ஐவேந்தர் கதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐவேந்தன் கதை அல்லது மாவலி கதை என்பது தென்னிந்திய மன்னன்களான பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன் மற்றும் கன்னடன் ஆகியோர் ஒரே குலத்தில் வந்தவர்கள் என்று கூறும் ஒரு தொன்மக்கதை ஆகும். இது தற்போதும் தென் மேற்கு தமிழகம் மற்றும் கேரளத்திலும் கூறப்பட்டு வருகிறது.

கதை

இக்கதைப்படி பாண்டிய மரபைச் சேர்ந்த மாவலி என்ற அரசன் தென்னாடு முழுவதையும் ஆண்டான். அப்போது தென்னாடு முழுதும் தமிழே பேசினர். அந்த மாவலிக்கு ஐந்து புதல்வன்கள் இருந்தார்கள். அவர்கள் பாண்டியன், சோழன், சேரன், ஆந்திரன், கன்னடன் என்பவர். அந்த ஐவரும் வாமனன் என்ற வெளிநாட்டு சதிகாரனால் தூண்டப்பட்டு தந்தையுடன் முரண்பட்டார்கள். ஐவருக்கும் போர் நடக்கலாம் என்றறிந்த மாவலி ஐவருக்கும் நாட்டை சமமாக பங்கிட்டான். நாளடைவில் பாண்டியனும் சோழனும் சேரனும் ஒன்றுபட்டதால் அது செந்தமிழ் நாடென்றும் மற்ற நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்றும் பெயர்பெற்றன.

மூலம்

"https://tamilar.wiki/index.php?title=ஐவேந்தர்_கதை&oldid=42181" இருந்து மீள்விக்கப்பட்டது