ஒரு இந்தியன் பிரணயகதா (திரைப்படம்)
ஒரு இந்தியன் பிரணயகதா | |
---|---|
இயக்கம் | சத்யன் அந்திக்காடு |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | பகத் பாசில் அமலா பால் |
வெளியீடு | 20 திசம்பர் 2013 |
நாடு | இந்தியன் |
மொழி | மலையாளம் |
ஒரு இந்தியன் பிரணயகதா (Oru Indian Pranayakadha) இது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இப்படத்தில் பகத் பாசில், அமலா பால் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்காக அமலா பாலுக்கு மூன்று விருதுகள் கிடைத்தன.
கதை
இந்தியாவிலிருந்து தத்துக்கொடுக்கப்பட்ட கனடா வாழ் மலையாளியான இராணி கார்டினர் என்ற கிருத்துவ பெண் (அமலா பால்) தனது தாய் தந்தையைத்தேடி இந்தியாவிற்கு வருகிறாள். அவளுக்கு உதவி செய்ய அரசியல்வாதியான சித்தார்தன் (பகத் பாசில்) முன்வருகிறார்.
தன் பூர்வீகம் தெரியாமல் பல இடங்களில் தேடி ஒரு வழியாக இராணியின் பிறப்பு பற்றி புகைவண்டி நிலையத்தில் சுமைதூக்கும் ஒருவரின் மூலம் தெரிந்துகொள்ளுகிறாள். இவளின் அப்பாவின் தந்தை ஒரு புகைவண்டி ஓட்டுனர், இவளின் அம்மாவின் அம்மா புகைவண்டி நிலையத்தில் எழுத்தராக உள்ளார். அப்போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் இருந்து படிக்கும்போது இருவரும் காதல் வயப்படுகிறார்கள். மேலும் முஸ்லிம் பையனும் இந்துவான பெண்ணும் இணைந்துவிடுகிறார்கள். அப்போது அப்பையனின் அப்பா புகைவண்டி விபத்தில் இறந்துவிடுகிறார். அதனால் அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று விடுகிறார் இவளின் அப்பா. இவளின் அம்மா கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பமாகியிருப்பது கண்டு இவளின் பாட்டி சுமைதூக்குபவரின் சொந்த ஊருக்குச் சென்று குழந்தை பிறந்தவுடன் குழந்தையை சுமை தூக்குபவரிடம் கொடுத்து அனாதை விடுதில் கொடுக்கும்படி கூறிவிடுகிறார்கள். அங்கிருந்துதான் கனடாவிலிருந்து வந்த குழந்தையில்லா தம்பதிகள் இவளைதத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.
அம்மா ஒரு சித்தா மருத்துவர், துளசி (லட்சுமி கோபாலசாமி) என கண்டுபிடித்து அவரின் மருத்துவமனையிலேயே தங்குகிறாள். ஆனால் தான் அவர்களின் மகள் என்று சொல்லமுடியாமல் திரும்புகிறாள். ஏனெனில் இவள் தவறான முறையில் பிறந்தவள் என்பதாலும், இவளின் அப்பா வேறு ஒருவர் என்பதாலும் அவரைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் செல்லுகிறாள். அங்கு இவளின் அப்பா ஆசாத் வேறு ஒரு பெண்ணை மணந்து கடைவைத்து வாழுகிறார். அவரிடமும் அவரின் மகள் என்று சொல்லவில்லை. கடைசியில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்றுவிடுகிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து வரும்போது சித்தார்தன் பெரிய அரசியல்வாதியாக ஆகியிருக்கிறார். இரண்டுபேரும் சேருகிறார்கள். [1]
மேற்கோள்கள்
- ↑ Radhika, C Pillai (16 December 2013). "Fahadh Faasil and Amala Paul in Bollywood ?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news-and-interviews/Fahadh-Faasil-and-Amala-Paul-in-Bollywood-/articleshow/27459347.cms?. பார்த்த நாள்: 21 January 2014.