உலக மக்கள் தொகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாடுகள் வாரியாக மக்கள் தொகை அடர்த்தி (ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள மக்கள்), 2006
ஐக்கிய நாடுகளின் 2004 கணிப்புகள் (சிவப்பு, ஆரஞ்சு, பச்சை) மற்றும் யுஎஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலகத்தின் வரலாற்று கணக்கெடுப்புகள் (கருப்பு) ஆகியவைகளின் அடிப்படையில், 1800 முதல் 2100 வரையிலான மக்கள் தொகை.

உலக மக்கள்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் புவியில் வாழும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பதாகும். 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 8024,000,000 பேர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது "World Population Prospects:The 2009 Revision" (PDF). Population Division of the Department of Economic and Social Affairs of the United Nations Secretariat. ஜூன் 2009. {{cite web}}: Check date values in: |date= (help) அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செயலகம் தற்பொழுது உலக மக்கள் தொகை 8024,000,000 என மதிப்பிட்டுள்ளது 8,22,76,00,000"U.S. Census Bureau - World POPClock Projection". [2].

1400 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கருப்பு மரணத்தின் முடிவிலிருந்து உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.[1] மிக விரைவான விகிதத்தில் (1.8%க்கும் மேலானதாக) வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை அதிகரிப்பு, 1950 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால அளவிலும் அதன் பின்னர் 1960 - 1970 ஆண்டுகளில் நீண்ட கால கட்டங்களிலுமாக தொடர்ந்து உயர்ந்து வருவது தெளிவாகும். (வரைபடத்தைப் பார்க்கவும்). 1963 ஆம் ஆண்டு அடைந்த உச்சபட்ச அளவான வருடத்திற்கு 2.2% என்பதில் ஏறக்குறைய பாதி அளவினை 2009 ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் அடைந்தது. 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் உலகெங்கும் நிகழும் பிறப்புகள் வருடத்திற்கு 173 மில்லியனாக இருந்ததிலிருந்து, தற்போது ஆண்டிற்கு சுமார் 140 மில்லியன் என்ற அளவில் ஒரு வகை சம நிலைபாட்டுடனும், அதே அளவில் மாறாததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆண்டிற்கு 57 மில்லியன் மட்டும் என்ற நிலையில் உள்ள இறப்புகள் 2050 ஆம் ஆண்டு வாக்கில், ஆண்டிற்கு 90 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறப்புகளின் எண்ணிக்கையைப் பிறப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டதால் உலக மக்கள்தொகையானது 2050 [2][3] ஆம் ஆண்டில் 8 முதல் 10.5 பில்லியன் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக புவியில் மக்களின் வாழ்க்கை பாதிப்படைவதைக் குறித்து மக்கள் மிகையான கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். தற்போதைய மக்கள்தொகை அதிகரிப்பும் இதனுடன் நிகழும் வளஆதாரங்கள் பயன்பாட்டு அதிகரிப்பும் சூழ்மண்டலத்தைப் பல வகைகளில் பாதிப்படைய வைக்கும் என்பதே அறிவியல் கருத்திசைவு ஆகும்.[4]

மக்கள்தொகை எண்ணிக்கை

கிமு 70,000 காலகட்டத்தில் மிகையான மக்கள் தொகை உயர்வால் நெருக்கடி நிலை உருவானதாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். (பார்க்கவும் டோபா பேரழிவு கொள்கை). இக்காலத்திற்குப் பிறகும் விவசாயம் வளர்ச்சியடைந்த காலம் வரையிலும் உலக மக்கள்தொகையானது ஒரு மில்லியனாக நிலைகொண்டது. அவர்களுடைய பிழைப்பு, வேட்டை மற்றும் மேய்ச்சலை இன்றியமையாததாகக் கொண்டிருந்தது. இத்தகைய வாழ்க்கை முறை இயற்கையாகவே குறைவான மக்கள் தொகை அடர்த்தியை உறுதி செய்தது. ஒருங்கமைந்த கிழக்கு மற்றும் மேற்கு ரோமானியப் பேரரசில் 55 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.. (கிபி 300-400).[5] 541 மற்றும் 700களுக்கு இடையில் ஐரோப்பிய மக்கள் தொகை ஏறக்குறைய 50 சதவிகிதம் குறைவதற்கு ஜஸ்டினியன் பிளேக் நோய்காரணமாக இருந்தது.[6] 1340 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் மக்கள்தொகை 70 மில்லியனுக்கும் மேல் இருந்தது[7] 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருப்பு மரணம் என்ற பெரும்பரப்புத் தொற்று நோயானது 1400 ஆம் ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகையான 450 மில்லியனிலிருந்து தோராயமாக 350 மில்லியனுக்கும் 375 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகைக்குக் குறையச் செய்திருக்கலாம்.[8] ஐரோப்பிய மக்கள் தொகை 1340 ஆம் ஆண்டுகளில் நிலையை எட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் பிடித்தன.[9]

1368 ஆம் ஆண்டுகளில் மிங் வம்சம் நிறுவிய போது, சீனாவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60 மில்லியனாக இருந்தது, 1644 ஆம் ஆண்டுகளில் இவ்வம்சம் முடிவுக்கு வந்த பொழுது மக்கள் தொகை சுமார் 150 மில்லியனை அடைந்திருக்கலாம்.[10][11] 1500 ஆம் ஆண்டுகளில் 2.6 மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள் தொகை அதிலிருந்து உயர்ந்து 5.6 மில்லியனை எட்டியது.[12] 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் குடியேற்ற நாட்டினர் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு வந்த புதிய பயிர்கள் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு வழிவகுத்தன.[13][14] 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய வர்த்தகர் வந்ததில் இருந்து,மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை ஆப்ரிக்காவின் பாரம்பரிய பயிர்களுக்கு மாற்றாக அக்கண்டத்தின் மிகமுக்கியமான உணவுப்பயிர்களாக அமைந்தன.[15] ஆல்ஃப்ரெட் டபிள்யூ. க்ராஸ்பி அவர்கள் மக்காச் சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பிற அமெரிக்கப் பயிர்களின் அதிகரித்த விளைச்சலானது, "மழைக்காட்டுப் பகுதிகளிலிருந்து, துல்லியமாகச் சொன்னால், அமெரிக்கப் பயிர்கள் முன்பைக்காட்டிலும் அதிக குடியேற்றத்தைச் சாத்தியமாக்கிய இடங்களிலிருந்து தங்களுடைய பல, ஒருவேளை அதிகபட்சமான சரக்குகளை அடிமை வியாபாரிகள் வரவழைப்பதைச் சாத்தியமாக்கியது" என்று ஊகித்தார்.[16]

ஐரோப்பிய தொடர்பின் காலத்தில் தற்போதைய மெக்ஸிகோவின் வடபகுதியான வட அமெரிக்காவில் 900,000 முதல் 18 மில்லியன் மக்கள் வரை வசித்ததாக கல்வியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.<குறிப்புதவி>"அமெரிக்க பழங்குடி மக்கள் (கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க கூட்டரசு நாடுகளின் உள்நாட்டு மக்கள்)". பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்.</குறிப்புதவி>
2006ல் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வாசிகளுடன் திகழும் நகரப்புற பகுதிகள். 1800ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே நகரங்களில் வசதித்தனர். இந்த எண்ணிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் 47 சதவிகிதமாக உயர்ந்தது.

ஐரோப்பிய தேடலாய்வாளர்கள் மற்றும் உலகின் பிற பகுதி மக்களுக்கு இடையில் ஏற்பட்ட எதிர்காணல்கள் அசாதாரணமான வீரியத்தினை உடைய உள்ளுர் கொள்ளை நோய்களை அடிக்கடி அறிமுகப்படுத்தின. புதிய உலகின் பூர்வகுடி அமெரிக்க மக்கள்தொகையில் 90 முதல் 95 சதவிகிதம் பேருக்கு ஏற்பட்ட மரணம் பழைய உலகின் வியாதிகளான பெரியம்மை, தட்டம்மை மற்றும் இன்ஃப்ளுயன்ஸா என்னும் ஒரு வகை காய்ச்சல் ஆகியவைகளால் ஏற்பட்டது ஆகும் என்று தொல்பொருள் ஆய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.[17] பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் இந்த நோய்களுக்கு எதிரான உயர்தர நோயெதிர்ப்புத் திறனை கொண்டிருந்த அதே வேளையில், உள்நாட்டு மக்களுக்கு அத்தகைய நோயெதிர்ப்புத் திறன் கிடையாது.[18]

