காடப்புறா கலைக்குழு
காடப்புறா கலைக்குழு (Kadapuraa Kalaikuzhu) 2023 ஆம் ஆண்டு ராஜா குருசாமியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முனீஷ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட், மைம் கோபி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சக்தி சினி புரொடக்சன்ஸ் என்ற பதாகைப் பெயரில் முருகானந்தம் வீரராகவன் மற்றும் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரித்தனர். திரைப்படம் 2023 சூலை 7 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- முனீஷ்காந்த் ராமதாஸ்
- காளி வெங்கட்
- மைம் கோபி
- ஹரி கிருஷ்ணன்
- சிறீலேகா இராசேந்திரன்
- சுவாதி முத்து
- சூப்பர் குட் சுப்பிரமணி
- ஆந்தகுடி இளையராசா
தயாரிப்பு
திரைப்படத்தின் ஒளிப்பதிவை வினோத் காந்தியும் படத்தொகுப்பை இராம் கோபியும் மேற்கொண்டனர்.[1] திரைப்படத்தின் முன்னோட்டம் 2023 சூன் 19 அன்று வெளியிடப்பட்டது.[2]
பாடல்கள்
இப்படத்திற்கு கென்றி இசையமைத்திருந்தார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அம்மாடி அம்மாடி" | பிரதீப் குமார் | 4:35 | |||||||
2. | "நாட்டு கூத்து" | மதிச்சயம் பாலா ஆந்தகுடி இளையராஜா போக் சுடார் இலட்சமி |
4:25 | |||||||
3. | "ரட்டுக்கு ரட்டுக்கு" | அந்தோனி தாசன் | 3:45 | |||||||
மொத்த நீளம்: |
12:45 |
வரவேற்பு
மாலை மலரின் ஒரு விமர்சகர், "காடப்புறா கலைக்குழுவை இரசிக்க முடியும்". என்று கூறினார்[3]. தினத்தந்தியின் ஒரு விமர்சகர் "மேற்கத்திய இசையின் வருகையால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து, அதை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாகிவிட்டதைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்குநர் இராஜா குருசாமி சொல்ல முயன்றிருக்கிறார்." என்று கூறினார்[4]. இந்து தமிழ் திசையின் ஒரு விமர்சகர் ஐந்து மதிப்பீட்டிற்கு 2/5 மதிப்பிட்டு, "இந்தக் கலைஞர்களின் குழு கிராமியக் கலைகளின் நிலையைப் பேசுவதால் ஈர்க்கிறது" என்று எழுதினார்[5]. தினமலர் விமர்சகர் ஒருவர் ஐந்து மதிப்பீடுகளுக்கு 2/5 மதிப்பீடுகளைக் கொடுத்து கலவையான விமர்சனங்களை அளித்தார்[6].
மேற்கோள்கள்
- ↑ "முனீஸ்காந்த் கரகாட்டம் ஆடும் 'காடப்புறா கலைக்குழு'" (in en) இம் மூலத்தில் இருந்து 2023-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230704063250/https://www.virakesari.lk/article/159126.
- ↑ டிவி, தந்தி (2023-06-19). "காளி வெங்கட் - முனீஷ்காந்தின் நடிப்பில் வெளியான 'காடப்புறா கலைக்குழு' ட்ரைலர்" (in ta) இம் மூலத்தில் இருந்து 2023-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230714054905/https://www.thanthitv.com/latest-news/kali-venkat-muneeshkanth-starrer-kadapura-kazhaikkuzhu-trailer-released-193903.
- ↑ maalaimalar (2023-07-08). "Kadapuraa Kalaikulu" (in ta) இம் மூலத்தில் இருந்து 2023-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230714054842/https://www.maalaimalar.com/movie-review/kadapuraa-kalaikulu-26424.
- ↑ தினத்தந்தி (2023-07-11). "காடப்புறா கலைக்குழு: சினிமா விமர்சனம்" (in ta) இம் மூலத்தில் இருந்து 2023-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230714054842/https://www.dailythanthi.com/Cinema/Review/katapura-kalaikulu-cinema-review-1005343.
- ↑ "திரை விமர்சனம்: காடப்புறா கலைக்குழு" (in ta). 2023-07-10 இம் மூலத்தில் இருந்து 2023-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230714054842/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1044871-kadappura-kalaikkuzhu-review.html.
- ↑ "காடப்புறா கலைக்குழு - விமர்சனம் {2.5/5} : காடப்புறா கலைக்குழு - கிராமிய மண் வாசம்... - Kadapura kalaikuzhu" (in en). https://cinema.dinamalar.com/movie-review/3323/Kadapura-kalaikuzhu/.