ஓ மை கடவுளே
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஓ மை கடவுளே | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | அஷ்வத் மாரிமுத்து |
தயாரிப்பு | ஜி. தில்லிபாபு வழங்கியவர்கள்: அசோக் செல்வன் அபினயா செல்வன் |
இசை | லியோன் ஜேம்ஸ் |
நடிப்பு | அசோக் செல்வன் ரித்திகா சிங் வாணி போஜன் ஷா ரா |
ஒளிப்பதிவு | வைது அய்யண்ணா |
படத்தொகுப்பு | பூபதி செல்வராஜ் |
கலையகம் | ஹேப்பி ஹை பிகசர்ரஸ் |
விநியோகம் | சகதி பிலிம் பேகடரி ஆகசிஸ் பிலிம் பேகடரி |
வெளியீடு | வார்ப்புரு:Release date |
ஓட்டம் | 146 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஓ மை கடவுளே (Oh My Kadavule) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி கற்பனை காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை அஷ்வத் மரிமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷா ரா மற்றும் எம். எசு. பாசுகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படமானது திரையரங்குகளில் 14 பிப்ரவரி 2020 அன்று காதலர் தினத்தன்று வெளியானது.[3]
கதை
அர்ஜுன் எஞ்சியிருந்த தனது கல்லூரித் தேர்வுகளை முடித்ததைக் கொண்டாடும் விதமாக அர்ஜுன் (அசோக் செல்வன்), அனு (ரித்திகா சிங்), மணி (ஷா ரா) ஆகிய மூன்று நண்பர்களுடன் ஒரு பப்பில் விருந்துவைத்து கொண்டாடுவதாக படம் தொடங்குகிறது. அனு அர்ஜுனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்கிறாள். இதற்கிடையில் அர்ஜுன் தன்னை பள்ளிப் பருவத்தில் ஈர்த்த மீராவை (வாணி போஜன்) பார்க்கிறான். அவர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டிற்கு திரும்பும் வழியில், அர்ஜுன் அனுவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். ஏனெனில் அவள் தன் சிறந்த தோழி என்பதாலும், அவளை மறுக்க எந்த காரணமும் இல்லை என்பதாலும் ஆகும். ஒரு ஆண்டு கழித்து, அனுவுக்கும் அர்ஜுனுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். நீதிமன்றத்தில் அர்ஜுனுக்குப் பின்னால் அமர்ந்துள்ள ஒரு மனிதன் (ரமேஷ் திலக்) இன்று விவாகரத்து கிடைக்காது என்று கணித்து, அடுத்த 15 நிமிடங்களில் என்ன நடக்கும் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அர்ஜுன் அவரை கேலி செய்கிறான், ஆனால் அவர் தனது அறிமுக அட்டையைக் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அந்த மனிதன் கணித்து சொன்ன அனைத்து நிகழ்வுகளும் சரியாக நடக்கின்றன. அதாவது நீதிபதியிடம் விவாகரத்துக்கு இறுதி ஒப்புதல் கொடுக்கும் போது, அனு மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். இதனால் இவர்களது வழக்கு அன்று மாலைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் அர்ஜுன் அதிர்ச்சியடைகிறான் தனக்கு விவாகரத்து கிடைக்காதோ என்று ஐயப்படுகிறான். இதன் பிறகு தன்னிடமுள்ள அறிமுக அட்டையில் உள்ள முகவரிக்கு விரைந்து செல்கிறான்.
