ஐரோப்பியத் தமிழ் வானொலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஐரோப்பியத் தமிழ் வானொலி என்பது ஈ.ரி.ஆர். (E.T.R - Euroepan Tamil Radio) என்ற பெயரில் ஜேர்மனியில் இருந்து ஒலிபரப்பாகும் 24 மணி நேரத் தமிழ் வானொலி ஆகும்.
வரலாறு
1999 இல் ஜேர்மன் மண்ணில் ஒரு சிறு வானொலிக் கலையகம் தோன்றியது. இந்தக் கலையகத்தில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள், நாளுக்கு 45 நிமிடங்கள் அலைபரப்பு நிகழ்ந்தது.
2005 பெப்ரவரி 11 இல் இந்த கலையகம் மேலும் சற்று வளர முற்பட்டது. நேயர்களை நேரடித் தொலைபேசித் தொடர்புகளால் இணைத்து, வானொலியுடன் தொடர்பு கொள்ளச் செய்தது. ஆனாலும் இன்னொரு வானொலியுடன் இணைந்துதான் அப்போது இந்த முயற்சியில் காலடி எடுத்து வைத்திருந்தது.
இந்த கலையகத்தின் வானொலி அலைபரப்பு ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கியது செப்டம்பர் 6, 2006 அன்று. 2006 செப்டம்பர் 11 இல் ஐரோப்பிய தமிழ் வானொலி என்ற பெயரில் இருபத்தினான்கு மணிநேரம் வானொலி வழியே நேயர்களைச் சென்றடைந்தது.
இந்த சிறப்பு நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் நேரடியாகவே ஈ.ரி.ஆர் (ஈ.டி.ஆர்)கலையகத்திற்கு வந்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்தும் வைத்தார்.
இதுவே ஜேர்மனியில் தொடங்கிய முதன் முதலான இருபத்தினான்கு மணி நேர தமிழ் வானொலிச்சேவை.
செய்மதி ஊடாக வானொலிக்கு நிகழ்ச்சிகளை எடுத்து வந்த ஈ.ரி.ஆர் வானொலிக் கலையகம் இணையத்தளத்தின் ஊடாகவும் அலைபேசிகளில் முதலாவது தமிழ் வானொலியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களைச் சென்றடைகிறது.