ஏ. ஈ. மனோகரன்
Jump to navigation
Jump to search
ஏ. ஈ. மனோகரன் (இறப்பு: 22 சனவரி 2018) இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப்பிசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவரது ரசிகர்கள் தமிழர் மட்டுமின்றி சிங்களவரும் ஆவர்.
இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடல் இலங்கை இந்திய இரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் உள்ளார்.
மறைவு
சென்னை கந்தன்சாவடியில் வசித்து வந்த ஏ. ஈ. மனோகரன் சிறுநீரகக் கோளாறு காரணமாக, 2018 சனவரி 22 அன்று இரவு 7.30 மணியளவில் தனது 73-வது அகவையில் சென்னையில் காலமானார்.[1]
இலங்கையில் நடித்த திரைப்படங்கள்
- பாசநிலா
- வாடைக்காற்று
- புதிய காற்று (கெளரவத் தோற்றம்)
இந்தியாவில் நடித்த திரைப்படங்கள்
- டூபான் மெயில் (தெலுங்கு)
- 'தடவரா (மலையாளம்)
- மாமாங்கம்
- சக்தி
- கழுகன்
- ஆவேசம் (மலையாளம்)
- கோளிளக்கம் (மலையாளம்)
- குரு
- காஷ்மீர் காதலி
- ராஜா நீ வாழ்க
- காட்டுக்குள்ளே திருவிழா
- உலகம் சுற்றும் வாலிபன்
- நீதிபதி
- லாரி டிரைவர் ராஜாகண்ணு
- தீ
- ஜே.ஜே
மேற்கோள்கள்
- ↑ ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி ஏ. ஈ. மனோகரன் சாவடைந்தார், பதிவு.கொம், சனவரி 23, 2018
வெளி இணைப்புகள்
- ஏ. ஈ. மனோகரனின் சில பாடல்கள் பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம்