காவத்தை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காவத்தை
காவத்தை is located in இலங்கை
காவத்தை
ஆள்கூறுகள்: 6°34′48″N 80°34′14.88″E / 6.58000°N 80.5708000°E / 6.58000; 80.5708000


6°34′48″N 80°34′14.88″E / 6.58000°N 80.5708000°E / 6.58000; 80.5708000

காவத்தை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 258 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
42083
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70150
 - +9445
 - SAB

காவத்தை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.காவத்தை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக அலகான பிரதேச செயளர் பிரிவினதும் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

காவத்தை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 258 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 42083 31882 2396 6465 1292 38 10
கிராமம் 32123 29700 519 744 1118 33 12
தோட்டப்புறம் 9960 2182 1877 5721 174 5 1

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 42083 31924 7901 1396 526 327 9
கிராமம் 32123 29700 1115 1117 142 40 9
தோட்டப்புறம் 9960 2224 6786 279 384 287 0

கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல்

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/ஆரம்பம் வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/உடல் வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/உடல் வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/உடல் வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/உடல் வார்ப்புரு:தகவல் சட்டம் இலங்கை தேர்தல் முடிவுகள்/முடிவு மூலம்:[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://tamilar.wiki/index.php?title=காவத்தை&oldid=38836" இருந்து மீள்விக்கப்பட்டது