வேளாண் மற்றும் தொழில்துறை புரட்சிகளின் போது, குழந்தைகளின் ஆயுள் எதிர்பார்ப்பு திடீரென்று அதிகரித்தது.[19] லண்டனில் பிறந்த குழந்தைகளுள் ஐந்து வயதாகுமுன் இறந்தவர்களின் சதவிகிதம் 1730-1749 காலகட்டத்தின் 74.5 சதவீதத்திலிருந்து 1810-1829 காலகட்டத்தில் 31.8 சதவிகிதமாக குறைந்தது.[20][21] 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்கள் தொகையானது ஏறக்குறைய ஒரு நூறு மில்லியன் என்பதிலிருந்து கிட்டதட்ட இருநூறு மில்லியனாக அதிகரித்து, 19ம் நூற்றாண்டில் மீண்டும் இது இரட்டிப்பானது.[22] கட்டாய அம்மைத் தடுப்பூசி குத்துதலின் அறிமுகம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் ஆகியவற்றுக்குப் பிறகு, மக்கள்தொகைப் பெருக்கம் மிகவும் அதிகரித்தது.[23][24][25] 19ம் நூற்றாண்டில் வாழ்க்கை நிலைகளும் மற்றும் உடல்நலம் பேணுதலும் மேம்பட்டதன் காரணமாக பிரிட்டிஷ் கூட்டரசின் மக்கள்தொகை ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இரட்டிப்பானது.[26] இங்கிலாந்து நாட்டின் மக்கள்தொகை 1801 ஆம் ஆண்டில் 8.3 மில்லியனாகவும் மற்றும் 1901 ஆம் ஆண்டில் 30.5 மில்லியனாகவும் அதிகரித்தது.[27]

1750 காலகட்டத்தில் 125 மில்லியனாக இருந்த இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் தொகை 1941 காலகட்டத்தில் 389 மில்லியனை அடைந்தது.[28] இன்று, இப்பிரதேசம் 1.5 பில்லியன் மக்களின் இருப்பிடமாக உள்ளது.[29] ஜாவா வாசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1815 காலகட்டத்தின் ஐந்து மில்லியனிலிருந்து 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 130 மில்லியனுக்கும் மேல் அதிகரித்ததது.[30] மெக்ஸிகோ மக்கள்தொகை 1900 ஆம் ஆண்டின் காலகட்டத்தின் 13.6 மில்லியனிலிருந்து 2009 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 112 மில்லியனாக உயர்ந்துள்ளது.[31] எண்பது ஆண்டுகளில் கென்யாவின் மக்கள்தொகை 2.9 மில்லியனிலிருந்து முப்பத்தேழு மில்லியனாக உயர்ந்துள்ளது.[32]

பிரதேச வாரியாக மக்கள் தொகை வளர்ச்சி

கீழே உள்ள அட்டவணை வரலாற்று மற்றும் வரும் காலங்களுக்கான உத்தேச மக்கள் தொகை எண்ணிக்கையை (மில்லியன்களில்) காட்டுகிறது.[33][34][35][36] வரலாற்று மக்கள் தொகை எண்ணிக்கையின் கிடைக்குந்தகைமை பிரதேசங்களுக்கு ஏற்ப மாறுகிறது.

உலகின் வரலாற்று மற்றும் எதிர்வுகூறப்படும் மக்கள் தொகைகள் (மில்லியன்களில்).[37][38]
பிராந்தியம் 1500 1600 1700 1750 1800 1850 1900 1950 1999 2008 2050 2150
உலகம் 458 580 682 791 978 1,262 1,650 2,521 5,978 6,707 8,909 9,746
ஆப்பிரிக்கா 86 114 106 106 107 111 133 221 767 973 1,766 2,308
ஆசியா 243 339 436 502 635 809 947 1,402 3,634 4,054 5,268 5,561
ஐரோப்பா 84 111 125 163 203 276 408 547 729 732 628 517
லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன்[Note 1]:{{{3}}} 39 10 10 16 24 38 74 167 511 577 809 912
வட அமெரிக்கா[Note 1]:{{{3}}} 3 3 2 2 7 26 82 172 307 337 392 398
ஓசியானியா 3 3 3 2 2 2 6 13 30 34 46 51
சதவிகித பங்கீட்டின் அடிப்படையி்ல் உலகின் வரலாற்று மற்றும் எதிர்வுகூறப்படும் மக்கள் தொகைகள் [37][38]
பிராந்தியம் 1500 1600 1700 1750 1800 1850 1900 1950 1999 2008 2050 2150
உலகம் 100 100 100 100 100 100 100 100 100 100 100 100
ஆப்பிரிக்கா 18.8 19.7 15.5 13.4 10.9 8.8 8.1 8.8 12.8 14.5 19.8 23.7
ஆசியா 53.1 58.4 63.9 63.5 64.9 64.1 57.4 55.6 60.8 60.4 59.1 57.1
ஐரோப்பா 18.3 19.1 18.3 20.6 20.8 21.9 24.7 21.7 12.2 10.9 7.0 5.3
லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன்[Note 1]:{{{3}}} 8.5 1.7 1.5 2.0 2.5 3.0 4.5 6.6 8.5 8.6 9.1 9.4
வட அமெரிக்கா[Note 1]:{{{3}}} 0.7 0.5 0.3 0.3 0.7 2.1 5.0 6.8 5.1 5.0 4.4 4.1
ஓசியானியா 0.7 0.5 0.4 0.3 0.2 0.2 0.4 0.5 0.5 0.5 0.5 0.5

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கான எண்ணிக்கை ஐரோப்பிய தொடர்பு குடியேறிகளுக்குப் பிந்தையவர்களைக் குறிக்குமேயன்றி, ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முந்தைய பூர்வகுடி மக்கள்தொகையை அல்ல.

பல்வேறு தேதிகளில் மதிப்பிடப்பட்ட உலக மற்றும் பிராந்திய மக்கள்தொகை (மில்லியன்களில்)
ஆண்டு உலகம் ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பா லத்தீன் அமெரிக்கா[Note 1]:{{{3}}} வட அமெரிக்கா ஓசியானியா குறிப்புகள்
கிமு 70,000 < 0.015 [39]
கிமு 10,000 1
கிமு 9000 3
கிமு 8000 5 [40]
கிமு 7000 7
கிமு 6000 10
கிமு 5000 15
கிமு 4000 20
கிமு 3000 25
கிமு 2000 35
கிமு 1000 50 [40]
கிமு 500 100 [40]
1 200 [41]
1000 310
1750 791 106 502 163 16 2 2
1800 978 107 635 203 24 7 2
1850 1,262 111 809 276 38 26 2
1900 1,650 133 947 408 74 82 6
1950 2,519 221 1,398 547 167 172 12.8
1955 2,756 247 1,542 575 191 187 14.3
1960 2,982 277 1,674 601 209 204 15.9
1965 3,335 314 1,899 634 250 219 17.6
1970 3,692 357 2,143 656 285 232 19.4
1975 4,068 408 2,397 675 322 243 21.5
1980 4,435 470 2,632 692 361 256 22.8
1985 4,831 542 2,887 706 401 269 24.7
1990 5,263 622 3,168 721 441 283 26.7
1995 5,674 707 3,430 727 481 299 28.9
2000 6,070 796 3,680 728 520 316 31.0
2005 6,454 888 3,917 725 558 332 32.9
2010 6,972 1,022 4,252 732 580 351 35.6 [42]
ஆண்டு உலகம் ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பா லத்தின் அமெரிக்கா வட அமெரிக்கா ஓசியானியா குறிப்புகள்

அதிகரிப்பு விகிதம்

பல்வேறு கண்டங்களில் மக்கள் தொகை பரிணாம வளர்ச்சி நிலைக்குத்து அச்சு மடக்கையாக இருக்கிறது மற்றும் மில்லியன் கணக்கான மக்களும் அவ்வாறே.

பல்வேறு பிரதேசங்கள் பல்வேறு மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. மேலே வழங்கிய அட்டவணையின் அடிப்படையில், 2000லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களில் ஏற்பட்ட மக்கள் தொகை வளர்ச்சி:

ஆசியாவில் 237.771 மில்லியன்
ஆப்ரிக்காவில் 92.293 மில்லியன்
லத்தீன் அமெரிக்காவில் 38.052 மில்லியன்
வட அமெரிக்காவில் 16.241 மில்லியன்
ஐரோப்பாவில் 3.264 மில்லியன்
ஓசியானியாவில் 1.955 மில்லியன்
உலகளவில் 383.047 மில்லியன்

20 ஆம் நூற்றாண்டில், மருத்துவ முன்னேற்றத்தாலும் மற்றும் பசுமைப்புரட்சிக்குக் காரணமான பேரளவு விவசாய உற்பத்திப் பெருக்கத்தாலும், பல நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்ததால், மனித வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள்தொகை பெருக்கத்தை உலகம் பார்த்தது.[43][44][45]

1989 ஆம் ஆண்டில் உச்சமான ஓராண்டுக்கு எண்பத்தி எட்டு மில்லியன் மக்கள் தொகை அதிகரிப்பிலிருந்து குறைந்து, 2000 ஆம் ஆண்டில் ஓராண்டுக்கு 1.14% (அல்லது கிட்டத்தட்ட 75 மில்லியன் மக்கள்) என்ற விகிதத்தில் உலக மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டுள்ளது.[46] கடந்த சில நூற்றாண்டுகளில், பூமியில் வாழும் மக்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. 2000 ஆண்டு வாக்கில், பூமியில் 300 வருடங்களுக்கு முன்னால் இருந்த மக்களை விட 10 மடங்கு அதிகமானவர்கள் உள்ளனர். சிஐஏயின் 2005 - 2006 உலக மெய்நிகழ்வுநூல்கள் வழங்கும் தரவு விவரப்படி, ஒவ்வொரு நாளும் உலக மக்கள் தொகை சராசரியாக 203,800 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கிறது.[47] சிஐஏ மெய்நிகழ்வுநூல் இந்த எண்ணிக்கையை 2007 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 211,090 மக்கள் என்றும், 2009 ஆம் ஆண்டில் மீண்டும் ஒவ்வொரு நாளும் 220,980 மக்கள் என்றும் அதிகரித்தது.

