காளை (திரைப்படம்)
காளை | |
---|---|
இயக்கம் | தருண் கோபி asst director சேது |
தயாரிப்பு | GK Films Corporation |
இசை | ஜி.வி.பிரகாஷ் குமார் |
நடிப்பு | சிலம்பரசன் வேதிகா மீரா சோப்ரா சங்கீதா லால் சீமா சந்தானாம் |
ஒளிப்பதிவு | நிரவ் சா |
வெளியீடு | ஜனவரி 14, 2008[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ. 45 மில்லியன் |
காளை (Kaalai) தருன் கோபி இயக்கத்தில் வேதிகா, மீரா சோப்ரா, சங்கீதா ஆகியோருடன் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்க 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்துக்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னையில் இருந்து மதுரை, மோசமானவன், அகராதி போன்றப் பெயர்கள் இப்படத்துக்கு முன்மொழியப்பட்டன.
கதைச்சுருக்கம்
இத்திரைப்படத்தில் மூன்று காதாபாத்திரங்கள் ஜீவா என்றப் பெயரைக் கொண்டுள்ளன இதன் மூலம் திரைப்படத்தின் தொடக்கத்தில் சுவாரசியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜீவாவின் (சிலம்பரசன்) பாட்டி பத்து வயதாக இருக்கும் போது கிராமத்தில் கள்ளச் சாரயம் காய்ச்சிய 5 பேரை கொலை செய்துவிட்டு சிறைச் செல்கிறார். சிறையிலிருந்து திரும்பும் அவரை கிராம மக்கள் தமது தலைவியாக பதவியேற்றுகின்றனர். அவரது ஆட்சியின் கீழ் கிராமத்தில் தீய நடவடிக்கைகள் இல்லாமல் நல்லாட்சி நிலவுகிறது. இதன் போது அங்கே வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் அக்கிராமத்தில் பிழை செய்யும் ஒருவரையேனும் பிடிக்க முற்பட்டு தோல்வியடைகிறார். இதனால் கோபமுற்ற காவல்துறை அதிகாரி சிம்புவின் பாட்டியை உயிருடன் எரிக்கின்றார்.
இதனால் கோபமுற்ற ஜீவா (சிலம்பரசன்) அவரை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதே கதையின் மிகுதி பாகமாகும்.
பாத்திரங்கள்
- சிலம்பரசன் ... ஜீவா
- வேதிகா ... பிருந்தா
- லால் ...ஜீவானந்தம் ஐபிஎஸ்
- சுலில் குமார் ...ஜீவா
வெளியிணைப்புகள்
- காளை இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-01-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Sizzling Kaalai". Galatta.com இம் மூலத்தில் இருந்து 2008-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080121084316/http://tamil.galatta.com/entertainment/livewire/id/Sizzling_Kaalai_13017.html. பார்த்த நாள்: 11 January.