காந்தியடிகள் நற்பணிக் கழகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காந்தியடிகள் நற்பணிக் கழகம்
காந்தியடிகள் நற்பணிக் கழகம்.GIF
அமைவிடம்
கும்பகோணம், தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1975
நிறுவனர்குருசாமி பாலசுப்பிரமணியன்
பள்ளி மாவட்டம்கும்பகோணம்
மாணவர்கள்500 [1]

காந்தியடிகள் நற்பணிக் கழகம், குருசாமி பாலசுப்பிரமணியன் என்பவரால் 1975-ம் ஆண்டு கும்பகோணத்தில் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் காலை மற்றும் மாலை வேலைகளில் இயங்கும் பள்ளிக்கூடம் ஆகும்.

ஆரம்ப காலம்

மளிகைக்கடை வைத்திருக்கும் குருசாமி பாலசுப்பிரமணியன், வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலை 6 முதல் 8 வரையிலும், மாலை 6 முதல் 9 வரையிலும் இலவசமாக பாடங்களைக் கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளார். 1975-ம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் வாடகைக் கட்டடத்தில் இது இயங்கியது.

உதவிகள்

குருசாமி பாலசுப்ரமணியன் தனது 3 நண்பர்களுடன் இணைந்து, காந்தியடிகள் நற்பணி மன்றம் என்ற இலவச கல்வி மையத்தை உருவாக்கினார். பொதுமக்களின் நன்கொடை உதவியுடன் 12 வகுப்பறைகள் கட்டப்பட்டு, இங்கு கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள்

இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை; இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் ஊதியம் பெறுவதில்லை. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் பலர் ஏற்கெனவே இங்கு படித்து, அரசுப் பணி உள்ளிட்ட பணிகளில் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இங்கு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பிற வகுப்புகள்

காந்தியடிகள் நற்பணிகழகத்தில் இந்தி வகுப்புகளும், போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்

உசாத்துணை