உலகம்மை
உலகம்மை | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | வி. ஜெயபிரகாஷ் |
தயாரிப்பு | வி. ஜெயபிரகாஷ் |
கதை | சு. சமுத்திரம் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கே. வி. மணி |
படத்தொகுப்பு | சுரேசு உர்சு |
கலையகம் | மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாதமி |
வெளியீடு | செப்டம்பர் 22, 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உலகம்மை (Ulagammai) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை வி. ஜெயப்பிரகாசு இயக்கி தயாரித்திருந்தார். கௌரி ஜி. கிசன், வெற்றி மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று வெளியானது.
திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பே படத்தின் பின்னணி இசையை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தது. இப்படம் தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற முதல் முயற்சியைக் குறிக்கிறது.[1][2]
நடிகர்கள்
- உலகம்மையாக கௌரி கிசன்
- லோகநாதனாக வெற்றி மித்ரன்
- அருணாவாக பிரணவ்
- மாரிமுத்து நாடாராக ஜி. மாரிமுத்து
- பலவேசம் நாடாராக ஜி. எம். சுந்தர்
- அருள்மணி
- கந்தராஜ்
- சாமி
- ஜேம்ஸ்
தயாரிப்பு
முன்னதாக சாதி சனம் (1997), காதல் எஃப்எம் (2005) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வி. ஜெயபிரகாஷ், குச்சி ஐஸ் என்ற தனது திரைப்படத்திற்கு பிந்தைய தயாரிப்புப் பணிகளை தாமதப்படுத்தி, 2021 இன் தொடக்கத்தில் உலகம்மை படத்தைத் தொடங்கினார். தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் உரிமையைக் கொண்டுவந்தார். சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே பிரபல நாவலை எழுத்தாளர் மனைவியிடமிருந்து பெற்று, கதையைச் சுற்றி ஒரு திரைக்கதையை உருவாக்கினார்.[3] கௌரி கிசன் முக்கிய வேடத்தில் நடித்தார். இளையராஜா படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு சூலை 2021 இல் திருநெல்வேலியில் தொடங்கியது.[4][5] படத்தின் தயாரிப்பு ஏப்ரல் 2022 இல் நிறைவடைந்தது [1]
ஒரு புதுமையான நடவடிக்கையாக, ஏப்ரல் 2022 இல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு முன்னதாக, படத்தின் பின்னணி இசையை படக்குழு வெளியிட்டது. தமிழ்த் திரைப்படங்களில் இதுவே முதல் முறை.[1][6]
வரவேற்பு
இப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாலை மலரின் ஒரு விமர்சகர், திரைப்படம் "ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான கதை" என்று குறிப்பிட்டு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[7] மின்னம்பலத்தைச் சேர்ந்த ஒரு விமர்சகர், படத்தில் இளையராஜாவின் பணியைப் பாராட்டினார்.[8]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Ilaiyaraaja's background score for Vijay Prakash's 'Ulagammai' released". 3 March 2022."Ilaiyaraaja's background score for Vijay Prakash's 'Ulagammai' released". Telangana Today. 3 March 2022.
- ↑ "K Bhagyraj releases the background score from 'Ulagammai' composed by Ilaiyaraaja".
- ↑ "Ulagammai: Gouri Kishan to feature in a period drama".
- ↑ "Ilaiyaraaja to compose music for Gouri Kishan's next Ulagammai".
- ↑ "Gouri Kishan in yet another period role! Ilayaraja to compose music!".
- ↑ "இளையராஜா இசையில் 'உலகம்மை'". 13 August 2021.
- ↑ "Ulagammai".
- ↑ "Ulagammai Tamil Movie Review by Minnambalam Cinema News".