கரு. திருவரசு
Jump to navigation
Jump to search
கரு. திருவரசு
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கரு. திருவரசு |
---|---|
பிறந்ததிகதி | 1936 |
இறப்பு | சூன் 8, 2012 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
கரு. திருவரசு (1936- சூன் 8, 2012) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவரது 'அன்பு' என்ற முதல் கவிதை தமிழ் முரசு வெளியீடான 'மாணவர் மணிமன்ற மலர்' இதழில் வெளிவந்துள்ளது. அதைத் தொடர்ந்து தனிக்கவிதைகள், இசைப்பாடல்கள், வானொலி, மேடைக்கவியரங்கக் கவிதைகள், 'அழகோவியம்' எனும் கதைப்பா (குறுங்காவியம்). இலக்கியக் கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- 'வண்ணங்கள்' கவிதைகள் தொகுப்பு, (1980-1985 வரை மலேசியப் பள்ளிகளில் இடைநிலைப்பள்ளிகளில் பாட நூலாகப் படிக்கப்பட்டது.)
- 'முதல் மலர்' இசைப்பாடல்கள் தொகுப்பு, (1981) (மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் தேசியப் பேரவையினால் 1990 வரை மலேசியாவில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்ததென தேர்ந்தெடுக்கப்பட்டது.)
- 'கவியரங்கில் திருவரசு' கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு. (1999).
- 'நால்வர் கவிதைகள் - 1960-களில் மு.சேது, கே. முகம்மது யூசுப், மைதீ. அசன்கனி, கரு.திருவரசு ஆகியோர் இணைந்து எழுதியது
பரிசில்களும், விருதுகளும்
- வண்ணக் கவிஞர்
- மலேசிய சமுதாய சேவை மற்றும் சாதனைகளுக்கான பி.பி.என். விருது