எஸ். வி. சுப்பையா பாகவதர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். வி. சுப்பையா பாகவதர் |
---|---|
பிறந்தஇடம் | சாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு |
இறப்பு | சூலை 3, 1954 |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | கருநாடக இசைப் பாடகர், நடிகர் |
எஸ். வி. சுப்பையா பாகவதர் (இறப்பு: 3 சூலை 1954) பழம்பெரும் பாடகரும், தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் இவரது பாடல்கள் மிகப்பிரபலமாக விளங்கின. கர்நாடக இசை மட்டுமல்லாமல் கிராமிய, தெம்மாங்கு பாட்டுகளையும் இவர் மேடை நாடகங்களில் பாடியுள்ளார்.[1] 'சங்கீத வித்வத்சிகாமணி' என அழைக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சாம்பூர் வடகரை சுப்பையா பாகவதர் தென்காசி, சாம்பவர் வடகரை என்ற ஊரில் பிறந்தவர்.[1]
நடித்த திரைப்படங்கள்
மொத்தம் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே சுப்பையா பாகவதர் நடித்துள்ளார். 1935 இல் வெளியான சுபத்திரா பரிணயம் திரைப்படத்தில் அர்ஜுனனாக நடித்து 17 பாடல்களையும் பாடியுள்ளார். 1938-இல் கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி படத்தில் கம்பராக "வாணி வரமருள் கல்யாணி", "ஞான சந்திர பிரபை", "தாய்வள நாடே இனிதாய் விடை தருவாய்" போன்ற பிரபலமான பாடல்களைப் பாடி நடித்தார்.
- சுபத்திரா பரிணயம் (1935)
- கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி (1938)
மறைவு
சுப்பையா பாகவதர் சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில், 1954 சூலை 3 இல் தென்காசி,சாம்பவர் வடகரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2] இவரது மகன் எஸ். வி. எஸ். நாராயணன் ஒரு மிருதங்க இசைக்கலைஞர் ஆவார். இவர் கிருஷ்ண பக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பி. யு. சின்னப்பாவின் கதாகாலேட்சபத்திற்கு மிருதங்கம் வாசித்துள்ளார். இவரின் மகன் என். ஹரி ஒரு பிரபலமான மிருதங்கக் கலைஞர் ஆவார்.[3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 எஸ்.வி.சுப்பையா பாகவதர்
- ↑ "Death Of S. V. Subbiah Bhagavathar". NewspaperSG. Indian Daily Mail. 15 சூலை 1954. பார்க்கப்பட்ட நாள் 05 திசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Rhythm on his finger tips பரணிடப்பட்டது 2016-10-29 at the வந்தவழி இயந்திரம், மாத்ருபூமி, ஆகத்து 26, 2016
வெளி இணைப்புகள்
- சுப்பையா பாகவதரின் தனிப் பாடல்கள் சில
- யூடியூபில் வாணி வரமருள் கல்யாணி - கம்பர் திரைப்படத்திற்காக சுப்பையா பாகவதர் பாடிய பாடல்