கருவுறுதல் வீதத்தின்படி நாடுகள் மற்றும் வட்டாரங்களின் வரைபடம்

உலகளவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1963 ஆம் ஆண்டின் உச்சபட்ச அளவான 2.19 சதவீ தத்திலிருந்து சீராகச் சரிந்து வருகிறதென்றாலும், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் துணை-சஹாரன் ஆப்ரிக்கா பகுதிகளில் வளர்ச்சி விகிதம் உயர்மட்ட நிலையிலேயே உள்ளது.[48]

சில நாடுகளில் எதிர்மறை மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது (அதாவது, காலப்போக்கில், மக்கள் தொகையில் நிகர குறைவு), குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் (மிகக்குறைவான கருவுறுதிறன் விகிதங்களின் காரணமாக) கீழ்நிலை-பதில்வைப்பு கருவுறுதிறன் விகிதத்தின் காரணமாக, அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் எதிர்மறை மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டில், மக்கள் இனப்புள்ளியியல் நிலைமாற்றங்களின் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியது. இப்போக்கு தொடர்ந்தால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதமானது பூஜ்யமாகக் குறைந்து 2050 ஆம் ஆண்டில் 9.2 பில்லியன் என்ற உலக மக்கள்தொகை மேட்டைச் சென்றடைந்து விடும்.[49] எனினும், ஐக்கிய நாடுகள் வெளிட்ட பல மதிப்பீடுகளில் இது ஒன்றே ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் 2050 ஆம் ஆண்டுக்கான கருத்துரு 8 பில்லியன் முதல் 10.5 பில்லியன் வரையிலான வரம்புக்குட்பட்டுள்ளது.[50]

மாதிரிகள்

ஹோர்னர் (1975) பின்வரும் சூத்திரத்தை முன்மொழிந்தார்:[51]

Alt text

இதில்

  • N என்பது தற்போதைய மக்கள்தொகை -----------------------------------
  • T என்பது தற்போதைய ஆண்டு
  • C = 2·1011
  • T0 = 2025

ஆனால் இது 2025 ஆம் ஆண்டில் முடிவுறா மக்கள்தொகையுடன் அதிபரவளைய வளர்ச்சியைக் காட்டுகிறது

கபித்ஸா (1997)[52] என்பவரின் கூற்றுப்படி, கிமு 67,000 ஆம் ஆண்டிற்கும் 1965 ஆம் ஆண்டிற்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்தது மற்றும் உலக மக்கள் தொகை வளர்ச்சி சூத்திரம் பின்வருமாறு:

Alt text

இதில்

  • N என்பது தற்போதைய மக்கள்தொகை
  • T என்பது தற்போதைய ஆண்டு
  • C = (1.86±0.01)·1011
  • T0 = 2007±1
Alt text

அதிபரவளையத்திலிருந்து மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு மாறியிருப்பது மக்கள் இனப்புள்ளியியல் நிலை மாற்றத்திற்கு தொடர்புடையதாகும்.

திருப்புமுனை நிகழ்வுகள்

உலக மக்கள் தொகை திருப்புமுனைகள் (பில்லியன் குறுகிய அளவினங்களில், மதிப்பிட்டது).
உலக மக்கள்தொகை மதிப்பீடுகள் திருப்புமுனை நிகழ்வுகள்
மக்கள்தொகை
(பில்லியன்களில்)
1 2 3 4 5 6 7 8 9
ஆண்டு 1804 1927 1960 1974 1987 1999 2012 2025 2040
கடந்த ஆண்டுகள் 123 33 14 13 12 13 13 15

1804 ஆம் ஆண்டில் மக்கள் தொகை ஒரு பில்லியனையும், 1927 ஆம் ஆண்டில் 2 பில்லியனையும், 1960 ஆம் ஆண்டில் 3 பில்லியனையும், 1974 ஆம் ஆண்டில் 4 பில்லியனையும், 1987 ஆம் ஆண்டில் 5 பில்லியனையும், 1999 ஆம் ஆண்டில் 6 பில்லியனையும் எட்டியது. 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 7 பில்லியனையும், 2025 ஆம் ஆண்டில் 8 பில்லியனையும், 2045 அல்லது 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மக்கள்தொகை ஒன்று மற்றும் இரண்டு பில்லியன் குறிகளைக் கடந்த சரியான நாள் மற்றும் மாதம் பற்றிய கணக்கீடு எதுவும் இல்லை. மூன்று மற்றும் நான்கு பில்லியனை எட்டிய நாட்கள் அதிகார பூர்வமாக கொண்டாடப்படவில்லை, ஆனால் அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் பன்னாட்டுத் தரவுதளம் அவற்றை ஜுலை 1959 மற்றும் ஏப்ரல் 1974 என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பானது "5 பில்லியனை எட்டிய நாள்" (11 ஜூலை 1987) மற்றும் "6 பில்லியனை எட்டிய நாள்" (12 அக்டோபர் 1999) ஆகியவற்றை வரையறுத்துக் கொண்டாடியது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயலகத்தின் அகில உலக திட்டப்பிரிவு 1999 ஏப்ரல் 21 அன்று (அதிகாரபூர்வ ஐக்கிய நாடுகள் அமைப்பின் நாளுக்குப் பலமாதங்கள் முன்பாகவே) உலகம் ஆறு பில்லியனை அடைந்ததாகக் கணக்கிட்டது. அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகளின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகம் ஜூலை 2012 ஆம் ஆண்டை[53] "7 பில்லியனை எட்டும் நாளாகக்" குறிப்பிடும் அதே சமயத்தில் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மக்கள்தொகைப் பிரிவு இது 2011 ஆம் ஆண்டின் இறுதியில் ஏதோ ஒரு நேரத்தில் நிகழலாம் என்று கருத்து தெரிவிக்கிறது.

மக்கள் தொகை இரண்டு மடங்காக ஆகும் வருடங்கள்

யூஎன்டீஈஎஸ்ஏ கணக்கீட்டின் நேரியல் இடைச்செருகலைப் பயன்படுத்தி, பின் வரும் ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரட்டிப்பாகியிருக்கிறது அல்லது இரட்டிப்பாகும் (இரண்டு வேறுபட்ட துவக்கப் புள்ளிகளுடன்). 2வது புத்தாயிரம் ஆண்டின்போது, ஒவ்வொரு இரட்டிப்பும் சுமாராக முந்தைய இரட்டிப்பிற்கு எடுத்துக்கொண்ட காலத்தை விட அரைப் பங்கு அதிகமான காலத்தை எடுத்துக்கொண்டு, மேலே கூறப்பட்டுள்ள அதிபரவளைய வளர்ச்சி மாதிரியோடு பொருந்துகிறது என்பதை கவனிக்கவும். இருந்தாலும், இந்த நூற்றாண்டில் மற்றொரு இரட்டிப்பு நிகழாது.[54]

மக்கள்தொகை இரட்டிப்பாகும் ஆண்டுகள்
500 மில்லியனில் ஆரம்பித்து
மக்கள்தொகை
(பில்லியன்களி்ல்)
0.5 1 2 4 8
ஆண்டு 1500 1804 1927 1974 2025
கடந்த ஆண்டுகள் 304 123 47 51
375 மில்லியனில் ஆரம்பித்து
மக்கள்தொகை
(பில்லியன்களில்)
0.375 0.75 1.5 3 6
ஆண்டு 1171 1715 1881 1960 1999
கடந்து விட்ட ஆண்டுகள் 544 166 79 39

பிரதேசவாரியாகப் பங்கீடு

மக்கள் தொகை எண்ணிக்கை 5.6 பில்லியனாக இருக்கும் போது, 1994 ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை அடர்த்தி வரைபடம், குறுகிய ஒப்பளவில்; இந்தோ-கங்கை, வடக்கு சீன சமவெளிகள், சிசுவன்ஆற்றுப் பெருநிலம், நைல் நதி முகத்துவாரம், தென் ஜப்பான், மேற்கு ஐரோப்பா, ஜாவா மற்றும் பாஸ்டன் - வாஷிங்டன் தாழ்வாரத்தில் அதிக அடர்த்தியை கவனிக்கவும்.

ஏறக்குறைய 3.8 பில்லியன் மக்களுடன் ஆசியா உலக மக்கள்தொகையில் 60 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் 12 சதவிகிதம் ஆன 1 பில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்கா தொடர்கிறது. ஐரோப்பாவின் 731 மில்லியன் மக்கள் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 11 சதவிகிதம் ஆகும். வட அமெரிக்கா 514 மில்லியனுக்கும் (8%), தென்னமெரிக்கா 371 மில்லியனுக்கும் (5.3%) மற்றும் ஆஸ்திரேலியா 21 மில்லியனுக்கும் (0.3%) இருப்பிடமாகும்.

மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்

பிரதேச வாரியாக மக்கள் தொகை, 2007
மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பதினாறு நாடுகள்:
தர எண் நாடு / இடப்பகுதி மக்கள் தொகை தேதி %உலக மக்கள் தொகையின் விழுக்காடு ஆதாரம்
1  மக்கள் சீன குடியரசு[55] 1,43,76,60,000 சனவரி 24, 2025 17.47% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (சீனா) பரணிடப்பட்டது 2003-12-04 at the வந்தவழி இயந்திரம்
2  இந்தியா 1,40,71,60,000 சனவரி 24, 2025 17.1% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (இந்தியா)
3  ஐக்கிய அமெரிக்கா 35,08,95,000 சனவரி 24, 2025 4.26% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (அமெரிக்கா)
4  இந்தோனேசியா 231,369,500 2.81% (இந்தோனேசியா புள்ளிவிவரம்) பரணிடப்பட்டது 2010-01-08 at the வந்தவழி இயந்திரம்
5  பிரேசில் 21,85,67,000 சனவரி 24, 2025 2.66% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (பிரேசில்)
6  பாக்கித்தான் 21,51,23,000 சனவரி 24, 2025 2.61% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (பாக்கித்தான்) பரணிடப்பட்டது 2010-01-12 at the வந்தவழி இயந்திரம்
7  வங்காளதேசம் 162,221,000 2009 1.97% ஐக்கிய நாடுகள் மதிப்பீடு
8  நைஜீரியா 154,729,000 1.88% ஐக்கிய நாடுகள் மதிப்பீடு
9  உருசியா 141,927,297 January 1, 2010 1.73% ரசியா புள்ளிவிவரம் பரணிடப்பட்டது 2022-03-31 at the வந்தவழி இயந்திரம்
10  சப்பான் 127,530,000 December 1, 2009 1.55% யப்பான் புள்ளிவிவரம்
11  மெக்சிக்கோ 107,550,697 1.31% மெக்சிகோ மதிப்பீடு

National Population Statistics of Mexico பரணிடப்பட்டது 2011-05-26 at the வந்தவழி இயந்திரம்[56]

12  பிலிப்பீன்சு 92,226,600 Mid-2009 1.12%

பில்லிபைன்ஸ் புள்ளிவிவரம் பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்

13  வியட்நாம் 85,789,573 April 1, 2009 1.04% வியட்நாம்
14  செருமனி 81,882,342 March 31, 2009 1% ஜெர்மனி புள்ளிவிவரம்
15  எதியோப்பியா 79,221,000 July 2008 0.96%

எதியோபியா பரணிடப்பட்டது 2008-11-18 at the வந்தவழி இயந்திரம்

16  எகிப்து 10,10,56,000 சனவரி 24, 2025 1.23% அதிகாரபூர்வமான மக்கள் தொகை கடிகாரம் (எகிப்து) பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்

இந்த பதினாறு நாடுகளில் தோராயமாக 4.54 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பிப்ரவரி 2009 ஆண்டின் போது உள்ளபடியான மக்கள்தொகையில் இது ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்காகும் (66.7 சதவிகிதம்)

மிக அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் 10 நாடுகள்/பிரதேசங்கள்
தரவரிசை நாடு/பிராந்தியம் மக்கள்தொகை பரப்பளவு (கிமீ2) அடர்த்தி (ஒரு கிமீ2-ல் மக்கள்தொகை) குறிப்புகள்
1 மொனாகோ மொனாகோ 32,719 1.95 16,779 [57]
2 சிங்கப்பூர் சிங்கப்பூர் 4,620,657 707.1 6,535
3 வத்திக்கான் நகர் வாடிகன் நகரம் 824 0.44 1,873 [58]
4 மாலைத்தீவுகள் மாலைதீவுகள் 385,375 298 1,293
5 மால்ட்டா மால்ட்டா 404,032 316 1,279
6 பகுரைன் பஃரேய்ன் 723,967 665 1,089 [59]
7 வங்காளதேசம் வங்காள தேசம் 157,813,124 147,570 1,069 [60]
8 பலத்தீன் நாடு பாலஸ்தீனிய நிலப்பகுதிகள் 4,223,760 6,020 702
9 நவூரு நவூரு 13,918 21 663
10 தாய்வான் தைவான் 22,955,395 36,190 634 [58]
ஒட்டுமொத்த மக்கள்தொகை (29 மில்லியன் மக்களுக்கும் மேல்) மற்றும்
மக்கள்தொகை அடர்த்தி (ஒரு சதுர கிலோமீட்டரில் 310 மக்கள்) ஆகிய இரண்டின் அடிப்படையில் முதல் 40 இடத்திலிருக்கும் நாடுகள்:
நாடு மக்கள்தொகை அடர்த்தி (ஒரு கிமீ2 - ல் மக்கள்தொகை) குறிப்புகள்
இந்தியா 1,198,003,000 352.9 மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாவது மிகப்பெரிய நாடு
வங்காள தேசம் 157,813,124 1,069.0 மிகப்பெரிய வேகமாக வளரும் நாடு
ஜப்பான் 127,170,110 336.5 குறையும் மக்கள் தொகை
பிலிப்பைன்ஸ் 93,843,460 312.8 வேகமாக வளரும் நாடு
தென் கொரியா 49,354,980 493.4 நிலையான மக்கள் தொகை

மக்களினம்

இந்த உலகம் ஆயிரக்கணக்கான இனப்பிரிவுகளால் ஆனது. உலக மக்கள் தொகையில் 19.73% அளவைக் கொண்டிருக்கும் ஹன் சீனர்கள் இந்தக் கோளின் மீதுள்ள தனித்த மிகப்பெரிய இனப்பிரிவினர் ஆவார்கள்.[சான்று தேவை]

இளைஞர்கள் பற்றிய மக்கள்தொகை புள்ளிவிவரம்

சிஐஏயின் உலக மெய்நிகழ்வு நூலின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 27 சதவீதத்தினர் 15 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் ஆகும்.[61]

இறப்பு விகிதத்தைச் சேர்ப்பதற்கு முன், 1960 ஆண்டுகளில் பிறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்ததைப்போல் இல்லை என்ற கருத்து இருந்தாலும், 1990 ஆம் ஆண்டுகளில், குறிப்பாக 1995 ஆண்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் உலக அளவில் பிறப்புகள் மிக அதிகமாக உயர்ந்தது. உண்மையில், உலக மக்கள் தொகை ஆறு பில்லியனை 2000 ஆம் ஆண்டில் எட்டும் என்று பத்தாண்டுகள் முன்னரே யூகித்து இருந்தாலும், 1999 ஆண்டில் உலக மக்கள் தொகை அதை எட்டியபோது, 1995 ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு வருடமும் 163 பில்லியன் குழந்தை பிறப்புகளால், அடுத்த 109ஐ மிகவும் குறைந்த நேரத்தில் துரித வேகத்தில் அடைந்தது. (பன்னிரண்டு ஆண்டுகள் மட்டும்). 9 முதல் 18 வயது வரம்பில் உள்ளவர்கள் இன்று இந்த பிறப்புகளை ஈடு செய்கிறார்கள். மேலும் அவர்கள் கடந்த Y தலைமுறைக் குழுவிலிருந்தோ அல்லது Z தலைமுறை குழுவிலிருந்தோ வந்தவர்கள்.

உலக வரலாற்றில் அதிவேக வருடாந்திர மக்கள்தொகை மாற்றத்தை உடைய காலகட்டத்தை 1985-1990 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தைக் குறித்தன. 1980 ஆண்டுகளின் இடை மற்றும் இறுதி ஆண்டுகளில் இருந்ததை விட 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் அதிக வளர்ச்சி வீதம் இருந்தாலும், 1990 ஆண்டில் எக்காலத்திற்குமான வளர்ச்சி மாற்றமாக 80 மில்லியனைக் கொண்டு, 5 வருட காலங்களில் மக்கள் தொகை மாற்றம் கிட்டதட்ட 83 மில்லியன் மக்களையே சுற்றி வந்தது. 1980 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமானது திடீரென்ற மக்கள் தொகை மாற்றத்திற்கான காரணியல்ல என்ற பொருளுடையதாக, 1980 ஆண்டுகளின் இடையில் மற்றும் இறுதியில் உலக மக்கள்தொகை 1960 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்ததை விட (கிட்டதட்ட 3 பில்லியன்) மிக அதிகமாக (கிட்டதட்ட 5 பில்லியன்) இருந்ததென்பதே இதன் காரணமாகும். 19 முதல் 24 வயதுடைய மக்களே இவ்வகைப் பிறப்புகளை ஈடு செய்கிற Y தலைமுறையின் பகுதியுமாவார்கள்.

