காயத்திரி ரேமா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காயத்திரி ரேமா
பிறப்புஇந்திய ஒன்றியம், கேரளம்
மற்ற பெயர்கள்காயத்ரி ஐயர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போது வரை

காயத்திரி ரேமா (Gayatri Rema) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் டூரிங் டாக்கீஸ் (2015) என்ற திரைப்படத்தில் முதல் முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு , ஒறுத்தல் (2016) மற்றும் சாயா (2017) ஆகிய தமிழ் படங்களில் தோன்றினார். [1] [2]

தொழில்

காயத்திரி ரேமா டூரிங் டாக்கீஸ் (2015) என்ற கதைத் தொகுதி திரைப்படத்தில் அறிமுகமானார். முன்னணி இயக்குநரான எஸ். ஏ. சந்திரசேகர் பரிந்துரைக்குப் பின்னர் இப்படத்தில் இவர் நடித்த தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்த படம் வணிக ரீதியாக சிறப்பானதாக ஆகவில்லை. காயத்ரி பின்னர் மற்றொரு குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படமான ஒறுத்தலில் நடித்தார். அப்படத்தினை விநியோக உரிமையை நடிகர் ஜெய் ஆகாஷ் வாங்கிய பின்னர் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. [3]

2017 ஆம் ஆண்டில், பழனிவேல் இயக்கி, தயாரித்த சாயா என்ற திகில் படத்தில் காயத்ரி ரெமா ஒரு கிராமத்து பெண்ணாக நடித்தார். சந்தோஷ் கன்னா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோருடன் இவர் நடித்த இப்படமானது, 2017 பிப்ரவரியில் வெளியானது. [4] இவரின் அடுத்த படமாக நந்தாவுக்கு ஜோடியாக நடித்த வில்லங்கம் ஆகும். இதில் மீனாட்சிக்கு பதிலாக காயத்திரி நடிக்க முடிவு செய்யப்பட்டது. [5]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2015 டூரிங் டாக்கீஸ்
2016 ஒறுத்தல் வைஷ்ணவி
2017 சாயா மாலா
2017 ஹரஹர மஹாதேவகி ஸ்வேதா
2018 காசு மேலே காசு மைனா
2018 செம காயத்ரி
2018 மோகினி அம்புஜம்
2018 கரிமுகன்
2020 முகிலன் தேவி வலைத் தொடர்
2021 பேய் இருக்க பயமேன் [6]
2021 சிதம்பரம் ரயில்வே கேட்

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=காயத்திரி_ரேமா&oldid=22546" இருந்து மீள்விக்கப்பட்டது