காசிம் புலவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காசிம் புலவர்
இயற்பெயர் காஸிம்
பிறந்தஇடம் காயல்பட்டினம், தமிழ்நாடு
பணி புலவர், ஸூபி ஞானி

காசிம் புலவர் ஓர் இசுலாமிய தமிழ், தமிழிசை அறிஞர் ஆவார். இவர் திருவடிக் கவிராயர் எனும் சான்றோரிடம் கல்வி கற்றார். கற்ற நூல்களுள் அருணகிரிநாதரின் திருப்புகழில் மிகவும் ஈடுபாடு கொண்டு தானும் அதுபோல் ஒரு நூல் இயற்ற விரும்பி நபிகள் நாயகத்திடம் அருள் வேண்டினார். அன்பரின் வேண்டுகோளைக் கேட்ட நபிகள்நாயகம் புலவரின் கனவில் தோன்றிப் ' பகரும்' என்று அடியெடுத்துக் கொடுக்க உடனே புலவரும் ' பகரு முருவிலி அருவிலி வெருவிலி' என்று தொடங்கித் திருநபிகள் நாயகத்தின் மீது ஒரு திருப்புகழ் நூலினைப் பாடினார். திருப்புகழுக்கு இணையான நபிகள் நாயகம் அவர்கள் மீதான திருப்புகழுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் 14 நூல்களை இயற்றி உள்ளார். சவ்வாதுப் புலவரால் 'மதுர கவி' என்று பாராட்டப்பட்ட பெருமையுடையவர் ஆவார்.

படைப்புகள்

உசாத்துணை

  • தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காசிம்_புலவர்&oldid=8528" இருந்து மீள்விக்கப்பட்டது