முன்னறிவிப்பு

ஐ.நா (நடுத்தர திரிப்புரு, 2008 ஆண்டில் திருத்தியது) மற்றும் யுஎஸ் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம் (ஜனவரி 2010) மதிப்பீடுகள்
[62][63]
ஆண்டு ஐக்கிய நாடுகள் மதிப்பீடு
(மில்லியன்களில்)
வேறுபாடு யுஎஸ் மதிப்பீடு
(மில்லியன்களில்)
வேறுபாடு
2000 6,115 - 6,084 -
2010 6,909 794 6,831 747
2020 7,675 766 7,558 727
2030 8,309 634 8,202 644
2040 8,801 492 8,749 547
2050 9,150 349 9,202 453

காலப்போக்கில், உலகின் எதிர்கால மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊகித்தல் மிகவும் கடினமானதாக இருப்பதுடன், யூஎன் மற்றும் யூஎஸ் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செயலகங்கள் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன. உலக மக்கள்தொகையானது, இரண்டாவதின் கணக்குப்படி ஜூலை 2012[64] ஆண்டில் அல்லது யூஎன்னின் ஊகத்தின்படி 2011 ஆண்டின் இறுதியில் 7 பில்லியனை எட்டும்.

சராசரியாக பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகிறது என்றாலும், வளர்ந்த நாடுகள் (இங்கு பிறப்பு விகிதங்கள் பெரும்பாலும் பதில்வைப்பு நிலையில் அல்லது அதற்குக் கீழே உள்ளன), வளரும் நாடுகள் மற்றும் வெவ்வேறு இனங்கள் ஆகியவற்றுக்கிடையில் பெரிதும் வேறுபடுகிறது. நோய், போர்கள் மற்றும் பேரழிவுகள் அல்லது மருத்துவ முன்னேற்றம் போன்றவற்றால் இறப்பு விகிதங்கள் எதிர்பாராத வகையில் மாறக்கூடும்.

ஐக்கியநாடுகள் அமைப்பு பல ஊகங்களின் அடிப்படையில் எதிர்கால மக்கள் தொகை பற்றிய பலதரப்பட்ட கருத்துருக்களை வெளியிட்டுள்ளது. 2050 ஆண்டில் நடுப்பகுதி மதிப்பீட்டை 273 மில்லியன் அளவிற்கு ஏறுமுகமாக புதுப்பித்து மார்ச் 14, 2007 ஆண்டில் 2006 ஆண்டின் திருத்தம் வெளியிடப்படும்வரை, கடந்த 10 வருடங்களில் யூஎன் இந்த கருத்துருக்களைத் தொடர்ச்சியாக கீழ்முகமாகப் புதுப்பித்துள்ளது.

சில காட்சியமைப்புகளில் பெருகும் மக்கள் தொகையின் அரிதான வளங்களுக்கான தேவைகளால் ஏற்படும் அழிவுகள் காலப்போக்கில் திடீர் மக்கள் தொகை வீழ்ச்சி அல்லது மால்த்தசிய பேரழிவுக்குக் கூட வழிகோலும் (மேலும் பார்க்கவும் மிகுதியான மக்கள் தொகை மற்றும் உணவுப்பாதுகாப்பு)

யூஎன் 2008 மதிப்பீடுகள் மற்றும் நடுத்தர திரிபுருபு கருத்துருக்கள் (மில்லியன்களில்)
[33]
ஆண்டு உலகம் ஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பா லத்தீன் அமெரிக்கா வட அமெரிக்கா ஓஷியானா
2000 6,115 3,698 (60.5%) 819 (13.4%) 727 (11.9%) 521 (8.5%) 319 (5.2%) 31 (0.5%)
2005 6,512 3,937 (60.5%) 921 (14.1%) 729 (11.2%) 557 (8.6%) 335 (5.1%) 34 (0.5%)
2010 6,909 4,167 (60.3%) 1,033 (15.0%) 733 (10.6%) 589 (8.5%) 352 (5.1%) 36 (0.5%)
2015 7,302 4,391 (60.1%) 1,153 (15.8%) 734 (10.1%) 618 (8.5%) 368 (5.0%) 38 (0.5%)
2020 7,675 4,596 (59.9%) 1,276 (16.6%) 733 (9.6%) 646 (8.4%) 383 (5.0%) 40 (0.5%)
2025 8,012 4,773 (59.6%) 1,400 (17.5%) 729 (9.1%) 670 (8.4%) 398 (5.0%) 43 (0.5%)
2030 8,309 4,917 (59.2%) 1,524 (18.3%) 723 (8.7%) 690 (8.3%) 410 (4.9%) 45 (0.5%)
2035 8,571 5,032 (58.7%) 1,647 (19.2%) 716 (8.4%) 706 (8.2%) 421 (4.9%) 46 (0.5%)
2040 8,801 5,125 (58.2%) 1,770 (20.1%) 708 (8.0%) 718 (8.2%) 431 (4.9%) 48 (0.5%)
2045 8,996 5,193 (57.7%) 1,887 (21.0%) 700 (7.8%) 726 (8.1%) 440 (4.9%) 50 (0.6%)
2050 9,150 5,231 (57.2%) 1,998 (21.8%) 691 (7.6%) 729 (8.0%) 448 (4.9%) 51 (0.6%)

மக்கள் தொகை வளர்ச்சி அடிப்படையிலான ஊகங்கள்

1798 ஆம் ஆண்டில், தாமஸ் மால்த்தஸ் 19 ஆம் நூற்றாண்டின் நடுவில் மக்கள் தொகை உணவளிப்பை விட மிகுந்து விடும் என தவறாக ஊகித்தார். 1968 ஆம் ஆண்டில் தி பாபுலேசன் பாம் (மக்கள்தொகை வெடிகுண்டு) என்ற புத்தகத்தில் 1970 ஆண்டுகள் மற்றும் 1980 ஆண்டுகளில் வறட்சி ஏற்படும் என்று முன்னுணர்ந்தார், பால் ஆர். எர்லிக் இந்த வாக்குவாதத்தை விட்ட இடத்தில் தொடர்ந்தார். எர்லிக் மற்றும் பிற நியோ-மால்தசியன்களின் கடுமையான ஊகங்களைப் பல பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக ஜூலியன் லிங்கன் சைமன் மிகத் தீவிரமாக மறுத்தார். விவசாய ஆராய்ச்சிகள் காரணமாக பசுமைப் புரட்சி ஏற்பட்டு பயிர் விளைச்சலில் வியத்தகு முன்னேற்றங்களை ஏற்படுத்தின. உணவு உற்பத்தி, மக்கள் தொகை பெருக்கத்துடன் இணைவேகத்தில் இருந்துள்ளதென்றாலும், பசுமைபுரட்சியானது அதிக அளவில் பெட்ரோலிய அடிப்படையிலான உரங்களைச் சார்ந்தே உள்ளன என்றும் பயிர் குறைபாடு பரவலாகி விடும்படியாக பல பயிர்கள் மரபியலில் ஒரே மாதிரியானவையாகி விட்டன என்றும் மால்த்தசியன்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டை எவ்விடத்திலும் பரவச் செய்கின்றன.[65]

உலகம் முழுவதும் 1950 முதல் 1984 வரை பசுமைப் புரட்சி விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் தானிய உற்பத்தி 250 % அதிகரித்தது.[66] பசுமைப் புரட்சி ஆரம்பித்ததிலிருந்து உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 4 பில்லியன் அதிகரித்தது. மேலும், இந்த புரட்சி இல்லாவிட்டால் தற்போது யூஎன் ஆவணப்படுத்தியுள்ளதைக் (உத்தேசமாக 850 மில்லியன் மக்கள் 2005 ஆம் ஆண்டில் நீடித்த ஊட்டச்சத்துகுறைபாட்டால் அவதிப்படுகின்றனர்) காட்டிலும் மிகப்பெரிய பஞ்சமும் ஊட்டச்சத்து குறைபாடும் இருந்திருக்குமென்று பலர் நம்புகின்றனர்.[67] பசுமைப் புரட்சிக்குத் தேவையான ஆற்றல் உரங்கள் (இயற்கை வாயு), தீங்குயிர்க்கொல்லி (எண்ணெய்) ஆகியவற்றின் வடிவிலான படிம எரிபொருட்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன்-எரிபொருளைப் பயன்படுத்தும் நீர்ப்பாசனம் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.[68]

உலக எண்ணெய் உற்பத்தி உச்சத்தை எட்டியது (உச்ச எண்ணெய்) மால்த்தஸ் மற்றும் எர்லிக்கின் விமரிசகர்களைச் சோதித்தது.[69][70] 2008 ஆம் ஆண்டில், மே நிலவரப்படி, உயிரி எரிபொருளில்[71] பயன்படுத்துவதற்காக அதிகரித்த வேளாண்மையினால் தானிய விலை உயர்ந்தது, உலக எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய் ($880/m3)[72] 140$ க்கு மேல், உலக மக்கள்தொகை பெருக்கம்,[73] பருவநிலை மாற்றங்கள்,[74] குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டிற்காக விவசாய நிலங்கள் இழப்பு,[75][76] மற்றும் சீனாவிலும் இந்தியாவிலும் வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை.[77][78] உலகெங்கிலும் சில நாடுகளில் அண்மையில் உணவுப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.[79][80][81]

