கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் என்பது நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு. சின்னப்ப பாரதி நினைவு அறக்கட்டளையின் மூலம் 2008 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் விருதுகளாகும். நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழி பெயர்ப்பு, கணினித்தமிழ் இலக்கியம், சமூகசேவை, சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒரு துறைக்கு நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும் பிற துறைகளில் வரப்பெற்ற இலக்கியத்திற்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படும். [1][2]

பரிசுகள்

இவ்விருதுகளில் முதன்மை விருது ரூபாய் 150000 மற்றும் கேடயமும் சான்றிதழும் சிறப்பு விருதுகள் ரூபாய் 10000 வீதம் மற்றும் கேடயமும் சான்றிதழும் வழங்கப்படும்

வெளி இணைப்புகள்