கருணாமிர்தம்
Jump to navigation
Jump to search
கருணாமிர்தம் என்னும் நூல் சைவ இலக்கியங்களில் ஒன்று. இது சிவஞான வள்ளல் என்பவரால் செய்யப்பட்டது. 64 விருத்தங்கள் கொண்டது. பெரும்பாலான விருத்தங்கள் “திருப்புலி வனத்துளானே” என முடிகின்றன. புலிவனம் என்பது புலி பூசித்த தலம் என்பது ஐதிகம். புலி திரிந்த காடு எனக் காண்பது அறிவியல். [1] இந்தப் புலிவனம் செங்கற்பட்டு வட்டத்தில் உள்ள ஓர் ஊர் என்கின்றனர்.
இதன் பாடல் ஒன்றில் சிவவாக்கியார் என்னும் சித்தர் பெயர் சிவாக்கியார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பாடல் ஒன்று:
- சைவ சித்தாந்தம் எல்லாம் தானவன் ஆகி நிற்றல்
- மையறு வேத சித்தம் மற்றது தானே என்னல்
- உய்வகை இரண்டும் ஒன்று என்று ஓதி என் உயிர்க்கு லாபம்
- செய்த சற்குரவன் நீயே திருப்புலி வனத்துளானே
இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ திருச்சி மாவட்டத்தில் புலிவலம் என்னும் ஊர் உள்ளது.