நீதிமன்றத்தில் தன்னை சந்தித்த நபர் கடவுளின் (விஜய் சேதுபதி) உதவியாளராக உள்ளார். அங்கே கடவுளையும் உதவியாளரையும் அர்ஜுன் சந்திக்கிறார். கடவுள் அவனது பிரச்சினையைப் பற்றி கேட்கிறார். திருமணமான பிறகு சில வாரங்களில் அவர்கள் எப்படி நண்பர்களாக மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதை அர்ஜுன் விவரிக்கிறான். அதன்பிறகு அர்ஜுன் தன் மாமனாரின் வெள்ளைக்களிமண் பாண்டத் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்குகிறான். அங்கு அர்ஜுனுக்குத் தரப்படும் வேலையான கழிப்பறை பொருளை சரிபார்ப்பார்க்கும் வேலை. அந்த வேலையை அவன் வெறுக்கிறான். அதேசமயம், அனுவுடன் கணவனாக வாழாமல் நண்பனாக / அறைத் தோழனாக மட்டுமே அர்ஜுன் வாழ்கிறான். ஒரு நாள் மீரா அர்ஜுனின் அலுவலகத்திற்கு உதவி கேட்டு வருகிறாள். இதன்பிறகு அவளுடனான நட்பை நன்கு வளர்த்துக் கொள்கிறான். திரையுலகில் உதவி இயக்குநராக இருக்கும் மீரா, அர்ஜுனின் நடிப்பு ஆசையை ஊக்குவிக்கிறாள். அவனது ஆர்வத்துக்கு உதவி செய்ய இயக்குனர் கௌதம் மேனன் எடுக்கவிருக்கும் திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்த்துகொண்டுள்ளதால் அதில் அவனும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவள் வலியுறுத்துகிறாள். அர்ஜுன் இயக்குநரின் முன் நடித்து அவரைக் கவர்ந்துவிடுகிறான். மீராவும் அர்ஜுனும் ஒரு பப்பிற்கு வருகின்றனர். அங்கு அவள் தனது முதல் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி பற்றி அவனிடம் கூறுகிறாள். அர்ஜுன் மீராவை ஆறுதல்படுத்தி, புறப்படுவதற்கு முன்பு அவளை அணைத்துக்கொள்கிறான். அப்போது அவர்களை ஒன்றாகப் பார்க்கும் அனு கோபம் கொள்கிறாள். இதுகுறித்து அவர்களுக்கிடையில் கடும் சண்டை நடக்கிறது. முடிவில் அர்ஜுன் விவாகரத்தால் பிரிந்துவிடலாம் என கூறுகிறான்.
கடவுளிடம் அர்ஜுன் தனது சிறந்த தோழியை தனது மனைவியாக ஆக்கியது கடவுளின் தவறு என்று குற்றம் சாட்டுகிறான். எனவே கடவுள் அர்ஜுனுக்கு மூன்று நிபந்தனைகளுடன் தங்க சீட்டுடை அளித்து தவறை சரிசெய்ய இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறார் - சீட்டை எப்போதும் அர்ஜுன் தனவசம் வைத்திருக்க வேண்டும், இது குறித்து அவன் யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி உண்மையைச் சொன்னால் இறந்துவிடுவான் என்கிறார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட, அர்ஜுன் சீட்டை வாங்கிக்கொண்டு, அனுவின் திருமண யோசனையை ஏற்றுக்கொண்ட நேரத்துக்கு வந்தடைகிறான்.
அனு திருமண யோசனை குறித்து மீண்டும் கேட்கிறாள், ஆனால் இந்த முறை அர்ஜுன் உடனடியாக அந்த யோசனையை மறுத்து தாங்கள் நண்பர்களாகவே இருக்கலாம் என்கிறான். தனது வீட்டிற்கு திரும்பி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறான். மீராவே தனக்கு சரியான நபர் என்று உணர்ந்து அவளுடன் நட்பைத் தொடங்குகிறான். இதற்கிடையில் அனுவுக்கும் மேத்யூவுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆனால் அப்போது மேத்யூவைப் பார்த்து பொறாமைப்படுகிறான். அர்ஜுன் பின்னர் அனுவைச் சந்திக்கச் செல்கிறான். அப்போது அனுவின் தந்தை பால்ராஜ் ( எம். எசு. பாசுகர் ) தனது கிராமத்தில் இலவச கழிப்பறைகளை கட்ட தான் விரும்பிய கதை குறித்து உரையாடுகிறார். ஏனெனில் அவர் வசதியற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தினால் தாயை இழந்தது குறித்து குறிப்பிடுகிறார். இதனால் அர்ஜுன் மனதில் மாற்றம் உண்டாகிறது, பால்ராஜ் மீதும் அவரது தொழில் மீதும் மரியாதை உண்டாகிறது.
