கடிகைமுத்துப் புலவர்
கடிகைமுத்துப் புலவர் உமறுப் புலவர் பெருமானுக்கு ஆசிரியராக விளங்கியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவர் பாடியனவாக 246 பாடல்கள் உள்ளன.[1] அவை மடக்கு, பின்முடுகு வெண்பா வெண்டுறை, முன்முடுகு வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கொச்சகம் முதலான யாப்பமைதிகளைக் கொண்டவை. இவை வெங்கடேசு ரெட்டன் (வெங்கடேசு ரெட்டமன்) என்பவன்மீது பாடப்பட்டவை. தலைவி ஒருத்தி வெங்கடேசு ரெட்டமன் மீது காதல் கொண்டு பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
இவரது பாடல் ஒன்று எடுத்துக்காட்டு
மடியில் வைத்து முலை பிடித்து வலிய முத்தமிட முகத்தில்
- வதனம் வைத்த மதன வித்தை வகை பிறக்க வவனுரைத்து
முடியுறைக்க நகமழுத்தி முதுகினிற் கைபட வணைத்து
- முறுகி மெத்த விறுகி வெட்க முழுதும் விட்டு மெலவசைத்து
நெடிய புட்கள் குரலெழுப்பி நிலைதரித்த விழியிமைக்க
- நினைவு மற்ற பரவசத்தி னிறைவெனக்கு வரமயக்கி
விடியு மட்டு மனுபவித்து வெங்கடேசு ரெட்டமன்
- விரக தாபமது தணித்த வேளை நல்ல வேளையே
அடிக்குறிப்பு
- ↑ தனிப்பாடல் திரட்டு பக்கம் 159 முதல் 196