எஸ். கே. வடிவேலு
Jump to navigation
Jump to search
எஸ். கே. வடிவேலு
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். கே. வடிவேலு |
---|---|
பிறந்ததிகதி | 1947 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எஸ். கே. வடிவேலு (பி: 1947) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கம்பதாசன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓர் அரசாங்க ஊழியராவார். அத்துடன் இவர் பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தில் பயின்றவரும்கூட.
எழுத்துத் துறை ஈடுபாடு
1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நிறையப் பக்திப் பாடல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "கொடிமலை அருளொளி முருகன் பாமாலை" (1972)
- "திருமுருகன் இசைமாலை" (1975)
- "மதுரை வீரன் அலங்காரப் பாமாலை" (1983, 1995, 1998)
- "மணல்மேட்டு மாரியம்மன் புகழ்மாலை" (1994).
பரிசில்களும், விருதுகளும்
- "செந்துறைக் கவிஞர்" விருது - செந்தமிழ்க் கலாநிலையம்.
- மலேசிய அரசாங்க PBS விருது.
- தமிழ் நேசன் பவுன் பரிசு உட்பட பல பரிசுகள் பெற்றுள்ளார்.