கனடாவில் தமிழ் மக்களின் பரம்பல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
கனடாவில் தமிழ் மக்களின் பரம்பல் என்பது கனடாவில் புவியியல் நோக்கில் தமிழ்ச் சமூகங்கள் எங்கு எங்கு உள்ளன, ஏன் அப்படி உள்ளன என்பது பற்றியது ஆகும். பெரும்பான்மைத் தமிழர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்தாக கியூபெக்கிலும், பிரிட்டிசு கொலம்பியாவிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் பொதுவாக பெரும் நகரங்கள், அல்லது புறநகர்ப் பகுதிகளிலேயே பெரும்பாலும் வசிக்கிறார்கள்.
ஒன்ராறியோ
கனடியத் தமிழர்களில் பெரும்பான்மையினர் ஒன்ராறியோவில் வசிக்கிறார்கள். முதலில் குடிவந்தவர்கள் ரொறன்ரோ மைய நகரத்தில் வெலசிலி, ரீயென்ற் பார்க், லோரன்சு, கிங் அண் டவ்ரின் போன்ற பகுதிகளில் பெரும் தொகையில் வசித்தார்கள். 1990 களில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்தால் வெலசிலி பகுதி குட்டி யாழ்ப்பாணம் எனவும் அறியப்பெற்றது. இதே காலப் பகுதியில் அதற்கு அருகாமையில் இருந்து குட்டி இந்தியா என அழைக்கப்படும் யராட் வீதியில் அமைந்த பல கடைகள் தமிழ்க் கடைகளாக இருந்தன. இப்பொழுது ரொறன்ரோவின் கிழக்குப் பகுதி நகரங்களான இசுகார்புரோ, மார்க்கம் ஆகிய பகுதிகளில் செறிவாக வாழ்கிறார்கள். ரொறன்ரோவின் மேற்குப் பகுதியில் உள்ள மிசசாகா, பிறம்டன் பகுதிகளிலும் தமிழர்கள் தொகையாக வாழ்கிறார்கள்.
ரொறன்ரோ புறநகர்ப் பகுதியைத் தவிரித்து ஒன்ராறியோவில் ஒட்டாவா, வேட்டர்லூ, கோன்வெல் போன்ற நகரங்களிலும் கணிசமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
கியுபெக்
கனடாவின் கிழக்குப் பகுதியில் இறங்கிய தமிழர்கள் வந்த நகரமாக கியுபெக்கின் மொன்றியால் விளங்கியது. இங்கு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படுவது ஒப்பீட்டளவில் இலகுவாக இருந்தாலும் பல தமிழர்கள் அங்கு சென்று வாழ்ந்தார்கள். இவ்வாறு மொன்றியாலில் ஒரு செறிவான தமிழ்ச் சமூகம் இருக்கிறது. எனினும் குடியுரிமை பெற்ற பின்பு ஆங்கிலக் கல்வி விரும்பி பலர் ரொன்ரோ நோக்கி நகரலானார்கள்.
பிரிட்டிசு கொலம்பியா
கனடாவின் மேற்குப் பகுதியான பிரிட்டிசு கொலம்பியாவில் கப்பல்கள் ஊடாகவும் பிற வழிகளிலும் இறங்கியவர்களில் பலர் அங்கேயே குடியமர்ந்தார்கள்.