என். எஸ். மணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என். எஸ். மணியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
என். எஸ். மணியம்
அறியப்படுவது எழுத்தாளர்

என். எஸ். மணியம் (N. S. Manian) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மலாக்கா நாக மணியம் எனும் புனையப்பெயரில் எழுதிவரும் இவர் ஒற்றுமைத் துறை (துணை) அதிகாரியுமாவார். மேலும் இவர் வானொலியில் இரு மொழிகளிலும் அறிவிப்பாளராகவும், "மலேசிய நண்பன்" மலாக்கா மாநில நிருபராகவும், மேடை அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகரும் ஆவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் மலாய், தமிழ் இரு மொழிகளிலும் கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "நாகமணியம் கவிதைகள்" (புதுக்கவிதைகள்)

பரிசில்களும், விருதுகளும்

  • அரசாங்கத்தின் BCM, BKT, PJK விருதுகள்

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=என்._எஸ்._மணியம்&oldid=6145" இருந்து மீள்விக்கப்பட்டது