எம்பிலிபிட்டியா
ஆள்கூறுகள்/Coordinates: 7°05′59″N 81°24′0″E / 7.09972°N 81.40000°E
எம்பிலிபிட்டியா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எம்பிலிபிட்டியா ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு தென்கிழக்குத் திசையில் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது மாத்தரையும், அம்பாந்தோட்டையயும் இணைக்கும் பெருந்தெருவும், வெல்லவாயா மற்றும் மொனராகலையும் இணைக்கும் பெருந்தெருவும் சந்திக்கும் இடத்தில் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திரிக்கா வாவி நகரத்துக்கு அருகில் காணப்படுகிறது. மேலும், இப்பிரதேசத்துக்கு அருகாமையில், சுமார் 26 கி.மீ. தூரத்தில் இலங்கயில் யானைகளுக்கு பிரசித்தமான உடவளவை வானோத்தியானம் அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
இப்பிரதேசம், இலங்கையின் புவியியல் பிரிவான அன்சமவெளியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 185 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 29.4 பாகை செல்சியஸ் ஆகும். இப்பிரதேசம் இலங்கயின் உலர் வலயம் என அழைக்கப்படும் காலநிலை பிராந்தியத்தில் அமைந்துள்ளது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1524 மி.மீ. ஆகும்.
மக்கள்
இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எம்பிலிபிட்டியா நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.
இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:[1]
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 118,307 | 118,041 | 167 | 5 | 62 | 11 | 21 |
கிராமிய | 118,234 | 117,968 | 167 | 5 | 62 | 11 | 21 |
தோட்டப்புரம் | 73 | 73 | 0 | 0 | 0 | 0 | 0 |
சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:[2]
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 118,307 | 117,664 | 95 | 101 | 303 | 141 | 3 |
கிராமிய | 118,234 | 117,592 | 95 | 101 | 302 | 141 | 3 |
தோட்டப்புரம் | 73 | 72 | 0 | 0 | 1 | 0 | 0 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.மரக்கரி பயிர் செய்கையும் பழத்தோட்டங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இப்பிரதேசம் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. எனவே சிறிய அளவில் இரத்தினக் கல் அகழ்வும் மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.
இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:
- இரத்தினபுரி
- பெல்மதுளை
- பலாங்கொடை
- எகலியகொடை
- இறக்குவானை
- பொகவந்தலாவை
- குருவிட்டை
- எம்பிலிபிட்டியா
அண்மைய வரலாறு
1989 ஆண்டு கடைசி காலப்பகுதியில் நகரத்தின் பிரபால பாடசாலை மாணவர்கள் 24 உட்பட மொத்தம் 25 பேர் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு[3] இராணுவ முகாமுக்குள் புதைக்கபட்டனர்.[4] இப்போது குறிப்பிட்ட பாடசாலையின் முன்னால் அதிபர் உட்பட பல இராணுவ அதிகாரிகளுக்கு தண்டணை வழாங்கப்பட்டுள்ளது. மேலும் பல பேர் விசாரிக்கப்படவேண்டு என்பது ஆசிய மனித உரிமைகள் ஆணைகுழுவின் கருத்தாகும்.[4]
உசாத்துணைகள்
இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை |