கள்வனின் காதலி (1955 திரைப்படம்)
கள்வனின் காதலி | |
---|---|
இயக்கம் | வி. எஸ். ராகவன் |
தயாரிப்பு | |
கதை | கல்கி |
இசை | |
நடிப்பு | சிவாஜி கணேசன் பானுமதி ராமகிருஷ்ணா டி. டி. குசலகுமாரி |
வெளியீடு | 1955 |
ஓட்டம் | 190 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கள்வனின் காதலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் பானுமதியும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இவர்களைத் தவிர டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி, டி. எஸ். துரைராஜ், குசலகுமாரி, எஸ். ஆர். ஜானகி, டி. பாலசுப்ரமணியம், கே. ஆர். செல்லம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழில் புகழ் பெற்ற நாவலாசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தி, 1937 ஆம் ஆண்டு முதல் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக எழுதிய கள்வனின் காதலி என்னும் சமூகப் புதினமே அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[1]
கதைச் சுருக்கம்
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கணக்கப்பிள்ளை முத்தையா (சிவாஜி கணேசன்) ஒரு அப்பாவி. தன் தங்கையின் நல் வாழ்வுக்காக தன்னையே வருத்திக் கொள்கிறான். ஆனால் கொடியவர்களால் அவனது தங்கை பாழ்படும் போது சகிக்க முடியாமல் முரடனாகிறான். நடுவில் அவனுக்கு இருக்கும் ஒரே உதவி அவனது காதலி கல்யாணி (பானுமதி). தொடர்ந்து வரும் சோதனைகளால் பொலிசாரால் தேடப்படும் அளவில் முத்தையன் கள்வனாகிறான். கடைசியில் அவன் பொலிசாரால் சுடப்பட்டு இறக்கிறான்.
பாடல்கள்
இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் கண்டசாலாவும் பானுமதியும் பாடிய 'வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு' என்னும் பாடல் பாரசீக மொழியில் உமர் கய்யாம் எழுதிய பாடலொன்றத் தழுவி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் எழுதிய பாடலாகும்.
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (22 நவம்பர் 2008). "Kalvanin Kadhali 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article1429739.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.