எம். ஜி. சோமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். ஜி. சோமன்
பிறப்புஎம். ஜி. சோமசேகரன் நாயர்[1]
28 செப்டம்பர் 1941
திருமூலபுரம், திருவல்லா, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா தற்போது பத்தனம்திட்டா மாவட்டம்
இறப்பு12 திசம்பர் 1997
(வயது 56)
கொச்சி, கேரளம், இந்தியா
பெற்றோர்கே. என். கோவிந்த பணிக்கர்
பி. கே. பவானி அம்மா[1]
வாழ்க்கைத்
துணை
சுஜதா (1968-1997)
பிள்ளைகள்2[2]

எம். ஜி. சோமன் (M. G. Soman) (28 செப்டம்பர் 1941–12 திசம்பர் 1997), ஓர் இந்திய திரைப்பட நடிகரும், முன்னாள் இந்திய வான்படை பணியாளரும் ஆவார். இவர் பொதுவாக மலையாளத் திரைப்படங்களில் எதிர்மறை வேடங்களில் தோன்றினார். 70களின் பிற்பகுதியிலும் 80களின் முற்பகுதியிலும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். இவர் தமிழில் அவள் ஒரு தொடர்கதை, நாளை நமதே, குமார விஜயம், விமான நிலையம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சுயசரிதை

இவர், சோமசேகரன் நாயராக கோணி குடுக்கி இல்லத்து வீட்டில் கோவிந்த பணிக்கர் - பி.கே. பவானி அம்மா ஆகியோருக்கு, திருவிதாங்கூரின் திருவல்லாவில் 28 செப்டம்பர் 1941இல் பிறந்தார். இவர் திருவல்லாவில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும் போது இவர் தனது நண்பருடன் ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்து மணல்தாரிகள் கர்ஜிக்குன்னு என்ற நாடகத்தை நடத்தினார்.[3] பின்னர், சங்கனாச்சேரியில் கல்லூரி படிப்பை முடித்து இந்திய வான்படையில் சேர்ந்தார். சோமன் கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயரின் "ஜெயஸ்ரீ" நாடகக் குழுவுடன் சேர்ந்து பின்னர் திரைப்படத் துறைக்குச் சென்றார். இவர் கேரள மக்கள் கலைக் கழகத்திலும் பணிபுரிந்தார். 197இல் பி. என். மேனன் இயக்கிய "காயத்ரி" இவரது முதல் படம். இவர் 1976 முதல் 1983 வரை ஒரு நாயகனாக நடித்தார். பின்னர் வில்லன், நகைச்சுவை, துணை வேடங்களில் நடித்தார். 1977ஆம் ஆண்டில் ஐ. வி. சசி இயக்கத்தில் வெளியான இதா இவிடே வரே இவரது மிகப்பெரிய வெற்றிப் படமானது. பின்னர், மிகவும் பரபரப்பான நடிகராக உயர்ந்தார். 1978 வாக்கில், சோமன் 42 படங்களில் நாயகனாக நடித்தார். இது இன்றுவரை ஒரு சாதனையாக இருந்தது. 1984க்குப் பிறகு, இவர் கதாநாயக பாத்திரங்களிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். 1997ஆம் ஆண்டில், ஜோஷியின் இயக்கத்தில் வெளியான லேலம் இவரது கடைசிப் படமாகும். இதில் ஆனக்காட்டில் ஈப்பச்சனாக இவரது நடிப்பு விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது.

இவர் 1991இல் பூமிகா என்ற ஒரு மலையாளத் திரைப்படத்தை தயாரித்தார். இது ஐ.வி.சசி இயக்கியிருந்தார். ஜெயராம், சுரேஷ் கோபி, முகேஷ், ஊர்வசி போன்றோர் நடித்திருந்தனர்.

இறப்பு

இவர் 12 திசம்பர் 1997 அன்று மஞ்சள் காமாலை காரணமாக தனது 56 வயதில் இறந்தார்.

குடும்பம்

சோமன் சுஜாதா என்பவரை மணந்தார்.[4] இவர்களுக்கு சஜி சோமன் என்ற மகனும் சிந்து என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சஜியும் சில திரைப்படங்களில் நடித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "CiniDiary". CiniDiary. Archived from the original on 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
  2. "Archived copy". Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "ശങ്കു. എം.പി". CiniDiary (in മലയാളം). p. 51. Archived from the original on 19 June 2015. பார்க்கப்பட்ட நாள் 5 May 2019.
  4. "സോമേട്ടന്‍ മരണം പ്രവചിച്ചിരുന്നു" (in ml). மங்களம் பப்ளிகேஷன்ஸ். 11 December 2013. http://www.mangalam.com/mangalam-varika/127505. 
  5. "സോമനില്ലാതെ പതിനഞ്ചു വര്‍ഷം" (in ml). மங்களம் பப்ளிகேஷன்ஸ். 9 December 2012. http://www.mangalam.com/print-edition/sunday-mangalam/14742. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._ஜி._சோமன்&oldid=21546" இருந்து மீள்விக்கப்பட்டது