வளரும் மக்கள்தொகை, வீழ்ந்துகொண்டிருக்கும் எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் "பூரணமான புயலை" உருவாக்கும் என்று யூகே அரசின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார். உணவு கையிருப்பு 50 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், 2030 ஆம் ஆண்டிற்குள் உலகத்தற்கு 50% அதிக ஆற்றல், உணவு மற்றும் நீர் தேவைப்படும் என்று அவர் கூறினார்.[82][83] உலகம் 2050 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கும் மிகுதியான 2.3 பில்லியன் மக்களுக்கு உணவளிப்பதற்காகவும், மேலும் வருமானங்கள் அதிகரிக்கும்போதும் 70% அதிக உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.[84]

2007 ஆம் ஆண்டில் கண்காணித்த எண்ணிக்கை உலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிப்புற்ற மக்களின் முழுமையான எண்ணிக்கையின் உண்மையான அதிகரிப்பைக் காட்டுகிறது, 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு எதிராக 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியன்[85]; மிக சமீபத்திய எஃப்ஏஓ மதிப்பீடு, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.[86]

இதுவரை வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை

இதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களுள் 75% மக்கள் 1970 ஆண்டுகளில் உயிரோடு இருந்தனர் என்று 1970 ஆண்டுகளில் இருந்த மக்கள் கொண்ட பிரபலமான நம்பிக்கை ஆகும். அப்படி இருந்தால், 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்களின் தொகை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகையை விடக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாததால், அந்த நம்பிக்கை வெறும் ஒரு வெளித்தோற்றமே என்பது தெரிகிறது.[87] 1995 ஆண்டில் மக்கள்தொகை சான்றாதார குழுவைச் சார்ந்த கார்ல் ஹாப் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய ஒரு ஆண்டில் மதிப்பீட்டைத் தயாரித்தார் மேலும் அவ்வறிக்கை 2002 ஆம் ஆண்டில் நிலை நிறுத்தப் பெற்றது; அதன்படியான எண்ணிக்கை தோராயமாக 106 பில்லியன் ஆகும்.[88][89]"பண்டைய முதல் தற்போதைய வரையிலான காலத்தின் வெவ்வேறு கட்டங்களுக்கான மக்கள்தொகை அளவைத் தேர்ந்தெடுத்தலும், ஒவ்வொரு காலத்திற்கும் அனுமானித்த பிறப்பு விகிதங்களைப் பயன்படுத்துதலும்" தேவைப்படும் ஒரு மதிப்பீடாக இவ்வெண்ணிக்கையை ஹாப் வர்ணிக்கிறார்.[89] 2002 ஆம் ஆண்டில் மதிப்பிட்ட உலகளாவிய மக்கள்தொகை 6.2 பில்லியன் என்று எடுத்துக்கொண்டால், இதுவரை வாழ்ந்துள்ள அனைத்து மக்களில் கிட்டதட்ட 6 சதவீதத்தினர் 2002 ஆம் ஆண்டில் உயிரோடு இருந்ததாக உய்த்துணரலாம்.[88]

இது வரை வாழ்ந்ததாகக் கருதும் மொத்த மக்களின் எண்ணிக்கை தோராயமாக 100 பில்லியன் முதல் 115 பில்லியன் வரை இருக்கலாம் என பிற கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. பின்வரும் காரணங்களால் இவற்றை மதிப்பிடுவது கடினமாகும்:

  • ஒரு மனிதனை வரையறுத்து, முற்காலத்தைய ஹோமோ சேப்பியன் இனத்தவரை அதற்கும் முன்பிருந்தவர்களிடமிருந்து அல்லது தொடர்புடைய இனங்களிடமிருந்து வேறுபடுத்தும் சிறப்பியல்புகளின் தொகுப்பு தீவிர ஆராய்ச்சிக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாகத் தொடர்கிறது. இதனால், எண்ணிக்கையை எப்போது தொடங்குவது என்பதையும் எந்த உயர்நிலை விலங்கினத்தை சேர்த்துக் கொள்வது என்பதையும் அறிவது சாத்தியமல்ல. இது சம்பந்தமாக குவியல் முரண்பாட்டையும் பார்க்கவும். அறிவியல் சமுதாயம் மனிதர்களை வேறுபடுத்தும் குணாதிசயங்கள் குறித்த பரந்த உடன்பாட்டை அடைந்தாலும், படிமப் பதிவுகள் மிகவும் அபூர்வமானவையாக இருப்பதால், அவர்களின் முதல் தோன்றலின் காலத்தை, அதன் ஆயிரம் ஆண்டுக்காலத்தின் நெருக்கத்தில் கூட குறிப்பிட்டுக் காட்டுவது ஏறத்தாழ இயலாத செயலாகும்.

பண்டைய மனிதர்களின் பல் அல்லது விரற்கணு எலும்பை விடப் பெரிதானவையாக இல்லாத ஒரு சில ஆயிரம் படிமங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த எலும்புத் துண்டுகள் கண்டங்கள் முழுவதும் பரவியிருந்த மில்லியன் கணக்கான பண்டைய மனிதர்களின் மக்கள்தொகைப் பங்கீட்டை புற மதிப்பீடு செய்யப் பயன்பட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய அளவோடு ஒப்பிடுகையில், பண்டைய காலத்தின் வரையறுத்த மக்கள் தொகை அளவு, நிச்சயமின்மையின் இந்த ஆதாரத்தை வரையறுத்த முக்கியத்துவம் உடையதாகும்.

  • கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கான வலுவான புள்ளியியல் தரவுகள் மட்டுமே உள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, சில அரசாங்கங்கள் மட்டுமே துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்துள்ளன. முந்தைய பல முயற்சிகளில், பண்டைய எகிப்து மற்றும் பாரசீகப் பேரரசு போன்றவற்றில் வரி விதிப்பிற்காகவும் அல்லது இராணுவ சேவைகளுக்காகவும் மக்களின் ஒரு உட்கணத்தை மட்டும் எண்ணுவதில் கவனம் செலுத்தியது.[90] 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்பான மக்கள்தொகை அளவுகள் பற்றிய உரிமைக்கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடுகள், மற்றும் இதனால் இதுவரை வாழ்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கையின் பிழையின் விடுமிகை பில்லியன்கணக்கான அல்லது பதின்மடங்கு பில்லியன்கணக்கான மக்களாக இருக்கும்.
  • கணக்கிடுதலுக்கு ஒரு இக்கட்டான அம்சம் ஆயுள் எதிர்பார்ப்பு. இருபது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையையும் மேற்கண்ட மக்கள்தொகைக் கணிப்பையும் பயன்படுத்தி ஒருவர் ஐம்பத்தி எட்டு பில்லியன் என்று கணக்கிடலாம். நாற்பது ஆண்டுகளுக்கான எண்ணிக்கையைப் பயன்படுத்துதல் அதில் பாதியை அளிக்கும். முற்காலங்களில் கணக்கிடுவதற்குக் கடினமான எண்ணிக்கையான பிறந்து ஓராண்டுக்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, ஆயுள் எதிர்பார்ப்பு பெருவாரியாக மாறுபடுகிறது. "மனிதகுல வரலாற்றின் பெரும்பகுதியில் பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு அநேகமாக சராசரியாக பத்தாண்டுகளாக மட்டுமே உள்ளது" என்று ஹாப் கூறினார்.[89] இளஞ்சிறார் இறப்புக்கணக்கு பற்றிய அவரது கணிப்பு, இதுவரை வாழ்ந்தவர்களுள் 40 சதவீதத்தினர் ஓராண்டுக்கு மேல் உயிர் வாழவில்லை என்று அறிவுறுத்துகிறது.

