கலாமண்டலம் ராதிகா
டாக்டர் கலாமண்டலம் ராதிகா (Dr. Kalamandalam Radhika), ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், நடன இயக்குனர், ஆராய்ச்சி அறிஞர், ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் ஆவார். மோகினியாட்டத்துக்காக கேரள சங்கீத நாடக அகாதமி விருதை வென்ற முதல் வெளி-மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஆவார். இவர், குச்சிபுடி, பரதநாட்டியம், கதகளி மற்றும் பிற நடன வடிவங்களைக் கற்றுக்கொண்டவராக உள்ளார்.
ஆரம்ப ஆண்டுகள் மற்றும் கல்வி
டாக்டர் கலாமண்டலம் ராதிகா, பெங்களூரில் பட்டய கணக்காளரான கே.கே.நாயருக்கு பிறந்தார். குரு ராஜனின் கீழ் தனது மூன்று வயதில் நடனம் கற்கத் தொடங்கிய இவர், பின்னர் முத்தர் ஸ்ரீ நாராயண பணிக்கரிடம் கதகளி கற்றார். மேலும், குரு பொன்னையாபிள்ளையிடம் மிருதங்கம் கற்றுக் கொண்டார். 1960 களின் பிற்பகுதியில், அவர் செருத்துருத்திக்குச் சென்று நான்கு ஆண்டுகள் கலாமண்டலத்தில் தங்கினார். சின்னம்மு அம்மா, கலாமண்டலம் சத்தியபாமா மற்றும் கலாமண்டலம் பத்மநாபன் நாயர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றதால், இவர் ஒரு திறமையானவராக வடிவமைக்கப்பட்டார். மறைந்த கலாமண்டலம் கல்யாணி குட்டி அம்மாவின் கீழ் இவர் பெற்ற பயிற்சியும், கதகளியில் கலாமண்டலம் பத்மநாப ஆசானின் கீழ் பெற்ற பயிற்சியும் இவரது திறமைகளை உலகறியச் செய்தன. [1]
நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர்
இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தியுள்ளார். இவர் யுனெஸ்கோ சர்வதேச நடனக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள், சார்க் பிரதிநிதிகள், தூதர்கள், சோவியத் பிரதிநிதிகள் மற்றும் பிறருக்காகவும் தனது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். [2] மோகினியாட்டத்தின் ஆழத்தை ஆராய, இவர் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மேலும் 1940 களின் முற்பகுதியில் மோகினியாட்டம் நடனக் கலைஞர்கள் பயன்படுத்திய அடிப்படை நடன அசைவுகள், அணிந்திருந்த நகைகள் மற்றும் ஆடைகளை மீண்டும் ஒழுங்கமைத்துள்ளார். [3] [4] இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வருகை, கிறிஸ்துவின் பிறப்பு உள்ளிட்ட விவிலிய கருப்பொருள்களை இவர் இயக்கி நடனமாடியுள்ளார்.
ராதிகா அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அட்லாண்டா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பட்டறைகளை நடத்தியுள்ளார். இத்தாலிய பாதிரியார் ஜெரார்டு இயக்கிய விவிலிய திரைப்படம் இதோ உன் அம்மாவுக்காக என்னும் தலைப்பில் வெளிவந்தது. இதில், ராதிகா நடனமாடியுள்ளார். அவர் பல மொழிகளில் ஐந்து விதமான மோகினியாட்டத்தின் நடன அமைப்புகள், மூன்று வர்ணங்கள் மற்றும் எண்ணற்ற பதங்களை இயற்றி நடனமாடியுள்ளார். மோகினியாட்டத்தில் விவிலிய கருப்பொருள்களை நிகழ்த்தியதற்காக அவர் விமர்சிக்கப்பட்டார். ஆனால் வீரப்பமொய்லி, குவெம்பு, பாதிரியார் ஆபெல், அம்ருத் சோமேஷ்வர் மற்றும் புனித சவரா ஆகியோர் இவர் மூலமாக நல்ல வரவேற்பைப் பெற்றனர். [5]
நூலாசிரியர்
ராதிகா நடன மற்றும் இசை இதழான ஸ்ருதிலயாவுக்காக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 'பள்ளிகளில் நடனக் கல்வி' என்ற தலைப்பில் என்.சி.இ.ஆர்.டி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மோகினியாட்டம் குறித்த ஒரு கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து வெளியிடப்பட்ட இந்து வார இதழுக்காக கேரளாவின் தேவதாசி அமைப்பு பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். மேலும் கேரளாவின் மோகினியாட்டம்-தி லிரிக்கல் டான்ஸ் மற்றும் மாத்ருபூமி வெளியிட்ட 'முத்ரா' போன்ற புத்தகங்களின் ஆசிரியராக உள்ளார். [6] [7]
குறிப்புகள்
- ↑ "Entertainment Thiruvananthapuram / Personality : Dancer and philanthropist". 2005-04-01. http://www.thehindu.com/fr/2005/04/01/stories/2005040101700200.htm.
- ↑ "Kerala Interviews,Interview of the week". Kerala.com. Archived from the original on 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kalamandalam Radhika is one of the finest exponents of Mohiniattam". Blackboard.lincoln.ac.uk. Archived from the original on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ "Two decades in Art Journalism". GS Paul. 2000-03-17. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ "Home". Thecmsindia.org. Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ Radhika, Kalamandalam (1 January 2004). "Mohiniattam: The Lyrical Dance of Kerala". Mathrubhumi Books – via Google Books.
- ↑ "Review - Atlanta hosts the 'Ambassador of Mohiniattom' by Arun P Madangarli". Narthaki.com. 2003-09-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.