களவழி நாற்பது பழைய உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

களவழி நாற்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

இந்த உரை ஏனைய பழைய உரைகளைப் போலத் தெளிவான பொழிப்புரையாக உள்ளது. எனினும் பாடலிலுள்ள சில தொடர்கள் உரையிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே தமிழறிஞர்களே இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

வஞ்சி என்னும் ஊரை இந்நூலாசிரியர் கருவூர் எனக் குறிப்பிடுகிறார்.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
  2. அனந்தராமையர் பதிப்பு 1931
"https://tamilar.wiki/index.php?title=களவழி_நாற்பது_பழைய_உரை&oldid=15677" இருந்து மீள்விக்கப்பட்டது