கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கருங்குழி
—  பேரூராட்சி  —
கருங்குழி
இருப்பிடம்: கருங்குழி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°33′N 79°54′E / 12.55°N 79.9°E / 12.55; 79.9Coordinates: 12°33′N 79°54′E / 12.55°N 79.9°E / 12.55; 79.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் மதுராந்தகம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

12,485 (2011)

2,081/km2 (5,390/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/karunguzhi


கருங்குழி, (Karunguzhi) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். கருங்குழியில் உள்ள ரங்கநாதர் மலை சிறப்புப் பெற்றது.

அமைவிடம்

சென்னை - திருச்சி வழித்தடத்தில் அமைந்த கருங்குழி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் கருங்குழியில் உள்ளது. இதன் கிழக்கில் திருக்கழுகுன்றம் 24 கிமீ; மேற்கில் உத்திரமேரூர் 22 கிமீ; வடக்கில் செங்கல்பட்டு 22 கிமீ; தெற்கில் மதுராந்தகம் 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 98 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,075 வீடுகளும், 12,485 மக்கள்தொகையும் கொண்டது.

மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

சிறப்புகள்

கருங்குழி பேரூராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசை 15 ஆகத்து 2022 அன்று பெற்றது.[5]

மேற்கோள்கள்