிலே | தேவா | 5:10 |
விமர்சனங்கள்
இந்து.காம் எஸ்.ஆர்.அசோக்குமார் "படத்தின் துவக்கம் பிரகாசமாகவே இருந்தாலும், இரண்டாம் பகுதி சுமாராகவே இருந்தது" என விமர்சனம் செய்தார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Koodi Vazhnthal Kodi Nanmai (2000) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/koodi-vazhnthal-kodi-nanmai/. பார்த்த நாள்: 2015-02-27.
- ↑ S. R. Ashok Kumar (2000-07-21). "The Hindu : Film Review: Koodi Vazhndhal Kodi Nanmai". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150227211551/http://www.thehindu.com/2000/07/21/stories/09210222.htm. பார்த்த நாள்: 2015-02-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303205913/http://www.bbthots.com/reviews/2000/kvknanmai.html.
- ↑ "www.mixrad.io". http://www.mixrad.io/in/en/products/Deva/Koodi-Vazhndhal-Kodi-Nanmai/8818911.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "play.raaga.com". http://play.raaga.com/tamil/album/Koodi-Vazhnthal-Kodi-Nanmai-songs-T0001067.
- ↑ "www.thehindu.com" இம் மூலத்தில் இருந்து 2015-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150227211551/http://www.thehindu.com/2000/07/21/stories/09210222.htm.