அர்ஜுன் மீராவை காதலிக்கிறான் என்று அனு அறிகிறாள். எனவே அர்ஜுனுக்கு மீராவிடம் காதலைச் சொல்ல அனு உதவ முன்வருகிறாள். வரவிருக்கும் மீராவின் பிறந்தநாளின்போது மீராவின் குடும்பத்தினர் / நண்பர்களின் வாழ்த்துக்களைக் கொண்டதாக ஒரு கானோளியை ்உருவாக்கி, கானொளியின் முடிவில் அவளை காதலிக்கும் விருப்பத்தைக் குறிப்பிடுமாறு யோசனை கூறுகிறாள். அவர்கள் இருவரும் மீராவின் நண்பர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கானொளியை உருவாக்குகிறார்கள், ஆனால் இந்த பயணத்தின் போது, அர்ஜுன் தான் அனுவையே உண்மையாக நேசிப்பதையும் மீராமீது ஒரு ஈர்ப்பு மட்டுமை இருப்பதையும் உணர்ந்தான். மீராவின் முன்னாள் காதலனையும் இவர்கள் சந்திக்கிறனர். அவரை மீராவுடன் மீண்டும் இணைக்க அர்ஜுன் முயற்சிக்கிறான். மீராவின் பிறந்தநாளில் அவளது காதலனுடன் அர்ஜுன் சேர்த்து வைக்கிறான். மேத்யுவுடன் அனுவுக்கு நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ள கனமான இதயத்துடன் அர்ஜுன் செல்கிறான். இந்தத் திருமணத்தில் தனக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுத்த முடியாமல், அர்ஜுன் மணியுடன் தேவாலயத்திலிருந்து வெளியேறுகிறான். அப்போது அனு திருமணம் செய்துகொள்ளாமமல் தேவாலயத்திலிருந்து வெளியே ஓடுவதைப் பார்க்கிறார்கள். அவர்கள் அனுவை பின்தொடர்ந்து பப்பில் சந்திக்கிறார்கள். அங்கு அர்ஜுன் தன்னை நேசிக்கிறான் என்று தனக்குத் தெரியும் என்று அவள் சொல்கிறாள், எனவே கடைசி நிமிடத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வெளியே ஓடிவந்ததாக கூறுகிறாள். அனு மீண்டும் அர்ஜுனை திருமணம் செய்துள்ளும் விருப்பத்தைக் கூறுகிறாள், ஆனால் அர்ஜுன் அவளை மீண்டும் தான் காயப்படுத்தக்கூடும் என்ற பயத்தில் அதை மறுக்கிறான்; ஆனால் காரணத்தை கூறுமாறு மணியும், அனுவும் அவனை நெருக்கும்போது, அவர்களிடம் இந்த இரண்டாவது வாய்ப்பான தங்க சீட்டு பற்றிய ரகசியத்தை உளறிவிடுகிறான். உடனடியாக அந்த சீட்டு அவனிடமிருந்து பறந்து செல்கிறது. அதைப் பிடிக்கும் முயற்சியில், அர்ஜுன் வெறித்தனமாக ஓடி ஒரு லாரியால் மோதப்படுகிறான்.
அர்ஜுன் மீண்டும் கடவுளிடம் தனக்கு ஒரு இறுதி அளிக்குமாறு மன்றாடுகிறான்; இந்த நேரத்தில் கடவுள் அர்ஜுனுக்கு மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறி, அவனே தனது பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளவேண்டுமென்று கூறி அவனை அனுப்பி வைக்கிறார். அர்ஜுன் தனது விவாகரத்து வழக்கு விசாரணை நாளுக்கு மீண்டும் திரும்பி வந்ததை உணர்ந்து மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்கிறான், அங்கு விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்க அனு தயாராக இருக்கிறாள். அர்ஜுன் இந்த நேரத்தில் விவாகரத்துக்கு மறுத்து, தான் அனுவை நேசிப்பதாக கூறிக்க்கொண்டு அவளை முத்தமிடுகிறான். அவர்கள் மீண்டும் இணைகிறார்கள். கடவுள் அவனுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்து, அனுவுடன் அவன் மகிழ்ச்சியுடன் வாழ ஆசீர்வதிக்கிறார்.
