கணபதி பட்
பண்டிட் கணபதி பட் (Pandit Ganapati Bhat) கணபதி பட் ஹசனகி என்றும் பிரபலமாக அறியப்படும் இவர் ஓர் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் கிரானா பள்ளி - குவாலியர் பள்ளியைச் சேர்ந்தவர். தற்போது, ஹூப்ளியிலுள்ள புகழ்பெற்ற டாக்டர் கங்குபாய் ஹங்கல் குருகுல அறக்கட்டளையில் வசிக்கும் குருவாக உள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசனகி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். [1] [2]
கலையும் தொழிலும்
பண்டிட் கணபதி பட் இளம் வயதிலேயே இந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டினார். இவர் கிரானா, குவாலியர் மற்றும் பாட்டியாலா பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட தார்வாட்டிலிருந்து வந்த மேதையான பசவராஜ் ராஜ்குரு என்பவரிடம் சீடராக இருந்தார். [3].
இவர், சித்தார் இசையில் தனது பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் இந்துஸ்தானி குரல் இசையில் ஈர்க்கப்பட்டார். சி.ஆர்.வியாசுடன் சேர்ந்து படித்தார். ஹசனகியில் உள்ள குருகுலம் பாணி அமைப்பில் பல இளம் இசைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து முக்கிய மன்றங்களிலும்இவர் த்னது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். பாஸ்டன், சிகாகோ, டாலஸ், பிலடெல்பியா, பிட்ஸ்பர்க், நியூயார்க்கு, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் போன்ற பல நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகளிவருக்கு வெளிநாடுகளில் ரசிகர்களைப் பெற்றுள்ளன.
விருதுகள்
- 2015 இல் புட்டராஜ் கவாய் விருது [4]
- 2016 இல் சவாய் காந்தர்வ புரஸ்கார் [5]
- நிஜகுனா புரந்தர விருது 2017 [6]
குறிப்புகள்
- ↑ M. Madan Mohan (2005-04-08). "Entertainment Bangalore: Native notes". The Hindu இம் மூலத்தில் இருந்து 2008-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080118103209/http://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040802380200.htm. பார்த்த நாள்: 2013-02-23.
- ↑ Prince Rama Varma (2007-02-21). "Pandit Ganapathi Bhatt of Hasanagi, Hindustani Vocalist". webindia123.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23.
- ↑ "Label with a cause". The Music Magazine (e-zine). 2001-07-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23.
- ↑ "Puttaraj Gawai Award for Pandit Ganapati Bhat Hasanagi" (in en-IN). The Hindu. 2015-03-04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/karnataka/puttaraj-gawai-award-for-pandit-ganapati-bhat-hasanagi/article6958794.ece.
- ↑ "Sawai Gandharva Puraskar for Ganapati Bhat Hasanagi" (in en-IN). The Hindu. 2016-09-26. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/karnataka/Sawai-Gandharva-Puraskar-for-Ganapati-Bhat-Hasanagi/article14999840.ece.
- ↑ "Hampa Nagarajaiah bags prestigious Pampa award". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/hampa-nagarajaiah-bags-prestigious-pampa-award/articleshow/56492922.cms.
வெளி இணைப்புகள்
- Interview with Bhat பரணிடப்பட்டது 2021-01-21 at the வந்தவழி இயந்திரம்
- About Bhat[தொடர்பிழந்த இணைப்பு]
- The Hindu on Bhat பரணிடப்பட்டது 2008-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Bhat's disciple
- The Hindu 1 December 2006 Award
- Smt. Vatsalataayi Bhimsen Joshi Puraskar Award 2006
- The Hindu 5 March 2015 Putturaj Gawai Award
- Indian Express 4 February 2016
- Dr. Gangubai Hangal Gurukul Trust .. Our Gurus பரணிடப்பட்டது 2018-02-25 at the வந்தவழி இயந்திரம்