காங்கோ தமிழ்ச் சங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காங்கோ தமிழ்ச் சங்கம் (Congo Tamil Association), முன்னர் காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் (ட்ய்ய்க்கா க்கொஙொ) என்றழைக்கப்பட்டது) என்பது காங்கோ வாழ் தமிழர்களால் நடத்தப்படும் ஒரு தமிழ்ச்சங்கம் ஆகும். இது காங்கோ மக்களாட்சிக் குடியரசு தலைநகர் கின்சாசா பெருநகரில் வசிக்கும் காங்கோ தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் தமிழ்ச்சங்கமாகும். 2011 ஆகத்து இந்திய விடுதலை நாள் கொண்டாட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கமானது எண்ணற்ற விழாக்கள், கொண்ட்டாட்டங்கள், இலக்கிய விழாக்கள், தமிழ் முப்பெரும் விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. காங்கோ - கின்சாசா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இந்தசங்கம் செயற்படுகிறது. அதோடு தமிழ் மொழி, பண்பாடு இவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் விதமாக கின்சாசா வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கென்று ஞாயிறு தோறும் காங்கோ தமிழ்ப்பள்ளி செயற்பட்டு வருகிறது. இங்குள்ள தமிழர்களின் எழுத்தாற்றல் மற்றும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக காங்கோ தமிழ்ச்சாரல் என்ற மாத இதழ் மின்னிதழ் வடிவிலும் அச்சு வடிவிலும் வெளியிடப்பட்டது. தற்போது இவ்விதழ் ஒரிசா பாலு அவர்களின் ஆலோசனையின் படி ஆப்பிரிக்கத் தமிழ்ச்சாரல் என்ற மாத இதழாக ஆப்பிரிக்காவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுடய பங்களிப்புகளுடன் மின்னிதழாக மட்டும் வெளிவருகிறது.

மன்றத்தின் தலைவர்கள்

  • 2023 (நடப்பு) - திரு. சிதம்பரம்
  • 2022 - திரு. சந்தானராமன்
  • 2020 மற்றும் 2021 - திரு. இரா சுந்தர்
  • 2018 மற்றும் 2019 - திரு.சௌந்தரராசன்
  • 2017 - திரு.விக்டர் செயக்குமார்
  • 2016 - திரு. சுந்தர் ராசன்
  • 2015 - திரு.ராசக்குமார்
  • 2014 - திரு.சொக்கலிங்கம்
  • 2013 - திரு. செரால்டு முத்து
  • 2012 - திரு.சத்தியசீலன்
  • 2011 - திரு.ஆல்பர்ட்

சிறப்பு விழாக்கள்

  • இலக்கிய விழா
  • புத்தக வெளியீட்டு விழா
  • தமிழ் முப்பெரும் விழா

காங்கோ தமிழ்ப்பள்ளி

காங்கோ தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் சொல்லித்தரும் பள்ளியாக காங்கோ தமிழ்ப் பள்ளி இயங்குகிறது. இது 2013 ஆம் ஆண்டு முதல் ஞாயிறு தோறும் EIS பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காங்கோ_தமிழ்ச்_சங்கம்&oldid=26279" இருந்து மீள்விக்கப்பட்டது