குறுந்தொகை உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குறுந்தொகை உரை என்பது குறுந்தொகை நூலுக்கு 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய பழைய உரை.
எட்டுத்தொகை நூல்களுக்குத் தோன்றிய உரைகள் இங்கு ஒப்புநோக்கத் தக்கவை.
இந்த உரைநூல் கிடைக்கப்பெறவில்லை.
எனினும் நச்சினார்க்கினியர் [1] எந்தெந்த நூல்களுக்கு உரை செய்தார் என்று பட்டியலிட்டுக் காட்டும் வெண்பாவில் இந்த நூலிலுள்ள 20 பாடல்களுக்கு இவர் உரை செய்தார் என்னும் குறிப்பு வருவதால் இந்த உரைதூல் இருந்தது என்பதும், இந்த உரை நச்சினார்க்கினியரால் செய்யப்பட்டது என்பதும் தெரியவருகிறது.

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையில் ஐஞ்ஞான்கும் – சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னார்க்கினிய மே. (பழம்பாடல்)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதி காலத்தில் வாழ்ந்தவர்.
"https://tamilar.wiki/index.php?title=குறுந்தொகை_உரை&oldid=17204" இருந்து மீள்விக்கப்பட்டது