ஏ. ஜி. சைமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. ஜி. சைமன் (பி: 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார். மேலும் இவர் மலேசிய வானொலியிலும், அதன் பள்ளிக்கூடப் பிரிவிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1971 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ஏ._ஜி._சைமன்&oldid=6161" இருந்து மீள்விக்கப்பட்டது