லியோன் ஜேம்ஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லியோன் ஜேம்ஸ்
Leon James
பிறப்பு1 திசம்பர் 1991 (1991-12-01) (அகவை 33)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், திரைப்பட இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கீபோர்ட்/பியானோ

லியோன் ஜேம்ஸ் ( Leon James) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். இவர் முதன்முதலில் இரண்டு பாடல்களை, காஞ்சனா 2 (2015) படத்தில் இசையமைத்தார். அடுத்து கோ 2 (2016) படத்துக்கு இசையமைத்தார்.[1]

வாழ்க்கை

லியோனின் தந்தை நோயல் ஜேம்ஸ் ஏ. ஆர். ரகுமானின் மேலாளர். ரகுமானிடம் கோரஸ் பாடியிருக்கிறார். லியோனும் 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரகுமானிடம் ‘வரலாறு’ படத்தில் ‘தொட்டாபுரம் டோய்’, ‘மங்கள் பாண்டே’வில் ஒரு பாடல் என குழந்தைகள் கோரஸ் பாடியிருக்கிறார். பத்மசேஷாத்ரி பள்ளியில் இவருக்கு இசையமைப்பாளர் அனிருத் மூத்த மாணவர். இவரும் அனிருத்தும் பள்ளிக் காலத்தில் இணைந்து பல இசை பேண்ட்களில் வாசித்திருக்கின்றனர். சன் தொலைக்காட்சியில் 2009இல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய ‘ஊ ல ல லா’ இசைப் போட்டியில் ஜேம்ஸ், அனிருத், விவேக், கிஷோர், ஆனந்த் ஆகியோர் சேர்ந்து ‘சிங்க்ஸ்’ என்ற பேண்ட் முலாமாக தங்களுடைய சொந்த இசையமைப்பை மேடை ஏற்றினர். போட்டியில் அனிருத்தும் லியோனும் சிறந்த கீபோர்டிஸ்ட் விருது வென்றனர். அதன்பிறகு, லியோன் முழு நேர கீபோர்ட் கலைஞராக பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சிகளிலும், பாடல் பதிவுகளிலும் வாசித்தார். சந்தோஷ் நாராயணனுக்கு ‘ஜிகர்தண்டா’ உட்பட மூன்று படங்களில் கீபோர்ட் வாசித்திருக்கிறார்.

கீபோர்டிஸ்டைத் தாண்டி தனக்குள் இருக்கும் இசையமைப்பாளரை வெளிக்காட்டவே யூடியூபில் ‘வாயா என் வீரா’ பாடலை வெளியிட்டார். அந்தப் பாடல் இலட்சக்கணக்கானோரைச் சென்றடைகிறது. பாடலை ரசித்துக் கேட்டவர்களில் ஒருவரான நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் உடனடியாக லியோன் ஜேம்சுக்கு ‘கஞ்சனா-2’ படத்தில் இசையமைக்க வாய்ப்புத் தந்தார்.[2]

திரை இசை

வெளிவந்த இசையமைப்புகள்

ஆண்டு தமிழ் தெலுங்கு
குறிப்பு
2015 காஞ்சனா 2 கங்கா
2 பாடல்கள்
கோ 2

வரவிருப்பவை

ஆண்டு படம் குறிப்பு
2016 வீரா• தயாரிப்பில்
2016 கவலை

வேண்டாம்

தயாரிப்பில்

பின்னணி பாடகராக

ஆண்டு படம்
பாடல் குறிப்புs
2006 வரலாறு "தோட்டப்புறம்" இசையமைப்பு

ஏ. ஆர். ரகுமான்

2015 காஞ்சனா 2 "சண்டிமுனி"
2015 கோ 2 "கோகிலா", "விடாதா"

மேற்கோள்கள்

  1. "From Kanchana-2 to Ko 2". The Hindu. 28 November 2015. பார்க்கப்பட்ட நாள் 29 April 2016.
  2. ம.சுசித்ரா (15 ஏப்ரல் 2016). "புறப்படும் புதிய இசை: டிஜிட்டல் கண்ணம்மா!". தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2016.
"https://tamilar.wiki/index.php?title=லியோன்_ஜேம்ஸ்&oldid=27669" இருந்து மீள்விக்கப்பட்டது