கல்பகம் சுவாமிநாதன்
கல்பகம் சுவாமிநாதன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1922 சேதலப்பதி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | ஏப்ரல் 6, 2011 | (அகவை 88)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | வீணைக் கலைஞர், பேராசிரியை |
இசைக்கருவி(கள்) | வீணை |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
வீணை |
கல்பகம் சுவாமிநாதன் (ஆகத்து 15, 1922 - ஏப்ரல் 6, 2011) தமிழ்நாட்டின் பிரபல வீணை இசைக்கலைஞரும் கருநாடக இசைப் பேராசிரியையும் ஆவார்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சேதலப்பதி கிராமத்தில் பிறந்தவர் கல்பகம். தனது எட்டாவது அகவையில் தாயார் அபயாம்பாளிடம் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர்[2], டி.எல். வெங்கடராம ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார் ஆகியோரிடம் முறையாகக் கருநாடக இசையைப் பயின்றார்.
கல்பகம் சுவாமிநாதனை ஆசிரியத் தொழிலுக்குக் கொண்டு வந்தவர் டைகர் வரதாச்சாரியார். கலாசேத்திராவில் 1940கள், 1950களில் வீணை கற்பித்தார். 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார்.
விருதுகள்
- கலைமாமணி, தமிழ்நாடு அரசு விருது
- சங்கீத நாடக அகாதமி விருது, இந்தியக் குடியரசுத் தலைவர் விருது[2]
- சங்கீத கலை ஆச்சாரியார் விருது
மேற்கோள்கள்
- ↑ 'A vidushi’s life of penance' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (ஏப்ரல் 14, 2011) எழுதப்பட்ட கட்டுரை.
- ↑ 2.0 2.1 RAMNARAYAN, GOWRI (27 July 2007). "Gifted, self-effacing". The Hindu. Archived from the original on 15 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 January 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
- கல்பகம் சுவாமிநாதன் வழங்கிய செவ்வி பரணிடப்பட்டது 2015-05-11 at the வந்தவழி இயந்திரம்
- Veena exponent passes away, த இந்து, ஏப்ரல் 7, 2011
- The Veena: instrument of devotion, ஏபிசி, ஆத்திரேலியா
- சித்தீஸ்வராய நமஸ்தே, நீலாம்பரி ராகம், ஆகத்து 5, 2004 ஒலிப்பதிவு
- hastivadanAya namastubhyam, rAga navarOj, செப் 15, 2007 ஒளிப்பதிவு