ஒரு பக்க கதை
ஒரு பக்க கதை | |
---|---|
Poster | |
இயக்கம் | பாலாஜி தரணிதரன் |
தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் |
கதை | பாலாஜி தரணிதரன் |
இசை | கோவிந்த் வசந்தா |
நடிப்பு | காளிதாஸ் ஜெயராம் மேகா ஆகாஷ் |
ஒளிப்பதிவு | சி. பிரேம் குமார் |
படத்தொகுப்பு | ஆர். கோவிந்தராஜ் |
கலையகம் | வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் |
விநியோகம் | ஜீ5 |
வெளியீடு | திசம்பர் 25, 2020 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு பக்க கதை (Oru Pakka Kathai) பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி 2020இல் வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இதில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே. எஸ். சீனிவாசன் [2] தனது வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பதாகையுன் கீழ் தயாரித்திருந்தார்.[3] இது திசம்பர் 25, 2020 அன்று ஜீ5 இல் வெளியிடப்பட்டது.[4]
நடிகர்கள்
- சரவணனாக காளிதாஸ் ஜெயராம்
- மீராவாக மேகா ஆகாஷ்
- மீராவின் தந்தையாக பி. வி. சந்திரமௌலி
- சரவணனின் தந்தையாக ஜீவா ரவி
- வழக்கறிஞராக செப் தாமோதரன்
- மீராவின் தாயாக லட்சுமி பிரியா மேனன்
- சரவணனின் தாயாக மீனா வெமுரி
வெளியீடு
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனவே வெளியீடு நடக்காததால் படத்தின் விநியோக உரிமையை டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 வாங்கியது.[5] இது 25 திசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது. "பாலாஜி தரணீதரன் இன்று தமிழ் திரைப்படங்களின் மென்மையான திரைப்பட இயக்குநராகத் தெரிகிறார். மிகச்சிறிய கதைப் புள்ளிகள் கண்ணியத்துடன் நடத்திச் செல்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் அதிக கவனம் செலுத்தவில்லை" என்று விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் எழுதினார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "Balaji Tharaneetharan's next to be titled Oru Pakka Kathai". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Kamal-to-officially-announce-Balajis-next/articleshow/41354145.cms.
- ↑ "K.S. Sreenivas to produce Balaji Tharaneetharan's Oru Pakka Kathai". Sify இம் மூலத்தில் இருந்து 2014-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140914123214/http://www.sify.com/movies/balaji-tharaneetharan-gets-his-next-producer-news-tamil-nb0k1xigbbbsi.html.
- ↑ "K.S Sreenivasan of Vasan's Visual Ventures to produce Balaji Tharaneetharan's next". Only Kollywood. http://www.onlykollywood.com/nkpk-fame-balaji-tharaneetharan-next-film-oru-pakka-kathai/.
- ↑ "Balaji Tharaneetharan thought 'Oru Pakka Kathai' would remain unreleased". https://www.thehindu.com/entertainment/movies/balaji-tharaneetharan-thought-oru-pakka-kathai-would-remain-unreleased/article33400465.ece.
- ↑ "Interview | Despite his growth, Vijay Sethupathi's still the same: 'Seethakaathi' director Balaji Tharaneetharan".
- ↑ "Oru Pakka Kathai on ZEE5: Kalidas Jayaram and Megha Akash In A Story About a Miracle That Has Its Moments". 25 December 2020.