கட்டுடை
கட்டுடை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயளாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இது மானிப்பாய் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குள் அடங்குகிறது.[1] யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதியில் மானிப்பாய்ச் சந்திக்கும் சண்டிலிப்பாய்ச் சந்திக்கும் இடையில் வீதியிலிருந்து மேற்கில் இவ்வூர் உள்ளது. கட்டுடை மானிப்பாயிலிருந்து ஏறத்தாழ 4 கிமீ தொலைவிலும், யாழ்ப்பாணத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது.
நிறுவனங்கள்
இந்த ஊரில் ஒரேயொரு அரசாங்கப் பாடசாலை உள்ளது. கட்டுடை சைவ வித்தியாலயம் எனப் பெயர் கொண்ட இப்பாடசாலை[2] ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள, ஆண் பெண் இருபாலாரும் கல்வி பயிலும் ஆரம்பப் பாடசாலை ஆகும். அரசாங்கத்தின் வசதி என்ற வகையில் இந்த ஊரில் ஒரு அஞ்சல் அலுவலகமும் உள்ளது.[3]
கட்டுடையில், அரசடிப் பிள்ளையார் கோயில் என்னும் ஒரு பிள்ளையார் கோயிலும், ஒரு வைரவர் கோயிலும் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 25.
- ↑ வலிகாம் தென்மேற்கு பிரதேச செயலக இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் பாடசாலைகளின் பட்டியல்.
- ↑ வலிகாம் தென்மேற்கு பிரதேச செயலக இணையத்தளத்தில் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் அஞ்சல் அலுவலக விபரங்கள்.