எஸ். என். தனரத்தினம்
எஸ். என். தனரத்தினம் (இறப்பு: 1993) இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். பல திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ்த் திரைப்படமான சமுதாயத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையின் மலையகத்தில் கொஸ்லந்தை எனும் ஊரில் நாராயணசாமி, அமிர்தம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தனரத்தினம். 1970 ஆம் ஆண்டில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவாளர் ஆபிரகாம் கோவூருடன் இணைந்து பல ஆய்வுகளை நடத்தினார். கோவூரின் ஆய்வுகளைத் தொகுத்து "மனக்கோலம்" என்ற நூலை வெளியிட்டார்.[1]
1962 ஆம் ஆண்டில் வெளியான சமுதாயம் என்ற இலங்கையின் முதல் தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் சர்மிளாவின் இதய ராகம். இது 1993 இல் வெளிவந்தது.[1]
யசபாலித்த நாணயக்கார என்பவர் இயக்கிய அனுராகம், கீதிகா ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராக தனரெத்தினம் பணியாற்றினார்.[1]
நடித்த திரைப்படங்கள்
- சமுதாயம் (1962)
- புதிய காற்று (1975)புதிய காற்று (1975 திரைப்படம்)
- நான் உங்கள் தோழன்
- நாடு போற்ற வாழ்க
- அனுராகம்
- தெய்வம் தந்த வீடு
- தென்றலும் புயலும், (1978)1978