நடிகர்கள்
- அர்ஜுன் மரிமுத்துவாக அசோக் செல்வன்
- அனு பால்ராஜாக ரித்திகா சிங்
- மீராவாக வாணி போஜன்
- மணியாக ஷா ரா
- அனுவின் தந்தை பால்ராஜாக எம். எசு. பாசுகர்
- கிருஷ்ணாவாக சந்தோஷ் பிரதாப் (மீராவின் காதலன்)
- அர்ஜுனின் தந்தையாக கஜராஜ் (மரிமுத்து)
- மாஸ்டர் ஜெயதித்யா
- நீதிபதியாக சீமா
- கடவுளாக விஜய் சேதுபதி (நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம்)
- கடவுலின் அமைச்சராக ரமேஷ் திலக் (நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம்) [4]
- கௌதம் மேனன் இவராகவே (சிறப்புத் தோற்றம்)
- மேத்யூவாக அபிசேக் வினோத்
தயாரிப்பு
இந்தப் படத்தில் புதுமுக இயக்குநராக அஸ்வத் மரிமுத்து அறிமுகமாகியுள்ளார்.[5] இந்தப் படத்தின் மூலம் வாணி போஜன் திரைப்படத் துறையில் அறிமுகமாகியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதி நீட்டிக்கப்பட்ட சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.[6] படத்தின் முதல் பார்வை சுவரொட்டி 2019 செப்டம்பரில் வெளியிடப்பட்டது மற்றும் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2019 அக்டோபரில் வெளியிடப்பட்டது.[7][8] 2020 பிப்ரவரியில், கௌதம் மேனன் அவரது பாத்திரத்திலேயே ஒரு சிறப்பு பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.[9] அதே மாதத்தில், இப்படத்தின் தெலுங்கு மறு ஆக்க உரிமையை பிவிபி சினிமா பெற்றது.[10]
பின்னணி இசை
Oh My Kadavule | |
---|---|
Soundtrack
| |
வெளியீடு | 14 February 2020 |
ஒலிப்பதிவு | 2020 |
படத்திற்கான பன்னணி இசையை லியோன் ஜேம்ஸ் மேற்கொண்டார் [11] மற்றும் பாடல் வரிகளை கோ சேஷா எழுதினார்.
- ஹையோ ஹையோ. லியோன் ஜேம்ஸ்.
- கதைப்போமா. லியோன் ஜேம்ஸ், சித் ஸ்ரீராம்
- பிரன்ஷிப் ஆந்தம். லியோன் ஜேம்ஸ், அனிருத் ரவிச்சந்திரன், எம். எம். மானசி
- என்னடா லைஃப் இது. லியோன் ஜேம்ஸ், சந்தோஷ் நாராயணன்
- காதல் கொழப்புத்தே. லியோன் ஜேம்ஸ், சஞ்சீவ் தாமஸ்.
- ஹையோ ஹையோ ரீமிக்ஸ். லியோன் ஜேம்ஸ்
குறிப்புகள்
- ↑ "Oh My Kadavule Movie Review: It is this sensitivity that makes Oh My Kadavule refreshing". Times Of India (in English). 2020-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
- ↑ "Oh My Kadavule Tamil Movie (2019) | Cast | Songs | Teaser | Release Date". News Bugz. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
- ↑ "Ashok Selvan's film Oh My Kadavule to be release on THIS day? Find Out". PINKVILLA (in English). Archived from the original on 2020-01-13. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/oh-my-kadavule-movie-review-an-endearing-romcom-exploring-a-second-chance-at-love-life/article30810657.ece
- ↑ 2 November, Silverscreen India Staff On; 2019 (2019-11-02). "It's A Wrap For 'Oh My Kadavule'". Silverscreen.in (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Vijay Sethupathi to do a cameo in 'Oh My Kadavule' - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
- ↑ "Oh My Kadavule first look out: Ritika Singh and Ashok Selvan are cute together". https://www.indiatoday.in/movies/regional-cinema/story/oh-my-kadavule-first-look-out-ritika-singh-and-ashok-selvan-are-cute-together-1598517-2019-09-12. பார்த்த நாள்: 2020-01-13.
- ↑ "The teaser of Oh My Kadavule is out - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
- ↑ "Here's why team Oh My Kadavule decided to cast Gautham Menon for a cameo - Times of India". The Times of India.
- ↑ "Oh My Kadavule Telugu remake rights bagged". 9 February 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/oh-my-kadavule-telugu-remake-rights-bagged/articleshow/74044190.cms. பார்த்த நாள்: 13 February 2020.
- ↑ "Oh My Kadavule Songs: Oh My Kadavule MP3 Tamil Songs by Leon James Online Free on Gaana.com" – via gaana.com.