கனவகுப்பு
Jump to navigation
Jump to search
கனவகுப்பு என்னும் நூல் அருணகிரிநாதர் பாடினார் என அடைவாக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் 18 திருவகுப்புகள் பாடியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு இதனையும் அருணகிரிநாதர் பாடினார் என்றனர்.
கனவகுப்பு நீண்டதொரு சந்தநூல். இதில் சாளுவத் திருமலைராயன் குறிப்பிடப்பட்டுள்ளான். இவன் காளமேகப் புலவரைப் போற்றிப் பாதுகாத்தவன். இவர்களது காலம் 15 ஆம் நூற்றாண்டு. அருணகிரிநாதரும் இதே நூற்றாண்டுதான் என்றாலும் திருமலைராயன் குறிப்பை உள்ளத்தில் கொண்டு இதனைக் காளமேகப்பலவர் பாடினார் எனக் கருதலாம். [1]
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பக்கம் 55, 2005