மேலும் காண்க

  • பிறப்பு கட்டுப்பாடு
  • மரபார்ந்த மக்கள் தொகையியல்
  • மக்கள்தொகை புள்ளிவிவர நிலைமாற்றம்
  • மக்கள் தொகைக் குறைப்பு
  • அனைத்தொடிவுநாள் விவாதம்
  • நாகரீகத்தின் முடிவு
  • குடும்பக் கட்டுப்பாடு
  • உணவு பாதுகாப்பு
  • ஐரோப்பாவுடனான வெளிநாட்டு தொடர்புகள்
  • பசுமைப் புரட்சி
  • வரலாற்று மக்கள்தொகையியல்
  • ஆயுள் எதிர்பார்ப்பு
  • மதம் சார்ந்த மக்கள்தொகை பட்டியல்
  • கடந்தகால மற்றும் எதிர்கால மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்
  • மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
  • மக்கள்தொகை அடர்த்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
  • மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
  • கருவுறுதல் வீதத்தின்படி நாடுகளின் பட்டியல்
  • கல்வியறிவு (மக்கள் தொகை வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்பட்டது)

  • பஞ்சங்களின் பட்டியல்
  • வரலாற்று இடைகாலத்து மக்கள்தொகையியல்
  • பெருநகரம்
  • பிறப்பு கோட்பாடு
  • ஒரு குழந்தைக் கொள்கை
  • மிகுதியான மக்கள்தொகை
  • பரவல் தொற்று
  • தலை விகிதம்
  • மக்கள்தொகைக் கட்டுப்பாடு
  • மக்கள்தொகை வளர்ச்சி
  • மக்கள்தொகை சான்றாதார செயலகம்
  • மனிதர்கள், நாகரிகம், மனிதர்கள், மற்றும் பூமிக்கு வரும் இடர்கள்
  • சமுதாய வீழ்ச்சி
  • ஆறு பில்லியனின் நாள்
  • உலகின் மிகப்பெரிய நகரங்கள்
  • உலக மக்கள்தொகை மதிப்பீடுகள்
  • 2007-2008 உலக உணவு விலை நெருக்கடி

கூடுதல் ஆதாரங்கள்

  • ஒவ்வொரு நாட்டையும் அதன் மக்கள்தொகை அளவிற்கு ஏற்ப வெளிப்படுத்தும் வகையில் மறுஅளவீடு செய்து உருவாக்கிய ஒரு வரைபடம் உள்ளது. இது ஷெஃப்பீல்டு வோர்ல்டுமேப்பர் பல்கலைகழகத்தில் கிடைக்கப்பெறும்.[91]
  • மக்கள்தொகை உருப்படிமங்கள் மற்றும் போக்குகள் ஆகியவை ஜியோஹைவ் எதிர் செயலாற்று உலக தேசப்படப்புத்தகத்தில் ஆராயப்படுகின்றன.[92]

