கலியாணன் கதை
Jump to navigation
Jump to search
கலியாணன் கதை என்னும் நூல் இன்று இல்லை. எனினும் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தி உரையிலிருந்து அறிகிறோம். இரண்டு இடங்களில் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் இந்த விருத்தியுரையில் உள்ளன.
- இது 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்
- இடையிட்டுத் தொகுத்த எதுகை அந்தாதி கலியாணன் கதை. [1]
- உதயணன் கதையும் கலியாணன் கதையும் ‘என்’ என்னும் அசைச்சொல்லான் முடியும் நிலைமண்டிலம். [2]
இந்தக் குறிப்புகளால் கலியாணன் கதை என்னும் நூல் சிலப்பதிகாரம் போல ‘என்’ என முடியும் ஆசிரியப் பாக்களால் ஆன நூல் என்பது தெரியவருகிறது. இதில் கூறப்படும் கலியாணன் சீவகனைப் போல் பல மனைவியரை மணந்தவன் ஆகலாம்.
கருவிநூல்
- அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம், (பழைய விருத்தியுரையுடன்), Madras Government Oriental manuscripts Series No. 66, 1969
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005