கம்பன் புகழ் விருது
Jump to navigation
Jump to search
கம்பன் புகழ் விருது என்பது அகில இலங்கைக் கம்பன் கழகம் உலகளாவியத் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கிவரும் விருது ஆகும்.
வி.ரி.வி. பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக் 'கம்பன்புகழ் விருது' ஒவ்வொரு ஆண்டும் கொழும்புக் கம்பன் விழாவில் கேடயம், பொன்னாடை, ரூபா ஒரு இலட்சம் பொற்கிழி ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.
விருது பெற்றோர்
- திரு.க.சிவராமலிங்கம் (2000)
- திரு.ஜி. கே. சுந்தரம் (2001)
- அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி (2002)
- டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி (2003)
- திரு.கோவிந்தசாமி முதலியார் (2004)
- திருமதி அபிராமி கைலாசபிள்ளை (2005)
- கவிக்கோ அப்துல் ரகுமான் (2006)
- பேராசிரியர் சோ. சத்தியசீலன் (2007)
- டி. என். சேசகோபாலன், இசை அறிஞர் (2008)
- பத்மா சுப்ரமணியம், நாட்டியக் கலைஞர் (2011)
- ஔவை நடராசன், தமிழறிஞர் (2012)
- சிலம்பொலி செல்லப்பன், தமிழறிஞர் (2013)
- பாம்பே ஜெயஸ்ரீ, கருநாடக இசைப் பாடகி (2014)
- வண. இராயப்பு யோசப், முன்னாள் ஆயர் (2015)
- பி. சுசீலா, பின்னணிப் பாடகி (2016)[1]
- பேராசிரியர் சாலமன் பாப்பையா (2017)
- கத்ரி கோபால்நாத் (2018)
மேற்கோள்கள்
- ↑ "பி. சுசீலாவிற்கு விருது பிரதமர் வழங்கி கௌரவிப்பு". தினகரன் வாரமஞ்சரி. 28 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016.