பார்வைக் குறிப்புகள்

  1. உலக மக்கள் தொகை மதிப்பீடுகள்
  2. உலக மக்கள் தொகை கடிகாரம் - வேர்ல்டோமீட்டர்கள்
  3. சர்வதேச தரவுதளம்(ஐடீபி) — உலக மக்கள் தொகை
  4. http://www.interacademies.net/?id=3547
  5. "ரோமானிய பேரரசின் மக்கள் தொகை மதிப்பீடுகள்", டாக்டர்.கென்னத் டபிள்யூ. ஹார்ல்
  6. "Plague, Plague Information, Black Death Facts, News, Photos – National Geographic". Science.nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
  7. "ஐரோப்பாவின் வரலாறு - மக்கள் தொகையியல் மற்றும் விவசாய வளர்ச்சி". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.
  8. "Historical Estimates of World Population". Census.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
  9. "மானுடத் துன்பியல் - மற்றும் பொருளாதார புத்தாக்கத்தில் ஐரோப்பாவின் கருப்பு மரணம் ஒரு வரலாற்றுப் பாடம் ஆகும்.". டைம், ஐரோப்பா. ஜுலை 17, 2000 தொகுதி 156 எண். 3
  10. மிங் வம்சம் பரணிடப்பட்டது 2009-01-26 at the வந்தவழி இயந்திரம். மைக்ரோசாப்ட் என்கர்டா நிகழ்நிலை கலைக்களஞ்சியம் 2009.
  11. "குவிங் சீனாவின் உள்ளமைந்த நெருக்கடிகள்: நிலப்பற்றாக்குறை, பஞ்சம், நாட்டுப்புற வறுமை". கல்வியாளர்களுக்காக ஆசியா, கொலம்பியா பல்கலைகழகம்
  12. "ஐரோப்பிய வரலாறு - மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.
  13. "சீனாவின் மக்கள் தொகை: அளவீடுகளும் வரைபடங்களும் பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்". கொலம்பியா பல்கலைகழகம், கிழக்கு ஆசிய பாடதிட்ட திட்டப்பணி.
  14. [1] கொலம்பியா பரிமாற்றம்{/1. வடக்கு கரோலினா பல்கலைக்கழகம்
  15. [31] ^ மக்காச்சோள இழைவரி தீநுண்ம-தடுப்பாற்றலுடைய மரபணுமாற்ற மக்காச்சோளம்:ஆப்பிரிக்கப் பிரச்சினைக்கான ஆப்பிரிக்கத் தீர்வு. சயிட்டிசன். ஆகஸ்ட் 7, 2007
  16. "புதிய உலகில் ஆப்ரிக்காவிற்குச் சுவையூட்டல், எழுதியவர்,ராபர்ட் எல். ஹால்" பரணிடப்பட்டது 2010-05-21 at the வந்தவழி இயந்திரம். மில்லர்ஸ்வில்லே பல்கலைகழகம்
  17. "... பெரியம்மை – மற்றும் பிற கொடிய ஐரோப்பாசிய கிருமிகளின் கதை". பொது ஒலிபரப்பு சேவை (பிபீஎஸ்).
  18. "ஸ்டேசி கூட்லிங், "புதிய உலகில் வசிப்பவர்கள் மீது ஐரோப்பிய நோய்களின் தாக்கங்கள்" பரணிடப்பட்டது 2008-05-10 at the வந்தவழி இயந்திரம்"
  19. வரலாற்றில் மக்கள்தொகை நெருக்கடிகள் மற்றும் சுழற்சிகள் பரணிடப்பட்டது 2011-04-05 at the வந்தவழி இயந்திரம். கிளேர் ரசல் மற்றும் டபிள்யூ.எம்.எஸ். ரசல் ஆகியோரின் மக்கள் தொகை பிரச்சனைகள் மற்றும் மக்கள் தொகை சுழற்சிகள் என்ற புத்தகத்தின் திறனாய்வு.
  20. மேபிள் சி. புயர், தொழில்துறை புரட்சியின் துவக்க நாட்களில் சுகாதாரம், செல்வம் மற்றும் மக்கள் தொகை , லண்டன்: ஜார்ஜ் ரூட்லெட்ஜ் & சன்ஸ், 1926, பக்கம் 30 ஐஎஸ்பிஎன் 0-415-38218-1
  21. பிபிசி - வரலாறு - எடுப்புப் பிள்ளை மருத்துவமனை.. பதிக்கப்பட்டது: 2001-05-01.
  22. "நவீனமயமாக்கல் - மக்கள் தொகை மாற்றம்". பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.
  23. "அமெரிக்க ஐக்கிய கூட்டரசு நாடுகள் மக்கள் தொகை பரணிடப்பட்டது 2009-10-29 at the வந்தவழி இயந்திரம்". மைக்ரோசாஃப்ட் என்கர்டா நிகழ்நிலைக் கலைக்களஞ்சியம் 2009.
  24. பிபிசி - வரலாறு - விக்டோரியன் மருந்து - எதிர்பாரா வெற்றியிலிருந்து கோட்பாடு வரை. பதிக்கப்பட்டது: 2002-02-01.
  25. "19ம் நூற்றாண்டு மருந்து[தொடர்பிழந்த இணைப்பு]". மைக்ரோசாப்ட் என்கர்டா நிகழ்நிலைக் கலைக்களஞ்சியம் 2009.
  26. 2031 ஆம் ஆண்டில் பிரிட்டனின் சித்திரம். தி இன்டிபெண்டன்ட் அக்டோபர் 24, 2007 *[17]
  27. "The UK population: past, present and future" (PDF). Statistics.gov.uk. பார்க்கப்பட்ட நாள் 2009-09-05.
  28. இந்தியாவை உலக பொருளாதாரத்துடன் மறுஒருங்கிணைத்தல் பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டு பொருளாதார பீட்டர்சன் நிறுவனம்.
  29. தெற்காசியாவில் நூற்றுக்கணக்கான மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் பிரச்சனையை சந்திக்கின்றனர், ஐக்கிய நாடுகள் அறிக்கை எச்சரிக்கை. ஐக்கியநாடுகள் செய்தி மையம். பிப்ரவரி 6, 2009
  30. ஜாவா (தீவு, இந்தோனேசியா). பிரிட்டானிகா கலைக்களஞ்சியம்.
  31. "துரோகிகளிலிருந்து வீரர்கள் வரை: 100 ஆண்டு கால மெக்சிகன் இடப்பெயர்ச்சி கொள்கைகள்". ஜோர்க் துராந்த், குவதலஜரா பல்கலைகழகம். மார்ச் 2004.
  32. "மக்கள்தொகை வெடிப்பு". தி நியூயார்க் டைம்ஸ். ஜனவரி 7, 2008
  33. 33.0 33.1 World Population Prospects பரணிடப்பட்டது 2010-01-07 at the வந்தவழி இயந்திரம்: The 2008 Revision Population Database
  34. "The World at". Un.org. 1999-10-12. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  35. "Population Growth over Human History". Globalchange.umich.edu. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  36. "Geo Hive: the population of continents, regions and countries (Jul. 1, 2008)". Xist.org. பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  37. 37.0 37.1 Figures include the former Soviet Union in Europe. Caselli, Graziella (2005-12-20). Demography: Analysis and Synthesis, Four Volume Set: A Treatise in Population. Academic Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-765660-1. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  38. 38.0 38.1 "UN report 2004 data" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-08-01.
  39. Fewer than 15,000 individuals, according to the தோபா எரிமலை வெடிப்பு; see also Humans lived in tiny, separate bands for 100,000 years பரணிடப்பட்டது 2009-02-14 at the வந்தவழி இயந்திரம். Breitbart.com.
  40. 40.0 40.1 40.2 an average of figures from different sources as listed at the US Census Bureau's Historical Estimates of World Population; see also *Kremer, Michael. 1993. "Population Growth and Technological Change: One Million B.C. to 1990," The Quarterly Journal of Economics 108(3): 681–716.
  41. The range of figures from different sources as listed at the US Census Bureau's Historical Estimates of World Population put the world population in AD 1 between 170 million and 400 million.
  42. "The population of continents, regions and countries". GeoHive, July 2010 data. Retrieved 2012-05-22.
  43. பசுமைப் புரட்சியின் வரம்புகள்?
  44. "உண்மையான பசுமை புரட்சி". Archived from the original on 2008-06-23. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  45. 2300ஐ நோக்கி உலக மக்கள்தொகை பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள், ஐக்கிய நாடுகள், 2004
  46. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு.அரசு
  47. நடப்பு உலக மக்கள்தொகை (தரவரிசைப்படுத்தப்பட்டது)
  48. ரான் நீல்சன், சிறிய பச்சை கையேடு , பிகாடர், நியூ யார்க் (2006) ஐஎஸ்பிஎன் 0-312-42581-3
  49. ஐக்கிய நாடுகள் 2006 அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
  50. "ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை மதிப்பீடுகளும் திட்டங்களும், தரவுதள வினவல், ஆகஸ்ட் 2009". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  51. ஹோயெர்னர், வான் எஸ். பிரிட்டிஷ் கோள்களினிடைவெளி சமூக சஞ்சிகை 28691 (1975)
  52. செர்கீ பி கபிட்சா. பரணிடப்பட்டது 2010-01-25 at the வந்தவழி இயந்திரம்உலக மக்கள் தொகை வளர்ச்சியின் இயற்காட்சியியல் கொள்கை. பரணிடப்பட்டது 2010-01-25 at the வந்தவழி இயந்திரம் இயற்பியல்-உஸ்பெகி 39(1) 57-71 (1996).
  53. "World Pop Clock Note".
  54. இயற்கைக்குக் கடிதம்: உலகின் மக்கள் தொகை இரட்டிப்பாதல் நடைபெறாது இயற்கை, 19 ஜூன் 1997
  55. Figure refers to Mainland China only. It excludes the special administrative regions and Taiwan.
  56. For the Conapo estimates, check under Republica Mexicana and press "Ver" for statistics.
  57. மொனாகோ அரசாங்கம் சிறிய நிலப்பரப்பிற்கான எண் இலக்கங்களைப் பயன்படுத்துவதால் அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 18,078 ஆக இருக்கிறது.
  58. 58.0 58.1 சிஐஏ உலக உண்மைச்செய்தி நூல் பரணிடப்பட்டது 2016-06-19 at the வந்தவழி இயந்திரம்.
  59. mohammed al a'ali (April 1, 2008), Population surge 'threat to economy', gulf Daily News, பார்க்கப்பட்ட நாள் 2008-04-21
  60. உலக வங்கி மேம்பாட்டு சுட்டிக்காட்டிகள் தரவு தளத்தின் சமீபத்திய எண்ணிக்கை 1090/கிமீ².
  61. உலகின் மக்கள் வயது கட்டமைப்பு பரணிடப்பட்டது 2010-01-05 at the வந்தவழி இயந்திரம் – 2006 சிஐஏ உலக மெய்நிகழ்வு நூல்
  62. "உலக மக்கள் தொகை எதிர்பார்ப்புகள் - 2008 மாற்றியமைவு மக்கள்தொகை தரவுதளம்". Archived from the original on 2010-01-07. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  63. யுஎஸ் மக்கள் தொகைத கணக்கெடுப்பு செயலகம் - உலகின் ஒட்டுமொத்த நடுஆண்டு மக்கள் தொகை: 1950-2050
  64. "Notes on the World POPClock and World Vital Events". US Census Bureau.
  65. "Assessing the global food crisis". BBC.
  66. Kindall, Henery W & Pimentel, David (May 1994). "Constraints on the Expansion of the Global Food Supply". Ambio. 23 (3). http://dieoff.org/page36.htm. பார்த்த நாள்: 2010-04-09. 
  67. பசுமைப் புரட்சியின் வரம்புகள்? பிபிசி செய்திகள். மார்ச் 29, 2007.
  68. "Eating Fossil Fuels". Energy Bulletin. Archived from the original on 2007-06-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  69. "Peak Oil: the threat to our food security". Soil Association.
  70. "Peak Oil And Famine: Four Billion Deaths". Countercurrents.
  71. "2008: The year of global food crisis". Sunday Herald. Archived from the original on 2008-03-12. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  72. "உலக தானிய குமிழி". Archived from the original on 2009-11-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  73. பருவ மாற்றத்திற்கு முன்பு உணவு நெருக்கடி ஏற்படும், முதன்மை விஞ்ஞானி எச்சரிக்கிறார்
  74. பருவகால மாற்றமும் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் பற்றுவதால் உலகளாவிய உணவுப் பஞ்சம் அச்சுறுத்துகிறது.
  75. நிபுணர்கள்: உலகளாவிய உணவுப் பஞ்சம் பல 'பத்தாண்டுகளுக்கு தொடரலாம்'
  76. நகரமயமாக்கல் விவசாய நிலங்கள் இழப்பை ஏற்படுத்தி விட்டதா?
  77. "உலகின் வளர்ந்துவரும் உணவு-விலை நெருக்கடி". Archived from the original on 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  78. உணவின் விலை: உண்மைச் செய்திகளும் எண் இலக்கங்களும். பிபிசி செய்திகள். அக்டோபர் 16, 2008
  79. தானியங்களுக்கான தேவைப்பாடு உணவுப் பொருள் விலைகளை மிக அதிகமாக உயர்த்துவதனால் கலவரங்களும் மற்றும் பட்டினிகளும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது
  80. ஏற்கனவே கலவரம், பதுக்கல், பீதி ஆகியவை நம்மிடம் உள்ளன: வரவிருப்பவைக்கான அறிகுறிகள்?
  81. உலகிற்கு உணவளியுங்கள்?நாம் தோற்றுகொண்டிருக்கும் போரில் சண்டையிடுகிறோம், ஐநா ஒப்புகொள்கிறது
  82. 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலகம் "பூரணமான புயல்" போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும், முதன்மை விஞ்ஞானிகள் எச்சரிக்கை. த கார்டியன். (மார்ச் 18, 2008).
  83. உலகளாவிய நெருக்கடி '2030 ஆம் ஆண்டு வாக்கில் தாக்கும்'. பிபிசி செய்திகள். மார்ச் 19, 2009
  84. 2050ம் ஆண்டு வாக்கில் கூடுதல் 2.3 பில்லியன் மக்களுக்காக உலகளாவிய உணவுத் தயாரிப்பு 70 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும். Finfacts.com. செப்டம்பர் 24, 2009
  85. உணவு மற்றும் வேளாண் அமைப்பு பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை. "உலகில் உணவு பாதுகாப்பின்மை நிலை,௨௦௦௮: அதிக உணவு விலைகள் மற்றும் உணவு பாதுகாப்பு - அச்சுறுத்தல்களும் வாய்ப்புகளும். ஐக்கிய நாடுகளின்உணவு மற்றும் வேளாண் அமைப்பு , 2008, ப. 2.
  86. "ஆறில் ஒரு பங்கு மானுட சமூகம் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது - முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு". ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, 2009
  87. "மக்கள்தொகைச் சான்றாதார செயலகம்". Archived from the original on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  88. 88.0 88.1 Curtin, Ciara (2007-03-01), "Fact or Fiction?: Living People Outnumber the Dead", Scientific American, Scientific American, Inc. (published September 2007), vol. 297, no. 3, p. 126, பார்க்கப்பட்ட நாள் 2008-08-04 குறிப்பு: தாளில் காணப்படும் வாசகங்கள், நிகழ்நிலையில் காணப்படும் வாசகங்களிலிருந்து சற்றே வேறுபடுகின்றன
  89. 89.0 89.1 89.2 Haub, Carl, "How Many People Have Ever Lived on Earth?" (PDF), Population Today, Population Reference Bureau, vol. 30, no. 8, pp. 3–4, archived from the original (PDF) on 2011-08-12, பார்க்கப்பட்ட நாள் 2008-08-04
  90. குர்ட், ஏ. (1995) தொன்மையான அண்மைக் கிழக்கு சி. 3000–330கிமு தொகுதி 2 ரூட்லெட்ஜ், லண்டன். ப. 695.
  91. "Worldmapper image". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.; "Worldmapper description". University of Sheffield. Archived from the original on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2010-04-09.
  92. உலக புள்ளிவிவர எதிர்ச் செயலாற்று உலக வரைபடம், ஜியோஹைவ்.

வெளிப்புற இணைப்புகள்

மக்கள்தொகை கடிகாரங்கள்
"https://tamilar.wiki/index.php?title=உலக_மக்கள்_தொகை&oldid=10430" இருந்து மீள்விக்கப்பட்டது